• Follow NativePlanet
Share
» »கோயம்புத்தூரில் இருந்து அந்தமானுக்கு IRCTCயின் 5 இரவு 6 பகல் கொண்ட அசத்தலான சுற்றுலா பேக்கேஜ்!

கோயம்புத்தூரில் இருந்து அந்தமானுக்கு IRCTCயின் 5 இரவு 6 பகல் கொண்ட அசத்தலான சுற்றுலா பேக்கேஜ்!

பனை மரங்கள், சதுப்புநிலங்கள், வெள்ளை மணல், நீல நிற கடற்கரைகள் மற்றும் வெப்பமண்டல மழைக்காடுகளால் நிறைந்த 570 சிறு சிறு தீவுகளுடன் அந்தமான் நிக்கோபார் நம்மை வரவேற்கிறது. கடற்கரையோரம் ஓய்வு, பளபளக்கும் நீருக்கடியில் ஸ்நோர்கெல்லிங் மற்றும் ஸ்கூபா டைவிங், கோடை வெப்பத்தில் குளியல், வரலாற்று நிறைந்த பகுதிகளை சுற்றிப்பார்ப்பது என விடுமுறையை நீங்கள் கழிக்கலாம்.

IRCTC தன் பயணிகளுக்கு குறைந்த செலவில் மன நிறைவான சுற்றுலாவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு பல அரிய ஆஃபர்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் IRCTC வழங்கும் 5 இரவு 6 பகல் கொண்ட சொகுசு சுற்றுலாவில் நீங்கள் அந்தமானின் அழகை ஆராயலாம்! அந்த பேக்கேஜின் விலை மற்றும் மற்ற சுற்றுலா விவரங்கள் இதோ!

1

கோயம்புத்தூர் to அந்தமான் முழு பயணத்திட்டம்

முதல் நாள் - 09.09.2023

09.09.2023 அன்று கோயம்புத்தூரில் இருந்து காலை 08.05 மணிக்கு விமானம் மூலம் இந்த சுற்றுலா தொடங்குகிறது.

மதியம் 13:55 மணிக்கு போர்ட் பிளேரை அடைந்தவுடன் ஓய்வெடுக்க ஹோட்டலுக்கு அனுப்பப்படுவீர்கள்.

முதல் நாளே கார்பின்ஸ் கோவ் பீச் மற்றும் செல்லுலார் சிறைச்சாலையின் லைட் & சவுண்ட் ஷோவிற்கு செல்லுவீர்கள். இரவு உணவிற்கு பின்னர் ஹோட்டலில் தங்குவீர்கள்.

இரண்டாம் நாள் - 10.09.2023

காலை உணவிற்கு பிறகு பிரிட்டிஷ் ஆட்சியின் போது போர்ட் பிளேயரின் முந்தைய தலைநகரமாக இருந்த ரோஸ் தீவிற்கு சுற்றுலா செல்லுவீர்கள்.

விலிருந்து, கவர்ச்சியான பவளம், வண்ணமயமான மீன்கள் மற்றும் நீருக்கடியில் கடல்வாழ் உயிரினங்களை வழங்கும் நார்த் பே தீவுக்கு சென்று கண்ணாடி படகில் சுற்றிப் பார்த்துவிட்டு போர்ட் பிளேருக்கு திரும்பலாம். போர்ட் பிளேரில் இரவு உணவிற்க்கு இரவு தங்க வேண்டும்.

மூன்றாம் நாள் - 11.09.2023

காலை உணவுக்குப் பிறகு ஹேவ்லாக் தீவுக்கு கப்பலில் பயணம் செய்வீர்கள். அங்கிருந்து ஹோட்டலுக்கு சென்று தயார் ஆனவுடன், உலகப் புகழ்பெற்ற ராதாநகர் கடற்கரைக்கு செல்லுவீர்கள். பின்னர் ஹேவ்லாக் தீவில் இரவு தங்குவீர்கள்.

நான்காம் நாள் - 12.09.2023

அதிகாலை உணவுக்குப் பிறகு, காலாபதர் கடற்கரையைப் பார்வையிட்டுவிட்டு நீல் தீவிற்கு பயணிப்பீர்கள். ஹோட்டலுக்கு சென்று களைப்பாரியவுடன், லக்ஷ்மன்பூர் கடற்கரைக்குச் சென்று சூரிய அஸ்தமனத்தை காண்பீர்கள். நீல் தீவில் இரவு உணவு மற்றும் இரவு தங்குதல்.

ஐந்தாம் நாள் - 13.09.2023

அதிகாலை உணவுக்குப் பிறகு, ஹோட்டலில் இருந்து கிளம்பி இயற்கை பாலம் & பரத்பூர் கடற்கரையை ரசிப்பீர்கள். பின்னர் மாலையில் போர்ட் பிளேயருக்குச் சென்று இரவு உணவிற்கு பின்னர் அங்கேயே தங்குவீர்கள்.

ஆறாம் நாள் - 14.09.2023

அதிகாலை உணவுக்குப் பிறகு, ஹோட்டலில் இருந்து கிளம்பி போர்ட் பிளேர் விமான நிலையத்தை அடைந்து 14.25 மணி விமானத்தில் பயணித்து 20.55 மணிக்கு கோயம்புத்தூரை அடைவீர்கள்.

2

இந்த பேக்கேஜூடன் வரக்கூடியவை

1. எகானமி வகுப்பில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான டிக்கெட்டுகள் (கோவை-போர்ட் பிளேர்-கோவை).

2. குளிரூட்டப்பட்ட அறைகளில் தங்குமிடம் (போர்ட் பிளேரில் 03 இரவுகள், ஹேவ்லாக்கில் 01 இரவு மற்றும் நீல் தீவில் 01 இரவு)

3. குரூஸ் டிக்கெட்டுகள் (போர்ட் பிளேர்-ஹேவ்லாக்-நீல் தீவு-போர்ட் பிளேர்)

4. படகு டிக்கெட்டுகள் (ராஸ் தீவு & நார்த் பே தீவு)

5. சென்ட்ரல் ஜெயில் ஷோ டிக்கெட்டில் ஒலி & ஒளி ஷோ காட்சி.

6. SIC இல் AC வாகனத்தில் பயணத்திட்டத்தின்படி சுற்றிப் பார்ப்பது.

7. 5 காலை உணவு மற்றும் 5 இரவு உணவு.

8. IRCTC டூர் எஸ்கார்ட்டின் சேவைகள்.

9. டிரைவர் அலவன்ஸ், டோல், பார்க்கிங் மற்றும் மேற்கண்ட சேவைகளுக்கு பொருந்தக்கூடிய அனைத்து வரிகளும் GST இதில் அடங்கும்.

இந்த பேக்கேஜூக்கான கட்டணங்கள்

இந்த சுற்றுலா பேக்கஜில்பயணிக்க விரும்பும் தனி நபர் ரூ. 54,250 கட்டணமாக செலுத்த வேண்டும். அதுவே டபுள் ஷேரிங்கில் ரூ.41,150 ஆகவும், ட்ரிபிள் ஷேரிங்கில் ரூ.40,700 ஆகவும் வசூலிக்கப்படும். 5-11 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு படுக்கை வசதியுடன் கூடிய டிக்கெட் வேண்டுமென்றால் ரூ.36,150, படுக்கை வசதி வேண்டாமென்றால் ரூ.32,700 செலுத்த வேண்டும். 2-4 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு நீங்கள் ரூ. 28,050 கட்டணமாக செலுத்த வேண்டும்.

புக் செய்வது எப்படி?

மேலும் விவரங்களுக்கு https://www.irctctourism.com/pacakage_description?packageCode=SEA29 என்ற முகவரியைத் தொடர்பு கொள்ளவும். அல்லது IRCTCயின் மண்டல அலுவலகங்களை தொடர்பு கொள்ளவும்.

இந்த அசத்தலான வாய்ப்பை நழுவவிட்டுவிடாதீர்கள்!

More News

    Read more about: irctc indian railways
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+