Search
  • Follow NativePlanet
Share
» »சென்னைக்கு அருகில் தீவு பயணம் – சுடச்சுட மீன் குழம்பு சாப்பாடு, பார்பிக்யூ, நீச்சல், கேம்ப் ஸ்டே!

சென்னைக்கு அருகில் தீவு பயணம் – சுடச்சுட மீன் குழம்பு சாப்பாடு, பார்பிக்யூ, நீச்சல், கேம்ப் ஸ்டே!

நீங்கள் சென்னையிலிருந்து தடா நீர்வீழ்ச்சிக்கு பலமுறை உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் சென்று இருக்கலாம். ஆனால், தடாவுக்கு அருகில் இருக்கும் தீவைப் பற்றி நீங்கள் நிச்சயம் கேள்விப்பட்டு இருக்க மாட்டீர்கள். தீவுக்கு படகில் பயணம் செய்து, சுடச்சுட மதிய உணவு சாப்பிட்டுவிட்டு இளைப்பாறலாம். டென்ட் வசதி அமைக்கப்பட்டு இருப்பதால் நீங்கள் அங்கேயே இரவு நேரங்களில் தங்கவும் செய்யலாம். இந்த இடத்திற்கு எப்படி செல்வது என்று பார்ப்போம்!

SRM கிராண்ட்யூர்ஸ் வழங்கும் தீவு பயணம்

சென்னையில் இருந்து ஒன்றரை மணி தூரத்தில் தடாவுக்கு அருகில் இருந்த தீவுக்கு தனித்தனி பேக்கேஜ்கள் இருக்கின்றன. நீங்கள் உங்கள் குடும்பம் அல்லது நண்பர்களுடன் ஒரு புத்துணர்ச்சியான குட்டி ட்ரிப் போய் வர வேண்டும் என்று எண்ணி கொண்டிருந்தால், இது உங்களுக்கு சரியான சாய்ஸ் ஆக இருக்கும். இந்த பேக்கேஜ்களை தடாவுக்கு அருகில் இருக்கும் SRM கிராண்ட்யூர்ஸ் எனப்படும் ஹோட்டல் வழங்கி வருகிறது. நீங்கள் இந்த ஹோட்டலில் தங்கும் போதோ அல்லது வெறுமனே தீவுக்கு சென்று வர வேண்டும் என்று கூறியோ இந்த பேக்கேஜ்களை புக் செய்து கொள்ளலாம்.

srmgrandeursofferstadaislandtrips1

தடா to பிளமிங்கோ தீவு படகு பயணம்

நீங்கள் தடாவில் இருந்து பிளமிங்கோ தீவுக்கு படகு மூலம் அழைத்து செல்லப்படுவீர்கள். நீங்கள் படகில் ஏறிய உடனே உங்களுக்கு வெல்கம் டிரிங்க் வழங்கப்படும். அத குடித்துவிட்டு படகில் பயணிக்கலாம். மொத்தமாக தீவை அடைய நீங்கள் 50 நிமிடங்களுக்கு படகில் பயணம் செய்ய வேண்டும். தீவை அடைந்த உடன் உங்களுக்கு சுடச்சுட மீன்குழம்பு, மீன் வறுவல், சிக்கன் பார்பிக்யூ உணவு வகைகள் செய்து தரப்படுகிறது. காலை, மதியம், மாலை, இரவு என மொத்தம் நான்கு பேக்கேஜ்கள் உள்ளன.

சன்ரைஸ் பீச் வாக் பேக்கேஜ் (சூரிய உதயம்)

இந்த பேக்கேஜின் கீழ் மொத்தமாக 8 நபர்கள் வரை செல்லலாம். இதில் நீங்கள் காலை 5.45 மணி அளவில் படகில் அழைத்து செல்லப்படுவீர்கள். உடனே உங்களுக்கு வெல்கம் ட்ரிங்க் வழங்கப்படும். சுமார் 6.15 மணியளவில் படகில் இருந்தபடியே சூரிய உதயத்தை காணும் அரிய வாய்ப்பை பெறுவீர்கள். பின்னர் தீவு நோக்கிய உங்களது பயணம் தொடங்கும். தீவை அடைந்தவுடன் சுற்றிப்பார்த்துவிட்டு, தேநீர் அருந்திவிட்டு கரையை நோக்கி அழைத்துச் செள்ளபப்டுவீர்கள். இதற்காக ரூ.799 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

sunriseislandwalk1

ஐலேண்ட் லஞ்ச் (தீவில் மதிய உணவு)

இந்த பேக்கேஜ் உள்ள பேக்கேஜ்களில் அதிக நபர்களால் விரும்பப்படும் பேக்கேஜ் ஆகும். இந்த பேக்கேஜின் கீழ் நீங்கள் காலை 11 மணிக்கு கிளம்புவீர்கள். வெல்கம் ட்ரிங்க் குடித்துவிட்டு தீவை அடைவீர்கள். அங்கே உங்களுக்கு ஏற்கனவே சுடச்சுட மீன்குழம்பு சாப்பாடு பார்பிக்யூ சிக்கன் ஆகியவை தயாராக இருக்கும். உங்கள் கண் முன்னே மீன்களை பிடித்தும், அதை நீங்கள் சமைத்து தர கேக்கலாம். இந்த பேக்கேஜில் நீங்கள் செல்ல வேண்டும் என்றால் 8 நபர்கள் அடங்கிய குழுவுக்கு மொத்தமாக ரூ.1599 நீங்கள் செலுத்த வேண்டும்.

sunsetcruise

சன்செட் க்ரூஸ் (சூரிய அஸ்தமனம்)

இந்த வாரத்தையை வைத்தே நீங்கள் சூரிய அஸ்தமனத்தை படகில் சென்று பார்க்கப் போகிறீர்கள் என்று புரிந்து கொள்ளலாம். இந்த பேக்கேஜின் கீழ் நீங்கள் மாலை 4 மணிக்கு தீவு நோக்கி படகில் புறப்படுவீர்கள். தீவை அடைந்தவுடன் தேநீர் அருந்திவிட்டு தீவில் சூரிய அஸ்தமனத்தை பார்த்து ரசிப்பீர்கள். பின்னர் கரைக்கு அழைத்து வரப்படுவீர்கள். இதற்கான கட்டணம் ரூ.799 ஆகும்.

ஐலேண்ட் ஸ்டே (தீவில் தங்குதல்)

இந்த பேக்கேஜின் நீங்கள் நீங்கள் இரவு 8 மணிக்கு புறப்படுவீர்கள். இரவில் படகில் பயணம் செய்வது பெரும்பாலோனோருக்கு ஒரு கனவாக இருக்கும், அப்படி இருந்தால் இந்த பேக்கேஜை தேர்ந்தெடுங்கள். நீங்கள் இரவில் தீவில் படுத்துக்கொண்டு நட்சதிரங்களை வேடிக்கை பார்க்கலாம், சுடச்சுட செய்து தரப்படும் உணவைய சாப்பிட்டுவிட்டு டென்ட்க்குள் உறங்கலாம். காலையில் நீங்கள் எழுந்தவுடன் தேநீர் அருந்திவிட்டு கரைக்கு பயணிக்கலாம். 8 பேர் அடங்கிய இந்த பேக்கேஜை நீங்கள் எடுத்தால் ரூ.1999 கட்டணமாக செலுத்த வேண்டும்.

சென்னைக்கு அருகில் இப்படி ஒரு தனித்துவமான அனுபவம் கிடைக்கும் போது நீங்கள் அதை மிஸ் பண்ணலாமா? இப்போதே இந்த 9176090020 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்!

More News

    Read more about: chennai tamilandu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+