Search
  • Follow NativePlanet
Share
» »முத்து, KGF, லிங்கா, மதராசப்பட்டிணம் போன்ற பல திரைப்படங்கள் எடுக்கப்பட்ட அரண்மனை இது தானாம்!

முத்து, KGF, லிங்கா, மதராசப்பட்டிணம் போன்ற பல திரைப்படங்கள் எடுக்கப்பட்ட அரண்மனை இது தானாம்!

90ஸ் கிட்ஸ்களின் வாழ்வில் மறக்கமுடியாத திரைப்படங்களில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'முத்து' திரைப்படமும் ஒன்றாகும். முத்து படத்தில் காண்பிக்கப்பட்ட அரண்மனை தான் கர்நாடகாவின் மைசூரில் அமைந்துள்ள லலிதா பேலஸ். இந்திய சினிமாவையே ஒரு கலக்கு கலக்கிய KGF திரைப்படத்தில் காண்பிக்கப்பட்ட ராக்கி பாய் அரண்மனையும் இது தானாம், இதே போன்று மேட்டுக்குடி, பிரியமானவளே, மதராசப்பட்டினம், காதலன், ஜோடி, பையா மற்றும் பல தமிழ் திரைப்படங்களில் நீங்கள் இந்த அரண்மனையை பார்த்து இருப்பீர்கள்!

அரண்மனைகளின் நகரத்தில் லலிதா மஹால் பேலஸ்

பல கவர்ச்சிகரமான அரண்மனைகளுக்கு தாயகமாக இருப்பதால், மைசூர் அரண்மனைகளின் நகரம் என்று அழைக்கப்படுகிறது. லலிதா மஹால் அரண்மனை மைசூர் நகரத்தில் உள்ள மற்றொரு வரலாற்று கட்டிடமாகும். மைசூர் நகரின் இரண்டாவது பெரிய அரண்மனை, இது சாமுண்டி மலையின் அடிவாரத்தில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது.

lalithapalace

அழகான கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் பேலஸ்

லலிதா மஹால் அரண்மனை அதன் கட்டிடக்கலை அழகுக்காக அறியப்படுகிறது. இத்தாலிய பலாஸ்ஸோ மற்றும் ஆங்கில மேனரின் பாணிகளுடன் மறுமலர்ச்சி கட்டிடக்கலை பாணியின் சரியான கலவையை வழங்கும் இந்த அரண்மனை சந்தேகத்திற்கு இடமின்றி மைசூரின் மிக அழகான கட்டிடங்களில் ஒன்றாகும். E.W. Fritchley என்பவரால் வடிவமைக்கப்பட்டது, இது மைசூர் மகாராஜாவால் இந்தியாவின் வைஸ்ராய்க்காக கட்டப்பட்டது.

ஹோட்டலாக மாற்றப்பட்ட அரண்மனை

இந்த பிரமாண்ட அரண்மனை 1974 இல், ஒரு சொகுசு பாரம்பரிய ஹோட்டலாக மாற்றப்பட்டது. இது இந்திய அரசின் கீழ் உள்ள இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் (ITDC) அசோக் குழுவால் பராமரிக்கப்படுகிறது. அரண்மனை இன்னும் அரச பாணி மற்றும் அவர்களின் செழுமையான வாழ்க்கை பற்றிய ஒரு உயிரோட்டமான படத்தை வழங்குகிறது. இது வரலாற்று சிறப்புகள் மற்றும் அரச அலங்காரங்களுக்கு மத்தியில் சில நாட்கள் அரச வாழ்க்கையை வாழும் வாய்ப்பை வழங்குகிறது.

lalithamahal inside

பிராமாண்ட தங்குமிடத்தில் நீங்களும் தங்கலாம்

அரண்மனையில் விருந்தினர்கள் தங்குவதற்கு வைஸ்ராய், டூப்ளக்ஸ் சூட்ஸ் போன்ற 54 அறைகள் மற்றும் அறைகள் உள்ளன. ஒரு சுகாதார கிளப், நீச்சல் குளம், ஜாகிங் டிராக், பில்லியர்ட் அறை, டென்னிஸ் கோர்ட் மற்றும் பொழுதுபோக்கிற்காக செஸ் அறை ஆகியவையும் உள்ளன. லலிதா மஹால் பேலஸ் ஹோட்டல் கோல்ஃப் விரும்பும் விருந்தினர்களுக்காக உள்ளூர் ஷெரி ஜெயச்சாமராஜேந்திர வாடியார் கோல்ஃப் மைதானத்துடன் தொடர்பு கொண்டுள்ளது.

திரைப்படங்கள் எடுக்க அனுமதி

அரண்மனையை ஒரு சொகுசு பாரம்பரிய ஹோட்டலாக மாற்றியதன் மூலம், அரண்மனையின் பாரம்பரிய வசதிகளுடன் பல்வேறு நவீன வசதிகள் மற்றும் வசதிகள் சேர்க்கப்பட்டு, இரு உலகங்களின் விதிவிலக்கான கலவையை உருவாக்குகிறது. அரண்மனையின் அரச மகத்துவத்தை பாதிக்காமல், சில மாற்றங்கள் அரண்மனைக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதோடு மட்டுமல்லாமல் இங்கு திரைப்படம், பாடல் காட்சிகள் எடுக்கவும் அனுமதி வழங்கப்படுகிறது.

தமிழ் திரைப்படங்களில் லலிதா மஹால் பேலஸ்

முத்து: தமிழ் சினிமாவின் இன்றியமையாத திரைப்படங்களில் ஒன்றான முத்து திரைப்படத்தில், அப்பா ரஜினி தனக்கு சொத்து எதுவும் வேண்டாம் என்று தன் குழந்தையை ஒப்படைத்துவிட்டு விடைபெறும் காட்சி இந்த அரண்மனையில் தான் எடுக்கப்பட்டது.

லிங்கா: லிங்கா திரைப்படத்தில் காண்பிக்கப்பட்ட அரண்மனை இது தான். இங்கு தான் ராஜா லிங்கேஸ்வரன் தனது விருந்தினர்களுக்கு விருந்து வழங்குவார்.

மதராசப்பட்டிணம்: மதராசப்பட்டிணம் திரைபடத்தில் எமி ஜாக்சன் தங்கி இருக்கும் அரண்மனை இது தான்.

காதலன்: காதலன் திரைப்படத்தில் பிரபுதேவா முதன்முதலில் நாயகி நக்மாவை பார்ப்பது இந்த அரண்மனையில் தான். இந்த இடம் தான் நக்மாவின் வீடு போன்று காமிக்கப்பட்டு இருக்கும்.

ஒரு ஊர்ல ராஜகுமாரி: பாக்யராஜ், மீனா நடித்து வெளிவந்த இந்த திரைப்படத்தில் மீனா அந்த அரண்மனையின் ராணியாக இருப்பார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்கவும் இந்த அரண்மனையில் தான் படமாக்கப்பட்டது.

KGF: KGF என்ன தான் கன்னட திரைப்படமாக இருந்தாலும், தமிழ்நாட்டிலும் அது மிகப்பெரிய வெற்றி பெற்றது. KGF பாகம் 1 இல் காண்பிக்கப்பட்ட கருடன் அரண்மனை அதாவது KGF பாகம் 2 இல் காண்பிக்கப்படும் ஹீரோ ராக்கி பாயின் அரண்மனையும் இது தான்.

பல சூப்பர்ஹிட் தமிழ் திரைப்படங்கள்: மேட்டுக்குடி திரைப்படம், பையா படத்தின் கடைசி பாடல் காட்சி, ஜோடி படத்தில் வெள்ளி மலரே பாடல் காட்சி, துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் தொடு தொடுவேனவே பாடல் காட்சி, பிரியமானவளே படத்தின் ஜூன் ஜூலை பாடல் காட்சிகள் யாவும் இதே அரண்மனையில் தான் படமாக்கப்பட்டன.

லலிதா மஹால் அரண்மனை மைசூர் நகர மையத்திலிருந்து 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது மைசூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 8 கிமீ தொலைவில் அமைந்துள்ளதால் நீங்கள் மைசூர் செல்லும் போது கட்டாயம் இந்த அரண்மனையை காண தவறாதீர்கள்!

More News

Read more about: mysore kgf movie
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+