Search
  • Follow NativePlanet
Share
» »வரலாற்றின் யுத்த பூமியில் பட்ஜெட்டுக்கான சாகசப் பயணம்..!

வரலாற்றின் யுத்த பூமியில் பட்ஜெட்டுக்கான சாகசப் பயணம்..!

அனைத்துத் தரப்பினரையும் ஈர்க்கும் தன்மைகொண்ட பஞ்சாப்பில் சின்ன பட்ஜெட்டில் சாகசப் பயணம் செய்யத் திட்டமிட்டால் எங்கவெல்லாம் சென்று வரலாம் என தெரியுமா ?

வளம் நிரம்பிய மண், வரலாற்றில் யுத்த பூமி, ஒவ்வொன்றாக திட்டமிட்டு அமைக்கப்பட்ட பாசனக் கால்வாய், மேற்கே பாகிஸ்தான், வடக்கே ஜம்மு காஷ்மீர், வட கிழக்கில் இமாச்சல பிரதேசம், தென் கிழக்கில் அரியானா, இப்படி போர்ப் பிரதேசமும், வரண்ட பாலைவனமும், சோர்க்கம் போன்ற மலைகளும் சூழ்ந்து நடுவே அமைந்ததுதான் பஞ்சாப் மாநிலம். பருவநிலையைப் பொறுத்தவரையில் கடுமையான வெப்பம் நிலவும் கோடைக்காலத்தையும் கடும் குளிர் நிலவும் குளிர்காலத்தையும் பெற்றிருக்கும் இங்கே கம்பீரமான அரண்மனைகளும், உலக ஆன்மீகவாதிகளை ஈர்க்கும் கோவில்களும், வரலாற்று யுத்தங்கள் நடந்த தலங்கள் என்று பல்வேறு அம்சங்கள் ஒரு முக்கியமான சுற்றுலாத் தலங்களாக உள்ளன. அனைத்துத் தரப்பினரையும் ஈர்க்கும் தன்மைகொண்ட பஞ்சாப்பில் சின்ன பட்ஜெட்டில் சாகசப் பயணம் செய்யத் திட்டமிட்டால் எங்கவெல்லாம் சென்று வரலாம் என தெரியுமா ?

சாசக சுற்றுலா

சாசக சுற்றுலா


பஞ்சாப்பில் பிரசிதிபெற்ற சுற்றுலா சாகசத் தலங்களில் சக் சர்கார் வனப்பகுதி, ஹர்கே சதுப்பு நிலம், டைகர் சவாரி, ஹார்டிஸ் வர்ல்டு உள்ளிட்டவை மிகவும் பிரசிதிபெற்றது. அப்படி இத்தலங்களில் எல்லாம் என்ன இருக்கு என பார்க்கலாம் வாங்க.

Koshy Koshy

சக் சர்கார் வனப்பகுதி

சக் சர்கார் வனப்பகுதி


ஃபெரோஸ்பூரில் மும்டோட் கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது சக் சர்கார் என்ற அடர்ந்த வனப்பகுதி. 1953ல் பஞ்சாப் அரசு இதை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்தது. இந்த வனப்பகுதியில் சில இடங்களில் செயற்கை காடுகளை உருவாக்கி அரசே பராமரித்தும் வருகிறது.

Ekabhishek

அபோஹர் வன உயிர் சரணாலயம்

அபோஹர் வன உயிர் சரணாலயம்


இயற்கையின் உச்சகட்டமான அழகுடன் காட்சியளிக்கும் இந்த இடம் ஃபெரோஸ்பூரில் அமைந்துள்ளது. 2000 ஆண்டில் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி சரணாலயமாக அறிவிக்கப்பட்ட இப்பகுதியில், பிஷ்னோய் மக்கள் உள்ள 13 கிராமங்கள் நிர்வகிக்கப்பட்டுள்ளது. பலவகையான மிருகங்கள் இங்கு இருந்தாலும், கருப்பு பக் மான்கள் இங்கு சுதந்திரமாக உலாவுகின்றன. அவை மட்டுமின்றி முள்ளம்பன்றிகள், நீல்கை, காட்டுப்பன்றிகளும் இங்கு அதிகளவில் உள்ளன.

Altaileopard

ஹர்கே சதுப்பு நிலம்

ஹர்கே சதுப்பு நிலம்


ஹரிகே சதுப்புநிலம் ஃபெரோஸ்பூர் அம்ரிஸ்டர் எல்லையில் 86 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. 1999-ல் வன சரணாலயமாக அறிவிக்கப்பட்ட இதில் விஜியான், ஷொவெல்லார், டீல், பின்டெயில் மற்றும் பிராமினி வாத்து ஆகிய பறவைகள் வசித்து வருகின்றன. 7 வகையான ஆமைகளும், 26 வகையான மீன்களும் இங்குள்ள குளத்தில் காணப்படுகின்றன. அதுமட்டுமின்றி இந்திய காட்டுப்பன்றி, மிகப் பெரிய காட்டுப் பூனை, குள்ளநரி, மங்கூஸ் போன்றவையும் இங்கு காணப்படுகின்றன.

Killiondude

ஃபெரோஸ்பூர்

ஃபெரோஸ்பூர்


பல சுற்றுலாதளங்களைக் கொண்டுள்ள ஃபெரோஸ்பூரில் ஜெயின் மந்திர், பொதிமாலா, குருத்வாரா குருசார் ஆகிய இடங்கள் உள்ளன. ஆங்கிலேய- சீக்கிய போரின் போது பிரதான பங்கு வகித்த இந்த இடம் இந்திய- பாகிஸ்தான் எல்லையில் உள்ளது. ஏராளமான அருங்காட்சியகங்களும், நினைவுச் சின்னங்களும் நிறைந்து காணப்படும் இங்கு ஆங்கிலேய- சீக்கிய நினைவகம், சாராகிரி நினைவகம், தேசிய தியாகிகள் நினைவகம், பார்கி நினைவகம் ஆகியவை குறிப்பிடத்தக்க சுற்றுலாத் தலங்கள். அதுமட்டுமின்றி இதன் அருகே சில கிலோ மீட்டர் தொலைவில் ஹரி பறவைகள் சரணாலயம், பொதிமாலா, ஹனுமன் மந்திர் ஆகியவையும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ன்மையுடன் உள்ளது.

Achhina

டைகர் சவாரி

டைகர் சவாரி


லூதியானா இருந்து ஜிடி சாலையில் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த இடம் புலிகள், முயல்கள், ப்ளாக் பக்ஸ், சம்பார் மான்கள், மயில்கள் என பலவகையான விலங்குகளை கொண்ட டைகர் சவாரித் தலமாகும. திங்கட்கிழமைத் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் சபாரி நடைபெறுகிறது. டைகர் சபாரி, ஹார்டிஸ் வர்ல்டு, ரஞ்சித் சிங் அருங்காட்சியகம் ஆகிய இடங்களை பயணிகள் அடுத்தடுத்து காணும் வகையில் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளலாம்.

Harikrishnan18

ஹார்டிஸ் வேர்ல்டு

ஹார்டிஸ் வேர்ல்டு


பஞ்சாபின் மிகப்பெரிய நீர்விளையாட்டுப் பூங்காவான ஹார்டிஸ் வேர்ல்டு லூதியானாவில் இருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதன் உள்ளேயே ஒரு பேரங்காடி, பூங்கா, உணவுக் கடைகள் உள்ளிட்டவையும் உள்ளன. பனிச்சறுக்கு போன்ற பலவகையான நீர் விளையாட்டுகள் உங்களை வசியம் செய்யும். உங்களுடன் குழந்தைகளையும் அழைத்துச் சென்றுள்ளீர்கள் என்றால் அவர்களுக்கு மிகவும் பிடித்த இடமாக இந்த கேளிக்கைப் பூங்கா அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது.

Jaypee

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+