Search
  • Follow NativePlanet
Share
» »ராமர் வசித்த ராம்தேக் கோட்டை, இன்னும் என்னவெல்லாம் உள்ளது இந்த நாக்பூரில் ?

ராமர் வசித்த ராம்தேக் கோட்டை, இன்னும் என்னவெல்லாம் உள்ளது இந்த நாக்பூரில் ?

நம் நாட்டில் ஒரு சில பகுதிகளில் மட்டுதே ராமருக்கு என தனியே கோவில் உள்ளது. அதில் சிறப்பு பெற்ற கோட்டை வடிவ கோவில் என்றால் மத்திய பிரதேசத்தில் உள்ள ராம்தேக் கோவில்.

நம் நாட்டில் ஒரு சில பகுதிகளில் மட்டுதே ராமருக்கு என தனியே கோவில் உள்ளது. அதில் சிறப்பு பெற்ற கோட்டை வடிவ கோவில் என்றால் மத்திய பிரதேசத்தில் உள்ள ராம்தேக் கோவில். ராமகரி, சிந்தூர்கிரி, தபோகிரி என பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பெருமைபெற்ற இந்த ராம்தேக் கோவில் இன்றும் தனது கட்டிடக் கலையில் பொழிவை இழக்காமல் காட்சியளிக்கிறது. வாருங்கள், இக்கோவில் குறித்தும், இத்தலம் அமைந்துள்ள நாக்பூரில் நாம் கட்டாயம் காணவேண்டிய சுற்றுலாத் தலங்கள் குறித்தும் அறிந்து கொள்வோம்.

ராமர் கோவில்

ராமர் கோவில்


ராம்தேக் கோவிலானது ராமர், சீதைக்காக கட்டமைக்கப்பட்டது. சுமார் 600 வருடங்கள் முந்தைய புராதனமக்க கோவிலான இது இடைக்கால ஆரிய கட்டிடக் கலையின் சாடலில் கட்டப்பட்டுள்ளது. இதன் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால் மகாகவி காளிதாசரின் நினைவுச் சின்னம் இங்கே அமைக்கப்பட்டுள்ளது தான்.

புராதானக் கதைகள்

புராதானக் கதைகள்


ராம்தேக் கோட்டையின் பின்னணியில் ஒரு புராணிகக் கதை கூறப்படுவதாக இந்த கோட்டை யாத்ரிகர்கள் மத்தியில் பிரசித்தமாக விளங்குகிறது. அதாவது ராமர் இந்த இடத்தில் வனவாசத்தின்போது சீதா தேவி மற்றும் லட்சுமணனுடன் வசித்ததாக நம்பிக்கை நிலவுகிறது. இங்குள்ள கோவில் ஏறக்குறைய ஆறு நூற்றாண்டுகள் பழமையை உடையது என்பதுடன், மஹாகவி காளிதாஸ் தன்னுடைய புகழ் பெற்ற காவியமான மேகதூதத்தை இங்கு தான் எழுதினார் என்றும் வரலாறு கூறுகிறது.

Muk.khan

டிராகன் பேலஸ் கோவில்

டிராகன் பேலஸ் கோவில்


டிராகன் பேலஸ் கோவில் நாக்பூரில் உள்ள மற்றொரு பிரம்மாண்டமான சிறப்பு பெற்ற கோவிலாகும். சுமார் பத்து ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த கோவில் நாக்பூருக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள காம்ப்டீ புறநகர் பகுதியில் உள்ளது. இந்த கோவில் அங்குள்ள அமைதியான புத்த தியான மண்டபத்திற்கு மிகவும் பெயர் பெற்றது. தியான மண்டபத்தின் முதல் தளத்தில் புத்த பஹவானின் ஒரு பெரிய உருவச்சிலையும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பசுமையான புல்தரையின் நடுவே அமைந்திருக்கும் இந்தக் கோவில் தாமரைக் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் அற்புதமான கட்டிடக்கலை வடிவமைப்புக்காக இது சிறந்த கான்கிரீட் கட்டிட கட்டமைப்புக்கான சர்வதேச விருதையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Dragonpalacetemple

ஸ்ரீ பொத்தரேஸ்வர் ராம் மந்திர்

ஸ்ரீ பொத்தரேஸ்வர் ராம் மந்திர்


1923-யில் கட்டப்பட்ட பொத்தரேஷ்வர் ராம் மந்திர் மணற்கற்களாலும் சலவைக்கற்களாலும் கட்டப்பட்டுள்ளது. இது நாக்பூரில் சென்ட்ரல் அவென்யூ சாலையில் அமைந்துள்ளது. இந்த புனிதக் கோவில் ராமாயண காவியத்தில் இடம் பெறும் தெய்வங்களுக்காகவே கட்டப்பட்டுள்ளதால் உள்ளூர் மக்களால் பெருமளவில் பிரார்த்தனை செய்யப்படும் கோவிலாக திகழ்கிறது.

Dr. Tarique Sani

அம்பாஜாரி ஏரி

அம்பாஜாரி ஏரி


நாக்பூரின் முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்று இந்த அம்பாஜாரி ஏரி. ஏறக்குறைய 15 சதுர கிலோ மீட்டருக்கு பரந்து விரிந்து காணப்படும் இந்த ஏரி ஒரு சிறந்த அழகான பொழுதுபோக்குத் தலமாகும். இந்த ஏரியைச் சுற்றிலும் அழகான பூங்கா ஒன்று உள்ளது. பூங்காவின் நடுவின் இசை நீரூற்று ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் விளையாடுவதற்கு பிரத்யேகமான கருவிகள் மற்றும் அமைப்புகள் உள்ளதால் சிறு குழந்தைகளுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கும் பூங்காவாக காணப்படுகிறது. குட்டி ரயில், படகு போக்குவரத்து மற்றும் பலவித ஊஞ்சல்கள், சவாரிகள் இங்கு குழந்தைகளுக்கு கிடைக்கும் பொழுதுபோக்கு அம்சகளில் குறிப்பிடத் தக்கவை ஆகும். காலை நேர நடைப்பயணம் மேற்கொள்பவர்களுக்கென பிரத்யேக நடைப்பாதைகளும் இந்த பூங்காவில் உள்ளன.

Ganesh Dhamodkar

நவேகாவ்ன் பந்த்

நவேகாவ்ன் பந்த்


நாக்பூர் அருகில் விதர்பா பிரதேசத்தில் காணப்படும் இந்த அணைக்கட்டு அருகில் உள்ள கானகப்பகுதி எல்லோராலும் விரும்பப்படும் கானகப்பகுதியாகும். இங்குள்ள அணை கட்டப்படுவதற்கு கொலு படேல் கோஹ்லி என்பவர் மூல காரணமாக இருந்தார் என்று கூறப்படுகிறது. ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்கு முந்தைய இந்த அணைக்கட்டு அருகில் டாக்டர் சலீம் அலி பெயரில் பிரசித்தி பெற்ற பறவைகள் சரணாலயமும் வனவிலங்குப் பூங்காவும் உள்ளது. இங்கு கரடி மற்றும் புள்ளி மான்கள் போன்றவற்றை காணலாம்.

Pankaj.awachar

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+