Search
  • Follow NativePlanet
Share
» »குரு குணம் காக்கும் ஸ்ரீ பார்த்தசாரதி..! யாருக்கு லாபம் ?

குரு குணம் காக்கும் ஸ்ரீ பார்த்தசாரதி..! யாருக்கு லாபம் ?

நட்சத்திரத்தில் விழும் குருவின் பலனை காத்து தோஷத்தில் இருந்து நிவர்த்தியடையச் செய்து, செல்வத்தில் மேன்மையடையச் செய்ய எந்த தலத்தில் யார் வழிபட வேண்டும் என தெரியுமா ?

குரு பார்க்க கோடி புண்ணியம் என்பது நம் ஆன்றோர் வாக்கு. எத்தகைய தோஷம் இருந்தாலும் குரு பார்த்தால் விலகிவிடும். லக்னத்தில் குரு இருப்பது மிகவும் விசேஷம். ஏனென்றால் இவரின் பொன்னொளிப் பார்வை ஐந்து, ஏழு, ஒன்பதாம் இடங்களுக்கு விழும். ஆகையால் இந்த ஸ்தானங்களின் பலம் விருத்தியாகும். நவகிரங்களில் மிகவும் முக்கிய யோக கிரகமாக கருதப்படுவது குரு ஆகும். ஜோதிடத்தில் குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி போன்ற பெயர்ச்சிகள் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. நட்சத்திரத்தில் விழும் குருவின் பலனை காத்து தோஷத்தில் இருந்து நிவர்த்தியடையச் செய்து, செல்வத்தில் மேன்மையடையச் செய்ய எந்த தலத்தில் யார் வழிபட வேண்டும் என தெரியுமா ?

எங்கே உள்ளது ?

எங்கே உள்ளது ?


திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு வேணுகோபால பார்த்தசாரதி கோவில். இத்தலத்திலேயே தோஷம் நீங்க வேண்டி ராமர் பெருமாளை வழிபட்டதாக அறியப்படுகிறது.

Ssriram mt

கோவில் சிறப்பு

கோவில் சிறப்பு


சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது இந்த பெருமாள் திருத்தலம். இருப்பினும் தனது பொழிவினை இழக்காமல் இன்றும் கம்பீரமாக உள்ளது. இந்தக் கோவிலுக்கும் 15 மீட்டர் தொலைவில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கும் சுரங்கப்பாதை உள்ளது. போர்க்காலத்தின் போது மன்னர்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவும், போர்க் கருவிகளை பாதுகாக்கவும் இந்தப் பாதையை பயன்படுத்தியதற்கான சான்றுகள் உள்ளன.

Ssriram mt

வரலாறு

வரலாறு


ராமனுக்கும், ராவணனுக்கும் நடைபெற்ற போரின் போது ராவணன் கொல்லப்பட்டான். இதனால் ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. இதுகுறித்து பிரம்மனிடம் முறையிட்ட ராமருக்கு, இந்த தோஷத்தில் இருந்து நீங்க வேணுகோபால பார்த்தசாரதியை வழிபடுமாறு அவர் அறிவுறுத்தினார். ராமரும் இத்தலம் வந்து 13 நாட்கள் தொடர்ந்து வழிபட்டு தனது தோஷத்தை நீக்கிக் கொண்டார்.

Ssriram mt

தல அமைப்பு

தல அமைப்பு


வருமையில் இருந்து மக்களுக்கு புதையலைத் தந்து காத்தவர் இந்த வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள். சங்க காலத்தில் குறுநில மன்னர் வரி வசூல் செய்ய செங்கம் வந்தபோது கட்டியதே இந்தக் கோவில். மகாமண்டபத்தில் கருங்கல்லால் செதுக்கப்பட்ட தூண்கள் மண்டபத்தைத் தாங்கியுள்ளன. கர்ப்பகிரகத்தில் மூலவர் செம்பொன்ரங்க பெருமாள் நான்கு கைகளுடன் காட்சியளிக்கிறார். அவருக்கு அருகில் பத்மாவதி அம்மையாரும், ஆண்டாளும் அருள்பாலிக்கின்றனர். அவர்களைச் சுற்றிலும் உற்சவ மூர்த்திகள் உள்ளனர்.

IM3847

திருவிழா

திருவிழா


பெருமாளுக்கு உகந்த மாதமான வைகாசியில் 10 நாட்களுக்குத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் போது பெருமாளும், ஆண்டாள் அம்மையாரும் யானை வாகனத்தில் அமர்ந்து நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தைக் காண்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.

Ssriram mt

நடைதிறப்பு

நடைதிறப்பு


அருள்மிகு வேணுகோபால பார்த்தசாரதி திருக்கோவில் நடை காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும்.

Ssriram mt

வழிபாடு

வழிபாடு


மனதளவில் பாதிக்கப்பட்டிருப்போர், அதிகப்படியான மன அழுத்தத்தால் விரக்தியில் இருப்போர், ஆழ்வார் சன்னதியில் அமர்ந்து வழிபட மன நிம்மதி நிலவும். திருமணத் தடை உள்ள பெண்கள் இத்தலத்தில் உள்ள பெருமாளை வணங்கி சன்னதியை சுற்றி வந்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

Ssriram mt

எந்த ராசிக்கார்களுக்கு

எந்த ராசிக்கார்களுக்கு


விருச்சிகம், தனுசு, மகரம் ஆகிய மூன்று ராசிக்கார்களுக்கும் வரும் குருப் பெயர்ச்சியில் 3ம் பாவத்தை குரு 5ம் பார்வையாக பார்ப்பாதல் வீரம், போகம் துணிவு துணைவர் பலம், ஆயுள்பலம், எல்லா காரியங்களிலும் வெற்றி பெற செய்வார். உங்களுடைய எண்ணங்கள் யாவும் நிறைவேறும். குரு பெயர்ச்சி வாரத்தில் வியாழனன்று இத்தலம் சென்று துளசியில் மாலை சாற்றி வேண்டி வர குருவின் ஒட்டுமொத்த பலனும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Mohan Krishnan

நேர்த்திக்கடன்

நேர்த்திக்கடன்


வேண்டியவை யாவும் நிறைவேறியதும் பெருமாளுக்கும், அம்மையாருக்கும் புத்தாடைகள் சாற்றி, சிறப்பு அலங்காரம் செய்து மாலை அணிவித்து தங்களது நேர்த்திக்கனடை பக்தர்கள் செலுத்துகின்றனர்.

Bala Subs

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


திருவண்ணாமலையில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது செங்கம். தேசிய நெடுஞ்சாலை 77யில் ஐயன்பாளையம், நல்லூர், மண்மலை கடந்தால் ஜவ்வாது மலையடிவாரத்தில் உள்ள இந்த பெருமாள் திருத்தலத்தை அடையலாம்.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+