Search
  • Follow NativePlanet
Share
» »தாம்பரத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் லண்டன் பிரிட்ஜ் கண்காட்சிக்கு நீங்கள் இன்னும் போகலையா – இப்போவே போங்க!

தாம்பரத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் லண்டன் பிரிட்ஜ் கண்காட்சிக்கு நீங்கள் இன்னும் போகலையா – இப்போவே போங்க!

தாம்பரத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் லண்டன் பிரிட்ஜ் பொருட்காட்சி தான் இப்போதைய 'டாக் ஆஃப் தி டவுன்' தெரியுமா! பிராமாண்டமான லண்டன் பிரிட்ஜ் செட் அப், உள்ளே நுழைந்தவுடன் வெளிநாடு போன்ற வீதிகள், பார்க்குகள், எண்ணற்ற போட்டோ பிரேம்கள், விலங்குகளின் பொம்மைகள், பலவிதமான சாகச விளையாட்டுகள், வித விதமான ருசிகர உணவுகள், வண்ணமயமான ஷாப்பிங் என வெறும் 80 ரூபாயில் சூப்பரா ஒரு வார இறுதியை என்ஜாய் பண்ணலாம் தெரியுமா? தாம்பரம் ரயில்வே மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த கண்காட்சிக்கு உங்கள் வீட்டு குட்டீஸ்களை அழைத்துச் சென்று சர்ப்ரைஸ் கொடுக்க நீங்க ரெடியா?

exhibitioncover

தாம்பரத்தில் லண்டன் பிரிட்ஜ்

மைதானத்திற்குள் நுழைந்த உடனேயே பிராமாண்டமான லண்டன் பிரிட்ஜ் செட் அப் நம்மை வரவேற்கிறது. பார்ப்பதற்கு அப்படியே அச்சு அசல் லண்டன் பிரிட்ஜ் போலவே செட் போட்டு அமைத்து இருக்கிறார்கள். ஷூட்டிங்கிற்கு அமைக்கப்படுவது போல இது அமைக்கப்பட்டு இருக்கிறது. பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் இந்த குட்டி லண்டன் பிரிட்ஜ்க்குள் அழகாக நாம் உள்ளே நடந்து செல்லலாம்.

Tambaram

வண்ணமயமான போட்டோ ஸ்பாட்டுகள்

அதோடு மட்டுமல்லாமல் நடந்து செல்லும் போதே வெளிநாடு செட் அப்பில் காபி ஷாப்கள், டிஸ்னிலாண்ட், கடைகள், மரங்கள், சேர்கள் என அழகாக பல அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. யானை, புலி, சிங்கம் என பல விலங்குகளும் வைக்கப்பட்டுள்ளன. எங்கு திரும்பினாலும் போட்டோ ஸ்பாட்டுகள் தான், இந்த இடங்களில் எல்லாம் உங்கள் வீட்டு குட்டீஸ்களை நிக்க வச்சு போட்டோ எடுக்க மறக்காதீர்கள்.

Tambaram exhibition

கூட்டம் கூட்டமாக வந்து செல்லும் மக்கள்

இந்த கோடை கொண்டாட்டம் எக்ஸ்போவிற்கு தினந்தோறும் சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் வந்து செல்கின்றனர். ஒரே இடத்தில் குழந்தைகளுக்கு பிடித்த விளையாட்டுகள், செயல்பாடுகள், வித விதமான உணவுகள், ரூ.10 இல் இருந்தே ஷாப்பிங் பொருட்கள் என எல்லாமே ஒரே இடத்தில் இருந்தால் யாருக்குத் தான் பிடிக்காது.

Tambaram exhibition

இங்கே நாம் என்னவெல்லாம் செய்யலாம்

லண்டன் பிரிட்ஜை நன்றாக சுற்றிப் பார்த்து போட்டோ எடுத்த பின்னர், நீங்கள் இங்கே மீதி இருக்கும் கேளிக்கைகளில் ஈடுபடலாம். முக்கியமாக 100 ரூபாய்க்கு கிடைக்கும் ஃபிஷ் ஸ்பாவில் ஈடுபட மறக்காதீர்கள். அதோடு கீழ்க்கண்ட செயல்பாடுகளில் நீங்களும் உங்கள் வீட்டு குட்டீஸ்களும் ஈடுபடலாம்.

1. குழந்தைகள் பெரியவர்களுக்கான தனித்தனி போட்டோ பாயிண்ட்டுகள்

2. செல்பி பாயிண்ட்டுகள்

3. 3 D சுவர்கள்

4. மேஜிக் ஹவுஸ்

5. ஹாரர் ஹவுஸ்

6. ஸ்னோ வேர்ல்ட்

7. ரோபோ வீடு

8. 3 D விஷுவல் ஹவுஸ்

9. போட் ரைடு

10. கப் & சாசர்

11. ஜியன்ட் வீல்

12. வாட்டர் ரோலர்

13. டெக்னோ ஜம்ப்

14. ஆடும் குதிரை

15. டோரா டோரா

16. மேலும் பல பெரியவர்களுக்கான விளையாட்டுகளும் இதில் உள்ளன.

Tambaram

பலவிதமான திண்பண்டங்களுடன் கூடிய ஷாப்பிங்

மேற்கூறியவை எல்லாம் அங்கே உள்ள செயல்பாடுகள் மட்டும் தான். அதோடு இந்த எக்ஸ்போ முடிந்துவிடவில்லை. டெல்லி அப்பளம், மிளகாய் பஜ்ஜி, பானி பூரி, பார்பிக்யூ சிக்கன், சீஸ் போண்டா, பிரஞ்சு பிரைஸ், பிரைடு சிக்கன், பாப்கார்ன், பஞ்சுமிட்டாய், ஜிகர்தண்டா, ஷவர்மா, ஐஸ் கோலா போன்ற பல தென்னிந்தியா வட இந்திய உணவுகளையும் நீங்கள் ஒரு கை பார்க்கலாம். அதோடு ரூ.10 இல் இருந்தே நீங்கள் அங்கு ஷாப்பிங் செய்ய பல ஸ்டால்களும் போடப்பட்டு உள்ளன. அதில் விளையாட்டுப் பொருட்கள் முதல் வீட்டிற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் கிடைக்கிறது.

Tambaram

நேரம் மற்றும் நுழைவுக்கட்டணம்

எக்ஸ்போ திறந்திருக்கும் நேரம்: மாலை 3 முதல் இரவு 10 மணி வரை வாரத்தின் எல்லா நாட்களிலும் திறந்து இருக்கிறது.

நுழைவுக்கட்டணம்: பெரியவர்களுக்கு ரூ.80 குழந்தைகளுக்கு ரூ. 60 நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

*இந்த ரூ.80 மற்றும் ரூ. 60 நுழைவுக்கட்டணம் மட்டுமே, நீங்கள் செல்ல விரும்பும் தனி தனி விளையாட்டுகளுக்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்.

எப்படி செல்வது

இந்த பொருட்காட்சி ஜூன் வரை நடைபெறும் என்பதால் நீங்கள் இந்த மாதத்தின் எந்த நேரத்திலும் உங்கள் சௌகரியத்திற்கு ஏற்ப இங்கு வருகை தரலாம். சென்னையின் எந்தப் பகுதியில் இருந்தாலும் தாம்பரத்திற்கு பேருந்து அல்லது ரயில் மூலம் வந்து சேரவும். அங்கிருந்து தாம்பரம் ரயில்வே மைதானத்திற்க்கு ஆட்டோ மூலமாகவோ அல்லது நடந்தோ வரலாம்.

More News

    Read more about: tambaram chennai tamil nadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+