Search
  • Follow NativePlanet
Share
» »மதுரை to கொடைக்கானல் ஒரு நாள் ட்ரிப் – வெறும் 1000 ரூபாயில் கொடைக்கானலில் அட்டகாசமான சுற்றுலா!

மதுரை to கொடைக்கானல் ஒரு நாள் ட்ரிப் – வெறும் 1000 ரூபாயில் கொடைக்கானலில் அட்டகாசமான சுற்றுலா!

மதுரை என்னதான் சூடாகவும், வெப்பமாகவும் இருந்தாலும் மதுரைக்கு அருகே எண்ணற்ற மலைப்பிரதேசங்கள் அணுகக்கூடிய தொலைவில் அமைந்துள்ளன. கொடைக்கானல் தொடங்கி மூணார், தேக்கடி வரை அனைத்துமே மதுரையிலிருந்து அரை நாளில் செல்லக்கூடிய தொலைவில் இருப்பதால் மதுரை வாசிகள் அடிக்கடி இந்த மலைப்பிரதேசங்களுக்கு சென்று வருவது உண்டு. மதுரையில் இருந்து அதிகாலை கிளம்பினால் கொடைக்கானலின் சுற்றுலாத் தலங்களை ரசித்துவிட்டு இரவு வீடு திரும்புவது மிகவும் ஈஸி! மதுரையிலிருந்து ஒரே நாளில் கொடைக்கானலுக்கு சென்று அதே நாளில் சுற்றுலாவை முடித்துவிட்டு அழகான நினைவுகளுடன் வீடு திரும்பலாம் தெரியுமா? அது எப்படி என்று இங்கே பார்ப்போம்!

1

சொந்த வாகனங்களில் செல்வதே சிறந்தது

கொடைக்கானலில் கோவா, பாண்டிச்சேரி, ஊட்டி போன்று பைக் வாடகைக்கு பைக் கொடுக்கும் வசதிகள் இல்லை. அதே போல பேருந்துகளில் சுற்றிப் பார்க்கும் வசதியும் கூட கிடையாது. சீசன் காலங்களில் மட்டுமே அதாவது ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டும் TNSTC சார்பில் சுற்றுலாப் பேருந்துகள் இயக்கபடுகின்றன. சீசன் நேரங்களில் இங்கு வருகை தரும் பொதுமக்கள் இந்த பேருந்துகளில் ஏறி கொடைக்கானலின் சுற்றுலா ஸ்தலங்களை கண்டு களிக்கலாம். மீதி நேரங்களில் நாம் நமது சொந்த வாகனத்தில் வருவதே நல்லது என பரிந்துரைக்கப்படுகிறது.

மதுரை to கொடைக்கானல் ஒரு நாள் ட்ரிப்

பொதுவாக மதுரையில் இருந்து நண்பர்களுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வேண்டும் என்று திட்டமிடும் நீங்கள், நல்ல ஓடக்கூடிய கண்டிஷனில் இருக்கும் பைக்குகளை தேர்ந்தெடுத்து ஓட்டுவது அவசியம். முதல் நாளே பைக்குகளை சரி பார்த்து பெட்ரோல் போட்டு வைத்துக் கொள்ளுங்கள், கூடவே ஒரு நாள் ட்ரிப்கிற்கு உங்களுக்கு தேவைப்படும் பொருட்களையும் எடுத்துக் வைத்துக் கொள்ளுங்கள். மதுரையிலிருந்து அதிகாலை 4 அல்லது 5 மணிக்கு உங்களது ரைடை ஸ்டார்ட் செய்யலாம்.

வழி நெடுக கொட்டி கிடக்கும் பசுமையும் இயற்கை அழகும்

பெரும்பாலான இயற்கை எழில்மிகு இடங்களைப் போலவே, கொடைக்கானலும் கான்கிரீட் காடு மற்றும் பெரிய நகரக் கூட்டத்திலிருந்து வெகு தொலைவில் அமைந்துள்ளது. மதுரையில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலை மெதுவாக அதை அனுபவிக்கும். வழியில், நீங்கள் சிறிய நகரங்கள், கிராமங்கள், சில பிரபலமான சுற்றுலாத் தலங்கள் மற்றும் இயற்கை ஹாட்ஸ்பாட்களைக் கடந்து செல்வீர்கள்.

2

எந்த வழிகளில் செல்லலாம்

மதுரையிலிருந்து கொடைக்கானலை இரண்டு வழிகளில் அடையலாம். மதுரை-நகரி-ஆண்டிப்பட்டி-பள்ளப்பட்டி-நீலக்கோட்டை-வத்தலகுண்டு வழியே கொடைக்கானலை அடையலாம். இந்த வழித்தடத்தில் மதுரை முதல் கொடைக்கானல் வரை போக்குவரத்து மிகவும் குறைவாக உள்ளது மற்றும் சாலை மூடல்கள் இல்லை. சுமார் 115 கிமீ தொலைவில் உள்ள இந்த சாலையை அடைய மூன்று மணி நேரம் ஆகும்.

அடுத்ததாக, மதுரை-பல்கலை நகர்-செல்லம்பட்டி-காமராஜ் நகர்-பாயல்வரம்-அன்னவட்டி-வத்தலகுண்டு வழியே கொடைக்கானலை அடையலாம். 125 கிமீ தூரம் உள்ள இந்த வழியில் கொடைக்கானலை அடைய மூன்றரை மணி நேரத்திற்கும் மேலாக ஆகும்.

3

எப்படி சுற்றிப் பார்ப்பது

1. அதிகாலையில் நீங்கள் மதுரையிலிருந்து கிளம்பினால் காலை 9 மணிக்கெல்லாம் கொடைக்கானலுக்கு சென்று விடுவீர்கள். காலை உணவிற்கு பின்னர் உங்களது சைட்சீயிங்கை தொடரலாம்.

2. கொடைக்கானல் 1 நாள் பயணமானது மலைவாசஸ்தலத்தின் பசுமையான பள்ளத்தாக்குகள், அழகிய நீர்வீழ்ச்சிகள் மற்றும் மூச்சடைக்கக்கூடிய மலை சிகரங்கள் போன்ற அனைத்து மறைக்கப்பட்ட ரத்தினங்களையும் ஆராய உதவும்.

3. கோக்கர்ஸ் வாக், கொடைக்கானல் ஏரி, பிரையன்ட் பூங்கா இந்த மூன்றுமே ஒரே இடத்தில் அமைந்து இருப்பதால் அனைத்தையும் ஒரு சேர சுற்றிப்பார்த்துவிடலாம்.

4. அடுத்ததாக அப்பர் லேக் வியூபாயின்ட்டுக்கு சென்று, நட்சத்திர வடிவில் இருக்கும் ஏரியையும் அதன் பசுமையையும் கண்டு களிக்கலாம்.

5. ரோஸ் கார்டனை நன்கு சுற்றிப்பார்த்துவிட்டு மொயார் வியூபாயின்ட்டுக்கு செல்லவும்.

6. அடுத்ததாக அழகு நிறைந்த நாம் பல திரைப்படங்களில் பார்த்து ரசித்த பைன் பாரெஸ்ட் சுற்றிப்பார்த்துவிட்டு போட்டோக்கள் எடுத்து குவிக்கலாம். குறிப்பாக அங்கே குதிரை சவாரி செய்ய மறக்காதீர்கள்.

7. அடுத்ததாக குணா குகை, தூண் பாறை, பசுமை பூங்கா, பியர் சோலா நீர்வீழ்ச்சி ஆகியவற்றை பார்த்து ரசித்துவிட்டு, இஞ்சி டீ, சூடான பொறியை ருசித்துவிட்டு இருள் சூழ்வதற்கு முன்னரே மலையில் இருந்து இறங்கினால் மதுரையை அடைந்து விடலாம்.

மொத்தமாகவே இந்த ட்ரிப்பிறகு நீங்கள் ஒரு ஐந்து அல்லது ஆறு நபர்களாக சென்றால் 1000 ரூபாயை தாண்டாது பயணிகளே!

More News

    Read more about: kodaikanal dindigul
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+