• Follow NativePlanet
Share
» »சென்னைக்கு பக்கத்தில இத்தனை நீர்வீழ்ச்சிகளா – இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

சென்னைக்கு பக்கத்தில இத்தனை நீர்வீழ்ச்சிகளா – இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

வெப்பமண்டல கடற்கரை சுற்றுலாத் தலமாக விளங்கும் சென்னைக்கு அருகில் நீர்வீழ்ச்சிகளா என்று யோசிக்கிறீர்களா? ஆனால், உண்மையில் இருக்கின்றன. இயற்கைக்காட்சி, இனிமையான சூழல், பொங்கி வழியும் நீர் மற்றும் வசீகரிக்கும் நிலப்பரப்பு என நம்மை வியக்க வைக்கிறது சென்னைக்கு அருகிலுள்ள நீர்வீழ்ச்சிகள். உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஒரு நாள் பிக்னிக் செல்ல இந்த இடங்கள் தான் சரியான சாய்ஸ்! நீங்கள் செல்ல வேண்டிய அழகிய நீர்வீழ்ச்சிகளின் லிஸ்ட்!

ஆரே நீர்வீழ்ச்சி

ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆரே நீர்வீழ்ச்சி ஒரு சின்ன ட்ரெக்கிங் ஸ்பாட் ஆகும். கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் அழகான சூழலால் அலங்கரிக்கப்பட்டுள்ள நாகலாபுரத்தில் மூன்று நீர்வீழ்ச்சிகள் உள்ளன. சிறியதா ஒரு ட்ரெக்கிங் பண்ணினா போதும், அந்த அழகான ஸ்பாட்களில் நாம என்ஜாய் பண்ணலாம். இந்த இடத்தில் இருக்கிற பசுமையும், சிறு சிறு ஓடைகளும், குளங்களும், அழகான நீர்வீழ்ச்சிகளும் பயணிகளுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது. எங்கு பார்த்தாலும் பசுமையான மரங்கள், சிறு சிறு ஓடைகள், நீர்வீழ்ச்சிகள், கூழாங்கற்கள் என அந்த இடம் முழுவதுமே மிகவும் ரம்மியமாக இருக்கிறது. ஆரே நீர்வீழ்ச்சி சென்னையிலிருந்து 90 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.

tadawaterfalls

தடா நீர்வீழ்ச்சி

சென்னையின் பிஸியான வாழ்வில் இருந்து ஒரு நாள் ரெஸ்ட் எடுக்க ஒரு அற்புதமான ஸ்பாட் இது. பச்சை பசேல் சூழலில, ஜில்லுனு விழுற அருவி தண்ணியில குளிச்சி ஆட்டம் போட ஒரு சூப்பர் ஸ்பாட்டா இருக்கிற இடம் தான் இந்த தடா நீர்வீழ்ச்சி! சென்னையில் இருந்து 95 கிமீ தொலைவில் உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி ஒரு அடர்ந்த காட்டில் அமைந்துள்ளதால் இங்கு ட்ரெக்கிங் செய்வது மிகவும் பேமஸ். மொத்த மலையேற்றம் கிட்டத்தட்ட 10 கிமீ தூரம் ஆகும், வழியில் பல குளங்கள், சுற்றிலும் நல்ல பசுமை போர்வையுடன் அந்த காட்சிகள் யாவும் மனதிற்கு ஒரு வித இதமான உணர்வை தரும்.

மூல கோணா நீர்வீழ்ச்சி

பிக்னிக்கர்கள் மற்றும் மலையேற்றப் பயணிகளுக்கு பிடித்த இடமாக விளங்கும் மூல கோணா நீர்வீழ்ச்சி சென்னையிலிருந்து 109 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மூலிகை மலர்களால் ஆன பசுமையால் மூடப்பட்டிருக்கும் மலையிலிருந்து விழும் குளிர்ந்த நீர் ஒரு சிறிய குளத்தை அடைகிறது. சுமார் 10 அடி ஆழம் கொண்ட இந்த குளத்தில் நீச்சல் தெரிந்தால் நீங்கள் நீந்திக் குளிக்கலாம். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஒரு நாள் சுற்றுலா செல்ல இது ஏற்ற இடமாகும்.

talakonawaterfalls

தலகோணா நீர்வீழ்ச்சி

இந்த வெயிலில் இருந்து தப்பிச்சு சென்னைக்கு பக்கத்தில கிட்டதட்ட 270 அடி உயரத்தில இருந்து' ஆர்பரித்து கொட்டுகிற தலகோனா நீர்வீழ்ச்சியில ஜம்முன்னு ஒரு குளியலை போட்டுட்டு வந்தா நல்லா இருக்கும் இல்லையா! சென்னையிலிருந்து 190 கிமீ தூரத்தில் அமைந்துள்ள இந்த அழகான தலகோனா நீர்வீழ்ச்சி ஆண்டின் எல்லா நாட்களிலும் நீர்வரத்துடன் காணப்படுகிறது. இது ஒரு பிரபல டூரிஸ்ட் ஸ்பாட் என்பதால் நீங்கள் பயமின்றி Google maps சொல்லும் பாதையிலேயே பயணிக்கலாம். இல்லையேல் சென்னை-மாதவரம்-செங்குன்றம்-ஊத்துக்கோட்டை-பாலமங்கலம்-நாரயனவனம் என சேஷாச்சல காடுகளுக்குள் சென்று தலகோனா நீர்வீழ்ச்சியை அடையலாம்.

சதாசிவகோணா நீர்வீழ்ச்சி

அடர்ந்த மரங்கள் மற்றும் தாவரங்கள் நடுவே இருந்து விழும் குளிர்ந்த நீர் மிகவும் மகத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. சதாசிவ கோனா அதன் நீர்வீழ்ச்சிகளுக்கு மட்டும் பிரபலம் இல்லை, இது ஒரு புனித மத ஸ்தலமாகவும் பார்க்கப்படுகிறது. தாசிவ பகவான் (சிவபெருமானின் அவதாரம்) அவரது மனைவி காமாக்ஷியுடன் அருவிகளுக்கு அருகில் அமர்ந்து நமக்கு அருள் பாலிக்கிறார். மகா சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி மற்றும் கார்த்திகை மாசத்தின் அனைத்து திங்கட்கிழமைகளிலும் தமிழகம் மற்றும் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.

kailasakonawaterfalls

கயிலாச கோணா நீர்வீழ்ச்சி

நகரி மலையின் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இது, சென்னைக்கு அருகில் உள்ள புகழ்பெற்ற அருவிகளில் ஒன்றாகும். இது ஒரு சிறிய அடுக்காகும், இது ஒரு பாறையில் பிளவுபட்டு, தரையில் இருந்து 40 அடி உயரத்தில் இருந்து வெளியேறுகிறது. இந்த நீர்வீழ்ச்சியானது புத்துணர்ச்சியூட்டும் குளியலுக்குப் பெயர் பெற்றது, ஏனெனில் இங்குள்ள நீர் தூய்மையானது மற்றும் தெளிவானது மற்றும் எந்த நோயையும் குணப்படுத்தும் மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது என்று கருதப்படுகிறது.

tpkonawaterfalls

சக்ரதீர்த்தம் நீர்வீழ்ச்சி

சக்ர தீர்த்தம் நீர்வீழ்ச்சி, மத முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் புகழ்பெற்ற நீர்நிலையாகும். பிரம்மா இந்த இடத்தில் தவம் செய்ததாக நம்பப்படுகிறது, இது பின்னர் விஷ்ணுவால் தனது சுதர்சன சக்கரத்தால் சுத்தம் செய்யப்பட்டது. அவரது சக்கரம் விழுந்த இடம் சக்ர தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. சென்னைக்கு அருகில் உள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கு குணப்படுத்தும் சக்தி இருப்பதாகவும், அவர்களின் பாவங்களில் ஒன்றைப் போக்கக்கூடியதாகவும் கூறப்படுகிறது.

இந்த அனைத்து நீர்வீழ்ச்சிகளும் சென்னையிலிருந்து ஒரு நாள் சுற்றுலா செல்ல ஏற்ற இடங்களாகும்.

More News

    Read more about: chennai tamilnadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+