Search
  • Follow NativePlanet
Share
» »காபி, இங்கிலீஷ், ஹைகோர்ட், கூகுள் என வித்தியாசமான பெயர் சூட்டிக்கொள்ளும் மனிதர்கள்!

காபி, இங்கிலீஷ், ஹைகோர்ட், கூகுள் என வித்தியாசமான பெயர் சூட்டிக்கொள்ளும் மனிதர்கள்!

நாமெல்லாம் நம் குழந்தைகளுக்கு நம் முன்னோர்கள் பெயரையோ, ஜாதகம் அல்லது நியூமராலஜி பார்த்தோ பெயர்களை வைப்போம். ஆனால் இங்கே ஒரு கிராமத்தில் பெயர் வைப்பது மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. கர்நாடகாவின் பத்ராபூர் கிராமத்தில் காபி, கூகுள், பிரிட்டிஷ், அமிதாப், அனில் கபூர், உயர்நீதிமன்றம், குளுக்கோஸ் மற்றும் இங்கிலீஷ் என மிகவும் அசாதாரணமான பெயர்களைச் சூட்டிக் கொள்கின்றனர். வினோதமான பெயரிடும் பாரம்பரியத்தை பலர் வேடிக்கையாகக் கண்டாலும், குழந்தைகள் அதை நகைச்சுவையாக எடுத்துக் கொள்வதில்லை. ஒவ்வொரு குழந்தையின் பெயருக்கும் பின்னால் ஒரு கதை இருக்கும். அது என்ன கதை என்று பார்ப்போம் வாருங்கள்!

bhadrapurcover

குழந்தைகளுக்கு வித்தியாசமாக பெயர் சூட்டும் கிராமம்

உங்கள் குடும்பம் அல்லது அக்கம் பக்கத்தில் நடைபெறும் பல பெயர் சூட்டும் விழாக்களில் நீங்கள் கலந்து கொண்டிருப்பீர்கள். இந்தியாவில் பெயர் சூட்டுதல் ஒரு பெரிய மற்றும் முக்கியமான செயல்பாடு என்று நாம் அனைவருக்குமே தெரியும். ஒரு குழந்தைக்கு ஒரு பெயரைத் தேர்ந்தெடுப்பது எளிதான காரியமல்ல; தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர் குழந்தைக்கும் அவர்கள் வளர்ந்த பிறகு அவர்களின் ஆளுமைக்கும் பொருந்த வேண்டும். ஆனால் இங்கே ஒரு சமூகம் மிகவும் விசித்திரமான பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு சூட்டுகின்றது.

பெங்களூருக்கு அருகாமையில் உள்ள அதிசய கிராமம்

கர்நாடகாவின் பத்ராபூரில் உள்ள ஹக்கி பிக்கி பழங்குடியின சமூகம் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் வினோதமான பாரம்பரியத்தை பிரபல மக்கள் மற்றும் பொருட்களின் பெயரைத் தொடங்கினர். வினோதமான பெயரிடும் பாரம்பரியத்தை பலர் வேடிக்கையாகக் கண்டாலும், குழந்தைகள் அதை நகைச்சுவையாக எடுத்துக் கொள்வதில்லை. ஒவ்வொரு குழந்தையின் பெயருக்கும் பின்னால் ஒரு கதை இருக்கிறது அந்த ஊர் மக்கள் கூறுகின்றனர்.

bhadrapur1

காபி, குளுக்கோஸ், டாலர், மைசூர் பாக் என பெயர்கள்

குழந்தைகளுக்கு மைசூர் பாக், ஷாருக், சுப்ரீம் கோர்ட், அமெரிக்கா, ஒபாமா, ஒன் பை டூ, ரன்பீர், பஸ், ரயில், டாலர், பிரிட்டிஷ், காபி, குளுக்கோஸ் என மிகவும் அசாதாரணமான பெயர்களைச் சூட்டிக் கொள்கின்றனர். 'பெயரில் என்ன இருக்கிறது?' என்ற ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற பழமொழியை அவர்கள் கொஞ்சம் சீரியஸாக எடுத்துக்கொண்டது போல் தெரிகிறது.

bhadrapur1

இதுதான் காரணமாம்

கர்நாடகாவின் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இவர்களிடம் இது குறித்து கேட்டபோது, குழந்தைக்குப் பெயர் சூட்டுவதில் பல காரணிகளைக் கருத்தில் கொண்டதாகத் தெரிவித்தனர். அவர்கள் சமீபத்தில் சென்ற இடங்கள், அவர்கள் ருசித்த மற்றும் விரும்பிய உணவுப் பொருட்கள், பிடித்த பிரபலங்கள் மற்றும் அவர்களுக்கு பிடித்த விஷயங்களின் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு சூட்டி மகிழ்கின்றனர்.

bhadrapur1

காடுகளில் இருந்து தனி கிராமத்திற்கு சென்ற மக்கள்

ஏறக்குறைய நான்கு தசாப்தங்களுக்கு முன்பு, அதிகம் அறியப்படாத பழங்குடியினர் காட்டில் வாழ்ந்தனர். ஆனால் 1970 களில் வனத்துறையால் செயல்படுத்தப்பட்ட கடுமையான வேட்டைச் சட்டங்கள் மற்றும் பிற தொடர்புடைய நடைமுறைகள் காரணமாக, அரசாங்கம் அவர்களை பெங்களூருக்கு அருகிலுள்ள பத்ராபூர் போன்ற நகர்ப்புறங்களுக்கு மாற்றியது.

மிகவும் திறமையான ஹக்கி பிக்கி பழங்குடியின மக்கள்

சமூகத்தின் பழங்குடியினர் கிட்டத்தட்ட 14 பேச்சுவழக்குகளின் கலவையைப் பேச முடியும். ஹக்கி பிக்கி சமூகத்தில், மணமகன் மணமகளுக்கு வரதட்சணை கொடுக்கிறார். மேலும் பிரிவின் போது, திருமணத்தின் போது ஆண் கொடுத்த வரதட்சணையில் பாதியை பெண் திருப்பித் தர வேண்டுமாம். ஹக்கி பிக்கி என்றால் கன்னடத்தில் "பறவை பிடிப்பவர்கள்" என்று பொருள். ஹக்கி பிக்கி பழங்குடியினர் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளனர் மற்றும் ராஜ்புத் மன்னர் ராணா பிரதாப்புடன் தன்னை இணைத்துக் கொள்கின்றனர்.

இந்த பழக்க வழக்கத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மக்களே!

More News

    Read more about: bhadrapur karnataka
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+