Search
  • Follow NativePlanet
Share
» »தக்கான பீட பூமி கேள்விப்பட்டிருப்பீங்க, ஆனா அது எங்க இருக்கு தெரியுமா ?

தக்கான பீட பூமி கேள்விப்பட்டிருப்பீங்க, ஆனா அது எங்க இருக்கு தெரியுமா ?

தக்கான பிடபூமி குறித்து சிறுவயதில் இருந்து கேள்விப்பட்டிருப்போம். ஆனா, இந்தியாவில் இது எந்த நிலப்பரப்பை குறிக்கிறது ?, அங்கே எந்த மாதிரியான சிறப்பு அம்சங்கள் எல்லாம் உள்ளது என தெரியுமா ?

தக்கான பீடபூமின்னு நம் பள்ளிப் பருவத்தில் இருந்தே பாடபுத்தகங்களில் படித்து வந்திருப்போம். இன்றும், ஒருசில பருவநிலை குறித்த செய்திகளை பார்க்கும் போது இந்த வார்த்தை உபயோகிக்கப்படும். ஆனால், தக்கான பீடபூமி என்றால் என்ன ?. அது எந்தப் பகுதியைக் குறிக்கிறது என்று என்றாவது சிந்தித்தது உண்டா ?. இந்த பீடபூமி குறித்த முழுத் தகவலையும், இப்பகுதியில் உள்ள அம்சங்களையும் அலசி ஆராய்வோம் வாங்க.

தக்கான பீடபூமி

தக்கான பீடபூமி

தக்கான பீடபூமி என்பது பழைமையான நிலப்பகுதிகளாகும். அதாவது பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பசுமை நிறைந்த சமவெளிப் பகுதியில் அல்லது மலைப் பிரதேசத்தில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் காரணமாக தன்மை மாறுபட்டு பின் சற்று வரண்ட நிலமாக இன்று காட்சியளிக்கும் பகுதிகள் தக்கான பீடபூமியாக உள்ளன. இந்தியாவில் தக்கான பூமியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலத்தடியில் சில கிலோ மீட்டர் ஆழத்தில் முன்னொரு காலத்தில் வழிந்துசென்ற எரிமலைக் குழம்பான லாவா படிந்திருப்பதைக் கொண்டு இவை கணிக்கப்படுகிறது.

wikipedia

இந்தியாவில் தக்கான பீடபூமி

இந்தியாவில் தக்கான பீடபூமி

இந்தியாவைப் பொருத்தவரையில் தக்கான பீடபூமி பெரிய நிலப்பரப்பாக உள்ளது. அதாவது, மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத் தொடர்ச்சி மலை மற்றும் விந்திய மலைத் தொடர் என மூன்றுமலைத் தொடருக்கும் இடைப்பட்ட பகுதிகள் பீடபூமிகளாக உள்ளன. அவற்றுள் தென்னிந்தியாவில் இந்த தக்கான நிலப்பரப்பு அதிகளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Nichalp

மேற்குத் தொடர்ச்சி மலை

மேற்குத் தொடர்ச்சி மலை

மேற்கு தொடர்ச்சி மலை தக்கான பீடபூமிக்கு மேற்கே அமைந்துள்ளது. மகாராஷ்டிராவில் வரை நீண்டுள்ள இந்த மலைத் தொடர் கோவா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு வழியாகத் தெற்கே கன்னியாகுமரி வரை நீண்டுள்ளது. தமிக கேரளாவை இரண்டாகப் பிரிக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஆனைமுடி பகுதி இந்த மலைத்தொடரின் உயரமான சிகரமாகும். அதாவது இதன் உயரம் மட்டுமே 8,842 அடி கொண்டது.

User;Cj.samson

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

மேற்குத் தொடர்ச்சி மலை உலகளவில் பிரசிதிபெற்ற சுற்றுலா அம்சங்களுக்கு பெயர் பெற்றது. குறிப்பாக, இம்மலைத் தொடரின் அங்கங்களான ஊட்டி, கொடைக்கானல், இந்தியாவின் இரண்டாவது மிக உயரமான ஜோக் அருவி என பல்வேறு சுற்றுலா அம்சங்கள் இங்கே நிறைந்து காணப்படுகின்றன. மேலும், தமிழகம், கர்நாடகா, மகாராஸ்டிராவில் பாயும் பெரும்பாலான நதிகளின் பிறப்பிடமாகவும் மேற்குத் தொடர்ச்சி மலை உள்ளது.

Debaditya

கிழக்குத் தொடர்ச்சி மலை

கிழக்குத் தொடர்ச்சி மலை

மேற்குத் தொடர்ச்சி மலையைப் போலவே தக்கான பீடபூமிக்கு கிழக்கே உள்ளது, கிழக்குத் தொடர்ச்சி மலை. இந்தியாவின் குறிக்கே பாயும் மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா நதி, காவிரி ஆறு உள்ளிட்ட பெரிய நதிகளால் கிழக்குத் தொடர்ச்சி மலை ஆங்காங்கே பிளவுபட்டதைப் போல காட்சியளிக்கும். வங்காளப் பகுதி இதன் தொடர்ச்சியாக இருந்தாலும் விசாகப்பட்டினம், புவனேஷ்வர் உள்ளிட்ட பகுதிகளில் பிளவுற்று தமிழகம் வரை சிறுசிறு மலைத் தொடர்களாகவே பரவிக் கிடக்கிறது கிழக்குத் தொடர்ச்சி மலை.

Manojsahuctp

விந்திய மலைத் தொடர்

விந்திய மலைத் தொடர்

இந்தியாவின் மத்தியப் பகுதியில் உள்ள விந்திய மலைத் தொடர் நாட்டை வட இந்தியா, தென் இந்தியா என இரண்டாகப் பிரிக்கிறது. விந்திய மலையின் மேற்கே குஜராத், கிழக்கே மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய பகுதிகளை எல்லையாகக் கொண்டுள்ளது. மேலும், இம்மலைக்கும், ஆரவலி மலைத் தொடருக்கும் இடைப்பட்ட பகுதிகள் வறண்ட பகுதிகளாக காட்சியளிக்கின்றன.

wikipedia

தமிழகத்தில் தக்கான பீடபூமி

தமிழகத்தில் தக்கான பீடபூமி


மேற்கூறியதைப் போல தென்திந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் தக்கான பிடபூமிகளாக காட்சியளிக்கின்றன. அதற்குக் காரணம் பல நூறு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வெடித்த எரிமலையின் சீற்றம் என்பதையும் பார்த்தோம். அப்படி என்றால் தமிழகத்திலும் எரிமலை இருந்ததா என்ற சந்தேகத்திற்கு சான்று தான் அரியலூர் மாவட்டம். இங்கே தொல்லியல் ஆய்வில் கிடைக்கப்பெற்ற சான்றுகள் அதிர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ளது.

எரிமலையால் அழிந்த டைனோசர்கள்

எரிமலையால் அழிந்த டைனோசர்கள்

முன்னொரு காலத்தில் தமிழகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் டைனோசர் எனும் மிகப் பெரிய உயிரிணங்கள் வாழ்ந்து வந்திருப்பதும் அவை எரிமலையின் சீற்றத்தால் அழிந்திருப்பதையும் விளக்கும் வகையில் அரியலூர் மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற டைனோசர்களின் முட்டைகள் மூலம் அறியமுடிகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரியலூரில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் நிலத்தடியில் இருந்து கிடைத்த பெரிய அளிவலான முட்டையை ஆராய்ந்த விஞ்ஞானிகள் இது டைனோசரின் முட்டைகள் என்றும், அவற்றில் படிந்திருப்பது எரிமலைக் குழம்பு என்றும், எரிமலையினால் தான் இவைகள் முற்றிலுமாக அழிந்திருக்கக்கூடும் என்றும் அறிவித்தனர்.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+