Search
  • Follow NativePlanet
Share
» »ராஜ்தாரி தேவ்தாரி நீர்வீழ்ச்சிகள் - சிறப்பு சுற்றுலா!

ராஜ்தாரி தேவ்தாரி நீர்வீழ்ச்சிகள் - சிறப்பு சுற்றுலா!

ராஜ்தாரி மற்றும் தேவ்தாரி நீர்வீழ்ச்சிகளை நாம் சந்தரப்ரபா சரணாலயத்தில் காணலாம். அழிவின் விழிம்பிற்கு சென்று விட்ட ஆசிய சிங்கங்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த சரணாலயத்தில் பல்வேறு விலங்குகள் ம

By Udhaya

ராஜ்தாரி மற்றும் தேவ்தாரி நீர்வீழ்ச்சிகளை நாம் சந்தரப்ரபா சரணாலயத்தில் காணலாம். அழிவின் விழிம்பிற்கு சென்று விட்ட ஆசிய சிங்கங்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த சரணாலயத்தில் பல்வேறு விலங்குகள் மற்றும் பறவை இனங்கள் காணப்படுகின்றன. விலங்குகள் மற்றும் பறவைகளை தவிர்த்து இங்கு சுற்றுலா முக்கியத்தும் வாய்ந்த பல்வேறு இடங்கள் உள்ளன.வாருங்கள் ஒரே நாளில் அனைத்தையும் சுற்றிப் பார்க்கும் ஒரு சுற்றுலா செல்வோம்.

 ராஜ்தாரி மற்றும் தேவ்தாரி நீர்வீழ்ச்சிகள்

ராஜ்தாரி மற்றும் தேவ்தாரி நீர்வீழ்ச்சிகள்

ராஜ்தாரி மற்றும் தேவ்தாரி நீர்வீழ்ச்சிகள் மிக முக்கியமானவை. படிகம் போன்ற தெளிந்த நீர் பாறைகள் மீது குதித்து வரும் காட்சியானது பார்வையாளர்களுக்கு மூச்சடைய வைக்கும் ஒரு அழகிய காட்சியாகும். இந்த நீர்வீழ்சியை சுற்றியுள்ள இடங்களின் கண்ணுக்கினிய அமைதியான சூழல் பார்வையாளர்களுக்கு ஒரு மெய் மறக்கச் செய்யும் அனுபவத்தை தருகிறது

 வாரணாசியிலிருந்து

வாரணாசியிலிருந்து


இந்த சரணாலயம் வாரணாசி நகரத்தில் இருந்து சுமார் 55 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கு சுற்றுலா வரும் மக்கள் பொதுவாக ஒரு நாள் பயணமாகவே வருகின்றனர். இங்கு சுற்றுலா பயணிகளுக்கு தங்கும் வசதி இல்லை எனினும் சிற்றுண்டி மற்றும் குடிநீர் வழங்கும் வழங்கும் பல உணவகங்கள் உள்ளன.

சந்தெளளி நகரம்

சந்தெளளி நகரம்

`நரொதம்' குடும்பத்தை சேர்ந்த `பர்ஹௌலியா ராஜபுத்திர' வம்சத்தவரான `சந்திர ஷா' என்பவரால் நிறுவப்பட்ட சந்தெளளி நகரம் வாரணாசியில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சந்திர ஷாவின் வழித்தோன்றல்களால் பிற்காலத்தில் இங்கு ஒரு கோட்டை கட்டப்பட்டது. இந்த கோட்டை அழிவின் விளிம்பில் இருந்தாலும் இன்றும் பார்வையாளர்களை பெரிதும் கவர்கிறது.

சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்

சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்


சந்தெளளியில் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் உள்ளன. அவற்றுள் `ஹகியா காளி மந்திர்' மற்றும் `பாபா லதீப்ஷா'வின் கல்லறை போன்றவை மிக முக்கியமானவை. சந்தெளளி வனவிலங்கு சரணாலயம் இங்குள்ள சுற்றுலா தலங்களுக்கு எல்லாம் சிகரமாக விளங்குகிறது.

இந்தியாவில் அதிகம் அறியப்படாத சரணாலயங்களில் ஒன்றான இங்கு, விலங்குகள், பறவைகள் மற்றும் தாவரங்களின் பல்வேறு வகைகள் காணப்படுகின்றன. வெகுஜனசுற்றுலாவில் இருந்து தப்பித்து வரும் இந்த சரணாலயம் அதனுடைய உண்மையான அழகை தன்னுள் பாதுகாத்து வருகிறது. இது ஆசிய சிங்கங்களை பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட சரணாலயம் ஆகும். ஆசிய சிங்கங்கள் அழிவின் விழிம்பில் இருப்பதனால் இந்த சரணாலயத்தில் பாதுகாக்கப்படுகின்றன.

 மற்ற விலங்குகள்

மற்ற விலங்குகள்

இந்த சரணாலயம் பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு இருப்பிடமாக திகழ்கிறது. இந்த சரணாலயத்தில் பல்வேறு சுற்றுலா இடங்கள் மற்றும் அடர்ந்த காடுகள் உள்ளன. இங்கு மயிர்கூச்செரியும் `ராஜ்தாரி' மற்றும் `தேவ்தாரி' என்கிற இரண்டு நீர்வீழ்ச்சிகளை பயணிகள் கண்டு ரசிக்கலாம்.

சந்தெளளியை பார்க்க சிறந்த நேரம் அக்டோபர் மற்றும் மார்ச் வரை உள்ள 6 மாதங்களே சந்தெளளிக்கு சுற்றுலா ஆகும். சந்தெளளியை விமானம், ரயில் மற்றும் சாலை வழியாக எளிதாக அணுகலாம்.

 சந்தரப்ரபா சரணாலயம்

சந்தரப்ரபா சரணாலயம்

சந்தெளளி மாவட்டத்தில் உள்ள ஒரு மிகச் சிறந்த சுற்றுலா தலமாகும். இங்கு சிங்கங்கள் தவிர முள்ளம்பன்றி, பிளாக்புக்களை, சீதல் மான், காட்டுப்பன்றி, சம்பார் மற்றும் நீலான் மான், மற்றும் இந்திய வகை அழகிய மான் போன்ற வன விலங்குகள் காணப்படுகின்றன. அதோடு இங்கு ஊர்வன இனத்தை சேர்ந்த காரியள் மற்றும் பைதான் போன்றவற்றையும் பார்க்க முடியும்.

இந்த சரணாலயம் பறவை விரும்பிகளுக்கு ஒரு சிறந்த இடமாகும். இங்கு சுமார் 150 இனங்களை சேர்ந்த உள்நாட்டு மற்றும் இடம் பெயரும் பறவைகள் காணப்படுகின்றன. இ சரணாலயம் சுமார் 78 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு பரந்து விரிந்துள்ளது. விந்திய காட்டின் வரம்பில் உள்ள இந்த சரணாலயம் நௌகர்ஹ் மற்றும் விஜைகர்ஹ் போன்ற குன்றுகளை உள்ளடக்கியுள்ளது.

More News

    Read more about: travel waterfalls
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+