Search
  • Follow NativePlanet
Share
» »ஊட்டியில் போனால் கண்டிப்பாக மிஸ் பண்ணக் கூடாத விஷயங்கள்

ஊட்டியில் போனால் கண்டிப்பாக மிஸ் பண்ணக் கூடாத விஷயங்கள்

தமிகத்தின் மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும், முக்கியமான மலை வாசஸ்தலங்களில் ஒன்றாகவும் உள்ளது ஊட்டி. மலைகளின் ராணியான ஊட்டி, அழகான மலைகள், ஜில்லென்ற குளிர்ச்சி, அருவிகள், இயற்கை அழகு ஆகியவை கொட்டி கிடக்கும் இடமாகும். ஊட்டியில் அவசியம் தவற விடக் கூடாத விஷங்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Ooty

மலை ரயில் :

ஊட்டியில் மிஸ் பண்ணாமல் அவசியம் அனுபவிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்று ஊட்டி மலை ரயில் பயணம். ஊட்டிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து மலை ரயில் இயக்கப்படுகிறது. பசுமையான மரங்கள், பல வண்ண மலர்கள் என கண்ணுக்கு விருந்தாக மலை ரயில் பயணத்தை கிட்டத்தட்ட 5 மணி நேரம் அனுபவிக்கலாம். வழியில் மலைகளைக் குடைந்து குகைப் பாதைகள் அமைத்திருக்கிறார்கள். இதற்குள் பயணிப்பது மிகவும் சுவாரசியமான அனுபவமாக இருக்கும்.

தொட்டபெட்டா

ஊட்டியில் உள்ள பிரபலமான இடங்களில் இதுவும் ஒன்று. ஊட்டியில் இருந்து 10.கி.மீ., தொலைவில் அமைந்துள்ள தொட்டபெட்டா கடல் மட்டத்திலிருந்து சுமார் 2623 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள தொலைநோக்கி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன தொலைநோக்கு வழியாக தொலைவில் இருக்கும் இயற்கை காட்சிகளை மிக பக்கத்தில் சென்று பார்ப்பது போல் ரசித்து மகிழலாம். ஊட்டியில் இருந்தும், கோத்தகிரியில் இருந்தும் தொட்டபெட்டா செல்வதற்கு பஸ் வசதி, ஜீப் வசதி உள்ளது.

Ooty

தாவரவியல் பூங்கா

ஊட்டியில் பார்க்க வேண்டிய பிரபலமான இடங்களில் இதுவும் ஒன்று. 1847 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த பூங்கா 22 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கபப்ட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் ஊட்டி மலர் கண்காட்சி இந்த பூங்காவில் தான் நடத்தப்படுகிறது. பல அரிய வகை தாவரங்கள் இந்தப் பூங்காவில் இடம் பெற்றுள்ளது.

ரோஜா பூங்கா

ரோஜாக்களுக்கு பெயர் ஊர் ஊட்டி தான். தாவரவியல் பூங்காவிற்கு அருகிலேயே இந்த ரோஜா பூங்காவும் அமைந்துள்ளது. உலகின் சிறந்த ரோஜா தோட்டங்களில் இதுவும் ஒன்று. சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தியாவிலேயே அதிக அளவிலான ரோஜா வகைகளை கொண்டு பூங்கா இது தான். இந்த பூங்காவில் மட்டும் சுமார் 3600 வகையான ரோஜா செடிகள் உள்ளன.

படகுத்துறை :

விடுமுறைகளில் குடும்பத்துடன் படகு சவாரியை என்ஜாய் பண்ண வேண்டும் என்றால் ஊட்டிக்கு தான் செல்ல வேண்டும். இந்த செயற்கை ஏறி சுமார் 3 கிலோ மீட்டர் நீளம் கொண்டது இங்கு குடும்பத்துடன் போட்டிங் செய்யவும், ஏரியை சுற்றி வாக்கிங் செல்வதற்கும் இட வசதி உள்ளது. அமைதியாக ஒரு நீண்ட படகு சவாரியை என்ஜாய் பண்ண இங்கு செல்லலாம்.

Ooty

குன்னூர்

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் வழியில் 20 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது குன்னூர். குளுமையை அனுபவிக்கவும், சூடான உணவுகளை சுவைத்து மகிழவும் குன்னூர், ஷாப்பிங் செய்து மகிழவும் ஏற்ற இடம் குன்னூர். ஊட்டி செல்பவர்கள் தவறாமல் செல்ல வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று.

டால்பின் நோஸ்

குன்னூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது ஊட்டியில் உள்ள மிக முக்கியமான வியூ பாயிண்ட்களை கொண்ட இடம் ஆகும் இங்கு நின்று பார்த்தால் கேதரின் நீர்வீழ்ச்சியை கண்டு ரசிக்கலாம். மற்றொரு வியூ பாயிண்ட்டான கேம்ப்ஸ் ராக்கில் இருந்து பார்த்தால் ஒட்டுமொத்த ஊட்டியின் அழகையும் கண்டு ரசிக்கலாம். அடுத்த முறை ஊட்டிக்கு சென்றால் மறக்காமல் இங்கு சென்று விட்டு வாருங்கள்.

சிம்ஸ் தாவரவியல் பூங்கா

குன்னூரில் உள்ள சிம்ஸ் தாவரவியல் பூங்கா குழந்தைகள் விளையாட மிகவும் ஏற்ற இடம். இங்கு குழந்தைகள் விசையாடி மகிழ பல வசதிகள் செய்யப்பட்டுள்ளது. சிறிய நீச்சல் குளம், இந்த பூங்காவை சுற்றி விற்கப்படும் சீசன் பழங்கள் ஆகியவை சுற்றுலா பயணிகளை பெரிதும் கவரக்கூடியது.

More News

    Read more about: ooty tamil nadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+