Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் இருக்கும் உப்புப் பாலைவனத்தின் மர்மங்கள் !!

இந்தியாவில் இருக்கும் உப்புப் பாலைவனத்தின் மர்மங்கள் !!

By Super Admin

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பறந்துவிரிந்திருக்கும் இந்திய தேசத்தில் புதிர் நிறைந்த புவியமைப்புகள் ஏராளமாக உண்டு.

அறிவியலுக்கு விளங்காத இயற்கை அதிசயங்களும், அமானுஷ பிரதேசங்களும், ஆன்மீக ஸ்தலங்களும் இங்கே நிறையவே இருக்கின்றன. அப்படிப்பட்ட இடங்களில் ஒன்று தான் குஜராத் மாநிலத்தில் இருக்கும் உப்புப் பாலைவனமான ரன் ஆப் கட்ச் ஆகும்.

உலகில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருக்கும் உப்பு பாலைவனங்களில் இதுவும் ஒன்றாகும். வாருங்கள், இதன் பின்னால் இருக்கும் மர்மங்கள் என்ன என்பதை தெரிந்துகொள்வோம்.

ரன் ஆப் கட்ச் !!

ரன் ஆப் கட்ச் !!

குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் மாவட்டத்தில் கிட்டத்தட்ட7,505.22சதுர.கி.மீ பறந்துவிரிந்திருக்கும் உப்புப்படிந்த, உயிர்வாழ்வதற்கு சற்றும் வழியில்லாத இடம் தான் இந்தரன் ஆப் கட்ச் என்னும் உப்பு பாலைவனமாகும்.

Axel Drainville

ரன் ஆப் கட்ச் !!

ரன் ஆப் கட்ச் !!

ரன் என்ற வார்த்தை ஹிந்தியில் பாலைவனம் என்று பொருள்படுகிறது. இது கட்ச் என்ற இடத்தில இருப்பதால் ரன் ஆப் கட்ச் என்று அழைக்கப்படுகிறது.

மாவீரர் அலெக்ஸாண்டரே கூட இந்தியாவை நோக்கி படையெடுப்பதற்கு முன்பாக இந்த இடத்தை பற்றிஅறிந்து வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது.

Roshan Panjwani

ரன் ஆப் கட்ச் !!

ரன் ஆப் கட்ச் !!

கட்ச் வளைகூடாவின் முனையில் பாகிஸ்தானின் சிந்து நதியை ஒட்டியபடி இருக்கும் இந்த பாலைவனத்தின் நுழைவு வாயிலாக இருப்பது சுரேந்தரநகர் மாவட்டத்தில் இருக்கும் கஹரகோடா என்ற கிராமமாகும்.

B Fatty

ரன் ஆப் கட்ச் !!

ரன் ஆப் கட்ச் !!

இப்போது உப்பு நிறைந்த பகுதியாக இருக்கும் இந்த இடம் ஒரு காலத்தில் கடலால் சூலப்பட்டிருந்ததாகவும், பின்னர் ஏற்ப்பட்ட புவியியல் மாற்றங்கள் காரணமாக இந்த நிலப்பகுதி கடல்மட்டத்தில் இருந்து 15மீ அளவுக்கு உயர்ந்து கடலோடு தொடர்பை இழந்ததாகவும், அந்த கடல் நீர் ஆவியானதன் காரணமாகத்தான் இந்த உப்பு பாலைவனம் உருவானதாக சொல்லப்படுகிறது.

Axel Drainville

ரன் ஆப் கட்ச் !!

ரன் ஆப் கட்ச் !!

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் ஆரம்பித்து தற்போது ராஜஸ்தானில் முடிவடையும் காஜ்ஜர் என்ற ஆறு இந்த ரன் ஆப் கட்ச் வரை பாய்ந்ததற்கான ஆதாரங்கள் இங்கே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Axel Drainville

ரன் ஆப் கட்ச் !!

ரன் ஆப் கட்ச் !!

பாலைவன பகுதியாக இருந்தாலும் இங்கே ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர். அவர்களுக்காகவே குஜராத் மாநில அரசால் ரன் உத்சவ் என்ற திருவிழா கொண்டாடப்படுகிறது.

இவ்விழாவில் குஜராத்திய பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள், உணவு விருந்து, விளையாட்டு போட்டிகள் போன்றவை நடத்தப்படுகின்றன.

Axel Drainville

ரன் ஆப் கட்ச் !!

ரன் ஆப் கட்ச் !!

ரன் ஆப் கச்சை பற்றிய மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

Nagarjun Kandukuru

More News

    Read more about: gujarat adventure road trip
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+