Search
  • Follow NativePlanet
Share
» » கோடை 2023: சென்னை to குடகு – பயணம், சுற்றிப் பார்க்கும் இடங்கள், செலவுகள்!

கோடை 2023: சென்னை to குடகு – பயணம், சுற்றிப் பார்க்கும் இடங்கள், செலவுகள்!

நாம் ஏற்கனவே கோடை 2023 என்ற தலைப்பின் கீழ் சென்னையிலிருந்து ஊட்டி, மூணாறு, கொடைக்கானலுக்கு கம்மி பட்ஜெட்டில் சுற்றுலா செல்வது பற்றி பார்த்தோம் அல்லவா! இப்போது இந்த கட்டுரையில் சென்னையிலிருந்து கர்நாடகாவில் இருக்கும் அழகிய சுற்றுலாத் தலமான இந்தியாவின் ஸ்காட்லாந்து என்றழைக்கப்படும் குடகு மலைக்கு (Coorg) குறைவான பட்ஜெட்டில் சுற்றுலா எப்படி செல்லுவது என்று பார்ப்போம். சரியாக திட்டமிட்டால் இந்த கோடையை குடகில் அசத்தலாக அனுபவிக்கலாம். சென்னையிலிருந்து குடகிற்கு பஸ் மற்றும் ரயில் பயணம், குடகில் உள்ள தங்குமிடங்கள், எந்தெந்த இடங்களைச் சுற்றி பார்ப்பது குறித்து இங்கே காண்போம்!

coorgcover

சென்னையிலிருந்து குடகிற்கு ரயில் பயணம்

மைசூர் ரயில் நிலையம், குடகிற்கு அருகிலுள்ள ரயில் நிலையமாகும். கூர்க்கிலிருந்து சுமார் 107 கிமீ தொலைவில் அமைந்துள்ள மைசூர் ரயில் நிலையம் இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களுடனும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது மற்றும் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கும் வழக்கமான ரயில் அட்டவணையைக் கொண்டுள்ளது. சென்னையிலிருந்து தினமும் காவேரி எக்ஸ்ப்ரஸ் மைசூருக்கு இயக்கப்படுகிறது. இதற்கான கட்டணம் ரூ.265 இல் இருந்து ஆரம்பிக்கிறது.

talakaveri1

சென்னையிலிருந்து குடகிற்கு சாலைப் பயணம்

சென்னையிலிருந்து குடகு கிட்டத்தட்ட 580 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. குடகை அடைய நேரடியாக தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. நீங்கள் பெங்களூரு சென்று அங்கிருந்து க்கூட குடகை அடைந்திடலாம். ஆனால் சில தனியார் பேருந்துகள் சென்னையிலிருந்து குடகிற்கு பேருந்துகளை இயக்குகின்றன. பயண நேரம் சுமார் 14 மணி நேரம் ஆகும் மற்றும் அதர் டிக்கெட் விலை ரூ.2700.

சென்னையிலிருந்து குடகிற்கு விமானப் பயணம்

சென்னையிலிருந்து தினமும் மைசூருக்கு விமான சேவை செயல்படுகிறது. நீங்கள் முன்கூட்டியே டிக்கெட் புக் செய்தால் ரூ.2500 இல் விமான டிக்கெட் புக் செய்து கொள்ளலாம். நீங்கள் சென்னையிலிருந்து மங்களூர் விமான நிலையத்தை அடைந்தும் கூட குடகை எளிதாக அடையலாம். விமான நிலையங்களிலிருந்து ஷேர் டாக்ஸிகள் அல்லது பேருந்து மூலம் மடிக்கேரியை அடையலாம்.

coorg2

குடகில் உள்ள மலிவான ஹோட்டல்கள் மற்றும் ஹோம்ஸ்டேகள்

குடகு போன்ற அழகான மலைவாசஸ்தலங்களுக்கு சுற்றுலா செல்லும் போது, பணத்தை மிச்சப்படுத்த அங்கிருக்கும் ஹோம்ஸ்டேகளில் தங்கிக் கொள்வது புத்திசாலித்தனம் என்றே சொல்லலாம். இந்த அழகிய ஹோமேஸ்டே செட் அப் எல்லாம் நகரங்களில் கிடைக்காது அல்லவா. Its by treebo, Vaishanvi villa, Zostel coorg, Hotel caveri comfort inn, Coorg daffodils homestay, holistic stay resort போன்ற இடங்களில் தங்கிக் கொள்ளலாம். அல்லது நீங்கள் கம்மி பட்ஜெட்டின் குடகில் ரூம் புக்கிங் செய்ய ஹோட்டல் புக்கிங் இணையத்தளங்களை (Hotel booking service providers) கூட பார்வையிடலாம்.

dubareelephantsafari1

குடகில் நீங்கள் கட்டாயம் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள்

இயற்கையின் அழகிய காட்சிகளுக்கு மத்தியில் அமைந்திருக்கும் இந்தியாவின் ஸ்காட்லாந்து எனப்படும் குடகு மலை வசீகரமான சுற்றுலாத்தலங்களுடன் நம்மை வரவேற்கிறது. நீங்கள் கட்டாயம் கீழ்கண்ட இடங்களை எல்லாம் மிஸ் பண்ணாமல் சுற்றிப் பார்க்க வேண்டும்!

1. ராஜா சீட் - ராஜா சீட் என்ற வியூபாயிண்டில் இருந்து குடகு மலையின் பள்ளத்தாக்குகளையும், அழகிய காட்சிகளையும் கண்டு ரசிக்கலாம்.

2. தடியாண்டமோல் சிகரம் - 5,700 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த குடகின் மிக உயரமான சிகரம், ட்ரெக்கிங் செய்ய ஒரு அற்புதமான ஸ்பாட் ஆகும்.

3. அபே நீர்வீழ்ச்சி - மடிகேரி நகரத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த ஆழகிய நீர்வீழ்ச்சி, கூர்க் மற்றும் அதைச் சுற்றியுள்ள மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். 70 அடி உயரத்தில் இருந்து பாறையிலிருந்து கீழே வரும் நீர் அருவி பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.

4. காபி தோட்டங்கள் - கூர்க்கில் செய்ய வேண்டிய மிக அற்புதமான விஷயங்களில் ஒன்று அங்கிருக்கும் காபி தோட்டங்களை கண்டு களிப்பதாகும்.

5. நம்ட்ரோலிங் மடாலயம் - கூர்க்கிலிருந்து 34 கி.மீ தொலைவில் அமைந்துள்ள நம்ட்ரோலிங் மடாலயம் ஒரு ஆன்மீக சுற்றுலாத் தலமாகும். மிகவும் அழகிய கட்டமைப்புடன் அமைதியாக இருக்கும் இந்த இடம் மனதிற்கு ஒரு வித புத்துணர்ச்சியை அளிக்கிறது.

6. இருப்பு அருவி - பிரம்மகிரி மலைத் தொடரில் அமைந்துள்ள இந்த நன்னீர் அருவி அதன் இயற்கை அழகால் நம்மை வசீகரிக்கிறது.

7. குமார பர்வத மலை - சுற்றிலும் பசுமை மற்றும் அழகிய காட்சிகளால் நிரம்பியிருக்கும் இந்த மலையில் முகாமிட்டு தங்குவது மிகவும் பேமஸ்.

8. மடிகேரி கோட்டை - மடிகேரி கோட்டை பல புகழ்பெற்ற ஆட்சியாளர்கள் மற்றும் வம்சத்தின் வாழ்க்கை, எழுச்சி மற்றும் வீழ்ச்சியைக் காண ஒரு பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்து வருகிறது.

9. தலைகாவேரி - பாகமண்டலத்திற்கு அருகில் உள்ள பிரம்மகிரி மலையில் அமைந்துள்ள காவேரி நதியின் பிறப்பிடமாக தலைகாவேரியை பார்வையிடாமல் குடகு பயணம் நிறைவு பெறாது. இங்கே மேகங்கள் உங்களை தொட்டு செல்வதோடு, இந்த இடத்தின் அழகு நம்மை வசியம் செய்கிறது.

10. துபாரே யானைகள் முகாம் - குடகில் உள்ள சுற்றுலாத் தலங்களில் மிகவும் மகிழ்ச்சிகரமான சுற்றுலாத்தலமாக விளங்கும் இந்த யானைகள் முகாமில் நீங்கள் யானைகளை குளிக்க வைக்கலாம், விளையாடலாம்.

11. ரிவர் ராப்ஃடிங் - குடகில் அமைந்துள்ள பாரபோல் நதியின் அழகிய நிலப்பரப்புகள் வழியே ரிவர் ராப்ஃடிங் செய்வது சாகச ஆர்வலர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

12. ஓம்காரேஷ்வரா கோயில் - இஸ்லாமிய மற்றும் கோதிக் கட்டிடக்கலை இரண்டையும் சித்தரிக்கும் இந்த கோயில் 1820 ஆம் ஆண்டில் லிங்கராஜேந்திரனால் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

13. நிஷானி மோட்டே சிகரம் - சுற்றுலாப்பயணிகளால் அதிகம் தீண்டப்படாத அமைதியான அழகான இந்த சிகரத்தில் நின்று பார்த்தால் குடகு மொத்தத்தையும் நீங்கள் காணலாம்.

14. பிரம்மகிரி வனவிலங்கு சரணாலயம் - காபி மற்றும் ஏலக்காய் தோட்டங்களால் சூழப்பட்டுள்ள இந்த அழகிய சரணாலயத்தில் நீங்கள் பல அழகிய வன விலங்குகளையும் தாவரங்களையும் காணலாம்.

15. மல்லாலி நீர்வீழ்ச்சி - மேற்கு தொடர்ச்சி மலையில் புஷ்பகிரி மலையில் அமைந்துள்ள மல்லாலி நீர்வீழ்ச்சி 200 அடி உயரத்தில் இருந்து விழுவதை பார்ப்பதற்கு மிகவும் பிரமிப்பாக இருக்கிறது.

மேற்கூறியவை மட்டுமின்றி, ஹோண்னமணா ஏரி, ராஜா கல்லறை, நாகர்ஹோல் தேசியப்பூங்கா, சொம்வார்பெட், பாகமண்டலா மற்றும் பல அழகிய கிராமங்களைச் சுற்றிப் பார்ப்பதுடன் ஸ்பா, நடைபயிற்சி, ஷாப்பிங் ஆகியவையும் நீங்கள் குடகில் செய்ய வேண்டிய விஷயங்களாகும்.

camping

பயணத்திற்கு ஆகும் செலவுகள்

குடகு மலையின் சுற்றுலாத் தலங்களைச் சுற்றிப் பார்ப்பதற்கு 3 இல் இருந்து 4 நாட்கள் தாராளமாக எடுக்கும். கோடை விடுமுறை வருவதற்கு நேரம் இன்னும் இருப்பதால் அழகாக யோசித்து பஸ் அல்லது ரயில் டிக்கெட், ரூம் புக்கிங், ட்ராவல் கைடு ஆகியவற்றை புக் செய்து கொள்ளலாம். எடுத்துகாட்டாக நீங்கள் உங்கள் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் சுற்றுலா பிளான் பண்ணுகிறீர்கள் என்றால், கம்மி பட்ஜெட்டில் இந்த சுற்றுலாவை முடிக்க ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை செலவாகும். இந்த பட்ஜெட் ரயில் அல்லது பேருந்தில் பயணம் செய்தால் மட்டுமே, நீங்கள் விமானத்தில் சென்றால் கூடுதலாக ஒரு நபருக்கு ரூ.7000 அதிகரிக்கும். என்ன பயணிகளே, இந்த கோடையை குடகு மலையில் என்ஜாய் பண்ணலாமா?

More News

    Read more about: chennai coorg tamilnadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+