Search
  • Follow NativePlanet
Share
» »கோடை விடுமுறை 2023: சென்னையிலிருந்து தேக்கடி – பார்க்க வேண்டிய இடங்கள், பயணச் செலவுகள்!

கோடை விடுமுறை 2023: சென்னையிலிருந்து தேக்கடி – பார்க்க வேண்டிய இடங்கள், பயணச் செலவுகள்!

நாம் ஏற்கனவே கோடை 2023 என்ற தலைப்பின் கீழ் சென்னையிலிருந்து ஊட்டி, கொடைக்கானல், குடகு, மூணாறு போன்ற இடங்களைப் பார்த்து இருக்கிறோம். இந்த கட்டுரையில் அனைவர்க்கும் விருப்பமான கேரளாவின் தேக்கடிக்கு இந்த கோடையில் கம்மி பட்ஜெட்டில் சுற்றுலா செல்வது எப்படி என்று பார்க்கலாம்! சரியாக திட்டமிட்டால் இந்த கோடையை தேக்கடியில் குதூகலமாக களிக்கலாம்.

பயண ஆர்வலர்கள், வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களை ஈர்க்கும் அமைதியான புகலிடமான தேக்கடி அமைதியான கிராமப்புறங்கள், மலைகள், பசுமையான காடுகள், சவன்னா புல்வெளிகள், செழிப்பான தோட்டங்கள் மற்றும் மின்னும் ஏரிகளால் நம்மைக் கட்டிப் போடுகிறது. சென்னையிலிருந்து தேக்கடிக்கு ரயில், பேருந்து பயணம், மலிவான தங்குமிடங்கள், சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் எல்லாம் கீழே!

thekkadycover

சென்னையிலிருந்து தேக்கடி பஸ் மற்றும் ரயில் பயணம்

சென்னையிலிருந்து 572 கிமீ தொலைவில் அமைந்துள்ள தேக்கடிக்கு சென்னையிலிருந்து நேரடியாக அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஆனால் தனியார் வோல்வோ பேருந்துகள் இயங்குகின்றன. அவற்றின் விலை ரூ.1500 க்கும் மேல். ஆனால் மலிவாக வசதியாக பயணம் செய்ய வேண்டுமென்றால் ரயில் பயணத்தை தேர்வு செய்வது தான் சரியான சாய்ஸ். கோட்டயம் ரயில் நிலையம் தேக்கடிக்கு அருகிலுள்ள ரயில் நிலையமாகும். திருவனந்தபுரம் மெயில், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், KRBA TVC எக்ஸ்பிரஸ், ஆரோனை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் நீங்கள் பயணம் செய்யலாம். இதற்கான டிக்கெட் விலை ரூ.435 இல் இருந்து ஆரம்பிக்கிறது.

Summer 2023, Chennai to thekkady

சென்னையிலிருந்து தேக்கடி விமானப் பயணம்

சென்னையிலிருந்து இரண்டு வழிகளில் நீங்கள் விமானப் பயணம் மேற்கொள்ளலாம். சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் சென்று அங்கிருந்து டாக்சியில் தேக்கடிக்கு செல்லலாம். மதுரையிலிருந்து தேக்கடி 140 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. அல்லது சென்னையிலிருந்து கொச்சியிற்கு விமானம் மூலம் பயணித்து அங்கிருந்து 160 கிமீ தொலைவில் அமைந்துள்ள தேக்கடிக்கு கார் அல்லது டாக்சியில் பயணிக்கலாம். சென்னை to மதுரை விமான டிக்கெட் ரூ.2000 முதலும், சென்னை to தேக்கடி விமான டிக்கெட் ரூ.2300 முதலும் ஆரம்பிக்கிறது.

Summer 2023, Chennai to thekkady

குடகில் உள்ள மலிவான ஹோட்டல்கள் மற்றும் ஹோம்ஸ்டேகள்

தேக்கடியை பொருத்தவரை மற்ற எல்லா இடங்களையும் விட பல அழகான வித்தியாசமான ஹோம்ஸ்டேகள், ஹோட்டல்களை நீங்கள் இங்கே பார்க்கலாம். மரத்தின் மேல் குடில்கள், ஹவுஸ்போட்கள், டென்ட்கள் என கம்மி விலையில் தங்குமிடங்கள் கிடைக்கின்றன. Kairali homestay, Monsoon retreat ecostay, Green court cottages, Thekkady woods, Spice cottage homestay, Philip mary farm stay போன்ற அழகிய தங்குமிடங்களின் விலை யாவும் ஒரு நாளைக்கு ரூ.2000 தாண்டுவது இல்லை. அல்லது நீங்கள் கம்மி பட்ஜெட்டின் குடகில் ரூம் புக்கிங் செய்ய ஹோட்டல் புக்கிங் இணையத்தளங்களை (Hotel booking service providers) கூட பார்வையிடலாம்.

Summer 2023, Chennai to thekkady

தேக்கடியில் நீங்கள் பார்க்க வேண்டிய இடங்கள்

இயற்கை எழில் கொஞ்சும் தேக்கடியில் பார்க்குமிடங்கள் எல்லாமே அழகிய சுற்றுலாத் தலங்கள் தான்!

1. பெரியார் தேசியப் பூங்கா - பெரியாறு ஆற்றின் கரையில் 300 சதுர மைல் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் பூங்காவில் மான், யானைகள், சாம்பார், நீலகிரி லாங்கூர் போன்ற பல்வேறு விலங்குகளை கண்டு களிக்கலாம்.

2. தேக்கடி ஏரி - காடுகளின் மையப்பகுதியில் அமைந்துள்ள பெரியார் ஏரி என்றழைக்கப்படும் தேக்கடி ஏரியில் படகு சவாரி செய்வது மிகவும் விசேஷமாகும்.

3. ஆபிரகாம்'ஸ் ஸ்பைஸ் கார்டன் - மசாலா வாசனை நிறைந்த இடம் இயற்கை அழகு மற்றும் தோட்டங்களின் அழகிய காட்சியுடன் கூடிய மசாலாப் பொருட்களின் அற்புதமான இடமாகும்.

4. முரிக்கடி - காபி மற்றும் ஏலக்காய் தோட்டக்கலைக்கும் பெயர் பெற்ற இந்த இடத்தில், கிராம்பு, இஞ்சி, மஞ்சள், தேயிலை தோட்டங்களைக் கண்டு ரசிக்கலாம்.

5. டைகர் ட்ரெக் - சுற்றுலாப் பயணிகள் டைகர் ட்ரெக் பாதையில் ட்ரெக்கிங் செய்து பயணிகள் யானைகள், சாம்பார்கள் மற்றும் புலிகளை அங்கு காணலாம்.

6. மூங்கில் ராஃப்டிங் - தேக்கடியில் வனத்துறையால் நிர்வகிக்கப்படும் இந்த மூங்கில் ராஃப்டிங் அனைத்து நீர் விளையாட்டு ஆர்வலர்களுக்கும் ஒரு சிறந்த செயலாகும்.

7. அனகர்ரா - குமளி - மூணாறு மாநில நெடுஞ்சாலையில் இடுக்கி வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து சுமார் 18 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த இடம் அதன் அழகிய நீர்வீழ்ச்சிகளுக்கு பெயர் பெற்றது.

8. முத்ரா கலாச்சார மையம் - பாரம்பரிய நடன வடிவமான கதகளி மற்றும் இந்தியாவின் பழமையான தற்காப்புக் கலையான களரிப்பயத்து போன்ற கலாச்சார நிகழ்வுகளுக்கு பிரபலமானது.

9. குமுளி - தேக்கடியில் இருந்து 4 கிமீ தொலைவில், பரபரப்பான சுற்றுலா நடவடிக்கைகளிலிருந்து மறைந்துள்ள அழகிய இடமான குமுளி உங்கள் தேக்கடி சுற்றுலாவில் சேர்க்க வேண்டிய இடமாகும்.

10. செல்லார்கோவில் - இந்த இடத்தின் பிரமிக்க வைக்கும் இயற்கை அழகும் தனிமையும் அமைதியும் இணைந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. அருவிகளில் பிரதிபலிக்கும் சூரியனின் மின்னும் ஒளி உங்களை முற்றிலும் மயக்கும் ஒன்று தானே.

11. பாண்டிக்குழி - பசுமை மற்றும் பாய்ந்து செல்லும் நீரோடைகளுக்கு மத்தியில் ஒரு நாள் உல்லாசப் பயணம் மேற்கொள்வதற்கான மகிழ்ச்சிகரமான இடமாகும்.

12. வண்டிபெரியார் - மலர் தோட்டம், மூலிகை சாகுபடிக்கு பெயர்பெற்ற இந்த இடம் தேக்கடியில் பார்க்க வேண்டிய மிக அழகான இடங்களில் இதுவும் ஒன்று.

13. எலிஃபென்ட் ஜங்க்ஷன் - தேக்கடியில் உள்ள எலிஃபென்ட் ஜங்க்ஷன் கேரள மாநிலம் முழுவதிலும் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாகும். இங்கே நீங்கள் யானைகளுடன் நேரத்தை செலவழித்து அவற்றுக்கு உணவளிக்கலாம். இந்த இடம் குடும்பம், குழந்தைகளுடன் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்.

14. ஸ்பிரிங் பள்ளத்தாக்கு மலை - சுற்றுப்புறத்தின் அழகிய காட்சிகளை வழங்கும் ஒரு அற்புதமான வான்டேஜ் புள்ளியாக செயல்படும் இந்த மலை பசுமையான இடம் போட்டோ எடுப்பதற்கு ஏற்ற இடமாகும்.

15. பழங்குடி பாரம்பரிய அருங்காட்சியகம் - ரம்பரிய சமையல் பாத்திரங்கள், வேட்டையாடும் ஆயுதங்கள், ஓவியங்கள், கவசம், மீன்பிடி உபகரணங்கள், உள்நாட்டு மருத்துவ தாவரங்கள், மூங்கில் தளபாடங்கள் போன்ற கலைப்பொருட்களை இங்கே நீங்கள் காணலாம்.

மேற்கூறிய இடங்கள் மட்டுமின்றி, முல்லைபெரியார் அணை, கிரீன்பார்க் ஆயூர்வேதிக் பிளான்டேஷன், வண்டன்மேடு, புல்லுமேடு, பருத்தும்பாரா பாயின்ட், காவி ஃபாரெஸ்ட், கன்னிமாரா டீ பேக்டரி, சுருளி நீர்வீழ்ச்சி, தேக்கடி ரோஸ் கார்டன் ஆகியவையும் நீங்கள் பார்க்க வேண்டிய இடங்களாகும்.

Summer 2023, Chennai to thekkady

பயணத்திற்கு ஆகும் செலவுகள்

தேக்கடியின் சுற்றுலாத் தலங்களைச் சுற்றிப் பார்ப்பதற்கு 2 இல் இருந்து 3 நாட்கள் தாராளமாக எடுக்கும். கோடை விடுமுறை வருவதற்கு நேரம் இன்னும் இருப்பதால் அழகாக யோசித்து பஸ் அல்லது ரயில் டிக்கெட், ரூம் புக்கிங், ட்ராவல் கைடு ஆகியவற்றை புக் செய்து கொள்ளலாம். எடுத்துகாட்டாக நீங்கள் உங்கள் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் சுற்றுலா பிளான் பண்ணுகிறீர்கள் என்றால், கம்மி பட்ஜெட்டில் இந்த சுற்றுலாவை முடிக்க ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை செலவாகும். இந்த பட்ஜெட் ரயிலில் பயணம் செய்தால் மட்டுமே, நீங்கள் விமானத்தில் சென்றால் கூடுதலாக ஒரு நபருக்கு ரூ.5000 அதிகரிக்கும். என்ன பயணிகளே, இந்த கோடையை தேக்கடியில் என்ஜாய் பண்ணலாமா?

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+