Search
  • Follow NativePlanet
Share
» » நாவில் எச்சில் ஊற வைக்கும் சென்னையின் மறுபக்கம் - உணவு ஆராய்ச்சி என்ன கூறுகிறது?

நாவில் எச்சில் ஊற வைக்கும் சென்னையின் மறுபக்கம் - உணவு ஆராய்ச்சி என்ன கூறுகிறது?

சென்னையில் உள்ள சமையல்களில் தான் எத்தனை வகைகள்?! செட்டிநாடு, காரைக்குடி, கொங்குநாடு, கிராமப்புற சமையல் முதல் சைனீஸ், இத்தாலியன், பிஃரெஞ்சு, இங்க்லீஷ், வட இந்திய உணவு வகைகள் வரை எல்லாமும் சென்னையில் நீங்கள் ருசிக்கலாம். சென்னையில் உள்ள ஒவ்வொரு பயணிகளும் தவறவிடக் கூடாத பல்வேறு வகையான சைவ மற்றும் அசைவ உணவுகள் உள்ளன! நீங்கள் ஒரு உணவுப் பிரியராக இருந்தால் நீங்கள் வர வேண்டிய இடம் சென்னை தான் மக்களே!

சென்னைக்கு அறிமுகம் அல்லாதவர்கள் கூட சென்னையின் அறுசுவையில் சாப்பிடுவதற்காக சென்னைக்கு வருகிறார்கள் என ஆய்வில் தெரிய வந்துள்ளது! ஆம், ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா. ஆனால் உண்மைதான்!

நேஷனல் ஜியோகிராஃபிக்கின் பட்டியலில் இடம் பெற்ற சென்னை

நேஷனல் ஜியோகிராஃபிக்கின் பட்டியலில் இடம் பெற்ற சென்னை

2015 ஆம் ஆண்டில் நேஷனல் ஜியோகிராஃபிக்கின் 'உலகின் முதல் பத்து உணவு நகரங்கள்' பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்திய நகரம் சென்னை மட்டுமே. அதன் சூடான மற்றும் காரமான செட்டிநாட்டு கறிகள், பிரியாணி வகைகள், மீன் கறி, சைவத் தாலி, நுரைத்த மெட்ராஸ் காபி மற்றும் நாவில் நடனமாடும் சென்னையின் தெருக் கடை உணவுகள் ஆகியவற்றால் சென்னை மற்ற நகரங்களில் இருந்து வேறுபடுகிறது. அதோடு மட்டுமல்லாமல் சைனீஸ், இத்தாலியன், பிஃரெஞ்சு, இங்க்லீஷ், வட இந்திய உணவு வகைகள் என எல்லாமும் இங்கே கிடைக்கிறது.

டாக்டர் சார்லெட் கிறிஸ்டினாவின் ஆராய்ச்சி

டாக்டர் சார்லெட் கிறிஸ்டினாவின் ஆராய்ச்சி

மெட்ராஸ் பல்கலைக் கழகத்தை சார்ந்த டாக்டர் சார்லெட் கிறிஸ்டினா மேற்கொண்ட ஆய்வின் ஒரு பகுதியாக உணவைப் பற்றிய சர்வே எடுக்கப்பட்டது. அதில் பல ருசிகர தகவல்கள் வெளிவந்துள்ளன. சென்னையில் உணவு உண்பவருக்கும் சென்னை நகருக்கும் இடையே ஒரு பாசிடிவ் ஆன தொடர்பு உள்ளது. வாடிக்கையாளர்களின் திருப்தி மற்றும் சென்னையில் அவர்கள் பெறும் மறக்கமுடியாத அனுபவத்தின் மூலம் சென்னை நகரத்தின் பிம்பத்தில் "உணவு" ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது.

சுவைதான் முக்கியம் விலை அல்ல

சுவைதான் முக்கியம் விலை அல்ல

உணவு வகை, கூடுதல் சேவை, சுகாதாரம், உணவின் தரம், ஊழியர்களின் விருந்தோம்பல் மற்றும் சுற்றுப்புறம் ஆகியவற்றை வைத்து மக்கள் உணவகங்களை தேர்ந்தெடுக்கிறார்கள். இவை யாவும் உணவகத்தைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் செல்வாக்கு செலுத்தும் காரணிகளாகும். விலை மற்றும் இருக்குமிடம் போன்ற வெளிப்புற காரணிகளைப் பற்றி நுகர்வோர் குறைவாகவே கவலைப்படுகிறார்கள். நமக்கு சுவைதானே முக்கியம், விலையோ அல்ல தூரமோ முக்கியமே அல்ல தானே?

அனைத்து வசதிகளையும் கொண்டுள்ள சென்னை உணவகங்கள்

அனைத்து வசதிகளையும் கொண்டுள்ள சென்னை உணவகங்கள்

மெனு கார்டு, இசை, குளிரூட்டிகள், கழிவறைகள், குப்பைத் தொட்டிகள், கை சுத்திகரிப்பு, டவல், கை உலர்த்தி மற்றும் பார்க்கிங் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சென்னையில் உள்ள பெரும்பாலான உணவகங்களில் உள்ளன. இந்த வசதிகள் யாவும் மெனு கார்டு கொண்டுள்ள 96.6% உணவகங்களில் கிடைக்கிறது, அதேசமயம் இசை மற்றும் கை உலர்த்திகள் 65% உணவகங்களில் மட்டுமே கிடைக்கிறதாம்.

பார்க்கிங் மற்றும் கழிவறை வசதி

பார்க்கிங் மற்றும் கழிவறை வசதி

22% பேர் சிறந்த பார்க்கிங் வசதிகள் குறித்து மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பார்க்கிங் 49.2% விசாலமாகவும், 48.6% பாதுகாப்பானதாகவும் காணப்படுகிறது. என்று கூறியுள்ளனர். சென்னையில் உள்ள உணவகங்களின் கழிவறை வசதி பொதுவாக சிறப்பாகவோ அல்லது நன்றாகவோ இருக்கும். 82.9% நுகர்வோர் கழிவறைகள் சுத்தமாக இருப்பதாகவும், போதுமான தண்ணீர் வசதி இருப்பதாகவும் (86.3%) கருதுகின்றனர். 46.7% நுகர்வோர் கழிவறைகளை அணுகக்கூடியதாக கருதுகின்றனர்.

ஸ்டார் ஹோட்டல்களை விடவும் காஸ்ட்லியான உள்ளூர் ஹோட்டல்கள்

ஸ்டார் ஹோட்டல்களை விடவும் காஸ்ட்லியான உள்ளூர் ஹோட்டல்கள்

ஆராய்ச்சியின் படி, விலையுயர்ந்த ஹோட்டல்களின் சர்வதேச உணவுச் சங்கிலிகளை விட உள்ளூர் உணவுகளை வழங்கும் உணவகங்கள் அதிக விலையை வழங்குவதாகக் கூறப்படுகிறது. சர்வதேச ஹோட்டல்கள் மற்றும் வட இந்திய உணவகங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த மகிழ்ச்சியை அளிக்கின்றன. வெளிநாட்டு உணவுச் சங்கிலிகள் அதன் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன, ஆனால் மற்ற வகை உணவகங்களுடன் ஒப்பிடும்போது சர்வதேச ஹோட்டல்கள் விலைக்கு தகுதியானவையாக இல்லை என்று தெரியவந்துள்ளது.

மக்களின் மனதில் இடம் பிடித்த சென்னை உணவகங்கள்

மக்களின் மனதில் இடம் பிடித்த சென்னை உணவகங்கள்

பல்வேறு வகையான உணவகங்களின் வாடிக்கையாளர்களின் சாப்பாட்டு அனுபவத்தில் நன்மை மற்றும் மகிழ்ச்சியின் உணர்வு தொடர்பாக குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் எதுவும் இல்லை என்று ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. அனைத்து வகையான உணவகங்களின் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள் மற்றும் அதே முறையில் நன்றாக உணர்கிறார்கள். ரூ. 15000 முதல் ரூ. 30000 வரை மாத வருமானமாக பெறும் நபர்களே சென்னையின் முக்கிய கூட்டமாக அனைத்து விதமான உணவகங்களிலும் ருசிக்கிறார்கள் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உணவகங்களுடன் சென்னையின் தொடர்பு

உணவகங்களுடன் சென்னையின் தொடர்பு

உணவகங்களுக்கும் சென்னை நகருக்கும் இடையே ஆழமான தொடர்பு இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சென்னை மக்களின் வாழ்வில் சென்னையயின் உணவு இரண்டற கலந்து விட்டது என்று தான் கூற வேண்டும். 42.1% பேர் உணவு அனுபவத்தால் சென்னை நகரத்தின் சிறந்த உருவத்தை தங்கள் மனதில் வைத்திருப்பதாகக் கூறியுள்ளனர்.

மொத்த பதிலளித்தவர்களில் 53.6% பேர் உணவகங்கள் காரணமாக சென்னையைப் பற்றி மிக உயர்ந்த பிம்பத்தைக் கொண்டுள்ளனர். இந்த உணவகங்கள் சுவையான மற்றும் சிறந்த உணவுகளை வழங்குவதன் மூலம் மக்களின் இதயங்களில் தோற்கடிக்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளன.

More News

    Read more about: chennai tamil nadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+