Search
  • Follow NativePlanet
Share
» »ஸ்கூபா டைவிங் பண்ண ஆசையா – இந்தியாவின் இந்த அழகான கடற்கரைகளுக்கு செல்லுங்கள்!

ஸ்கூபா டைவிங் பண்ண ஆசையா – இந்தியாவின் இந்த அழகான கடற்கரைகளுக்கு செல்லுங்கள்!

தெளிவான நீருக்கு நடுவே, பவளப்பாறைகளை ரசித்துக் கொண்டே, எண்ணற்ற வண்ணமயமான மீன்களுடன் நீந்தி மகிழலாம்! இதைக் காண எப்படியும் மாலத்தீவு, தாய்லாந்து அல்லது இந்தோனேசியாவிற்கு தானே செல்ல வேண்டும். அப்படி நீங்கள் எண்ணினால் அது தவறு, ஏனென்றால் அதை தாண்டிய இயற்கை அழகு வாய்ந்த ஸ்நோர்கெல்லிங் ஸ்பாட்டுகள் இந்தியாவில் உள்ளன. குறைந்த கட்டணத்தில் ஸ்கூபா டைவிங் செய்ய இந்தியாவின் இந்த இடங்களுக்கு தான் செல்ல வேண்டும்!

1

அந்தமான் & நிக்கோபார் தீவுகள்

560 வகையான பவளப்பாறைகளுடன் உலகில் உள்ள செழிப்பான பவளப்பாறை திட்டுகளில் ஒன்றாக உள்ள அந்தமானில் திமிங்கலங்கள், டுகோங், உப்பு நீர் முதலைகள், கடல் ஆமைகள், கடல் பாம்புகள், டால்பின்கள், வண்ணமயமான மீன்கள் போன்ற கடல் விலங்குகளையும், போல்டர் பவளப்பாறைகள், பூமராங் பவளப்பாறைகள், சிவப்பு பாசிகள், பழுப்பு பாசிகள் வரை அனைத்தையும் இங்கே நீங்கள் கண்டு மகிழலாம். இங்கு ஒரு டைவ் ரூ.4,500 இல் இருந்து தொடங்குகிறது. நவம்பர் முதல் ஏப்ரல் மாதம் இடைப்பட்ட காலத்தில் இங்கு பயணம் மேற்கொள்ளலாம். அந்தமானுக்கு விமான சேவை மட்டுமின்றி, கப்பல் சேவையும் உள்ளது. கப்பலில் சென்றடைய 2 முதல் 3 நாட்கள் ஆகிறது.

2

நேத்ரணி தீவு, கர்நாடகா

புறா தீவு என்றும் அழைக்கப்படும் நேத்ராணி தீவு, பட்கல் தாலுகாவில் உள்ள கோயில் நகரமான முத்ரேஷ்வரில் இருந்து சுமார் 10 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ளது. இதய வடிவில் அமைந்துள்ள, இது 'இந்தியாவின் டைவிங்கின் இதயம்' என்று அன்புடன் அழைக்கப்படுகிறது. இது ஒரு பவளத் தீவு மற்றும் பவளம், பட்டாம்பூச்சி மீன், கிளி மீன், ஈல்ஸ் மற்றும் இறால் வகைகளைக் கொண்ட பவளப்பாறைகளைக் கொண்டுள்ளது. இங்கு ஒரு டைவ் ரூ. 5,500 இல் இருந்து தொடங்குகிறது.

கோவளம், கேரளா

திருவனந்தபுரத்தில் இருந்து சுமார் 16 கிமீ தொலைவில் கேரளாவில் அமைந்துள்ள கோவளம், மெதுவாக ஒரு பிரபலமான ஸ்கூபா டைவிங் இடமாக உருவாகி வருகிறது. நெத்திலி மற்றும் சில்வர் மூனி, ப்ளூஃபின் ட்ரெவாலி, ஒற்றைப்படை மொரே ஈல், பஃபர் மீன், குரூப்பர்கள், பெட்டி மீன், சார்ஜென்ட்கள், பைப் மீன்கள் போன்றவற்றை இங்கே நீங்கள் டைவ் செய்து காணலாம். இந்த இடம் ரயில்வே மற்றும் விமான நிலையங்களால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

3

லட்சத்தீவுகள்

சுமார் 78 வகையான பவளப்பாறைகள் அடங்கிய லட்சத்தீவுகள் கண்ணிற்கினிய சொர்க்கம் என்றே சொல்லலாம். எங்கு பார்த்தாலும் நீல நிற மற்றும் தெளிவான படிக நீர், தென்னை மரங்கள், வண்ணமயமான கடல் உயிரினங்கள் என லட்சத்தீவுகள் ஒரு சர்வதேச தரம் வாய்ந்த சுற்றுலாத் தளமாக திகழ்கிறது. மாண்டா ரேக்கள், ஆமைகள், வித விதமான மீன்கள், வெள்ளை சுறாக்கள் ஆகியவற்றுடன் நீல நிற வெளிப்படையான லகூன்களில் நேரத்தை செலவிடுவது வாழ்நாள் அனுபவமாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இங்கு ஸ்கூபா டைவிங் செய்ய 4,000 ரூபாய் முதல் 10,000 வரை வசூலிக்கப்படுகிறது.

கோவா

இந்தியாவின் பார்ட்டி தலைநகரான கோவா, நீர் விளையாட்டு ஆர்வலர்களின் புகலிடமாக உள்ளது. பல கப்பல் விபத்துகள் அரங்கேறிய அரபிக்கடலின் வெதுவெதுப்பான நீரில் எண்ணற்ற கடல் உயிரினங்களை காண லட்சக்கணக்கான டைவர்ஸ் ஆண்டுதோறும் இங்கு வருகை தருகின்றனர். கிராண்டே தீவு, ரெக் ஆஃப் சுசி, கோவ் ஆஃப் ஷெல்டர் மற்றும் பே ஆஃப் பவுண்டி ஆகியவை மிகவும் பிரபலமான ஸ்கூபா டைவிங் இடங்களாகும். இங்கு ரூபாய் 5,000 முதல் 1௦,௦௦௦ வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்தியாவின் பல முக்கிய நகரங்களுடன் சாலை வழியாகவும், விமான வழியாகவும் கோவா நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

5

புதுச்சேரி

இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள ஒரே டைவிங் ஸ்பாட் புதுச்சேரி மட்டும் தான். ஸ்கூபா டைவிங் இடமாக புதுச்சேரியை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள், ஆனால் அங்கு சென்றால் நீங்கள் ஆச்சரியப்படுவது முற்றிலும் உறுதி. இந்த இடம் இயற்கையான பவளப்பாறைகள், பாறை பாப்-அப்கள், மனிதனால் உருவாக்கப்பட்ட முகடுகள் மற்றும் பலா மீன், மாண்டா ரேக்கள், கிளி மீன்கள், கடல் பாம்புகள், ஓட்டுமீன்கள், ட்ரிக்கர் மீன்கள், சிங்க மீன்கள், குரூப்பர்கள், மோரே ஈல்கள் மற்றும் விசிறி பவளப்பாறைகள் போன்ற ஏராளமான கடல் உயிரினங்களால் நிறைந்துள்ளது. ரூபாய் 6500-8000 வரை இங்கு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

தர்கர்லி

மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் கோட்டைக்கு அருகில் அமைந்துள்ள தர்கர்லி கொங்கன் கடற்கரையில் மறைந்திருக்கும் ரத்தினமாகும். தர்கர்லியின் கடலோர நீர் தெளிவாகவும், பவளப்பாறைகள் மற்றும் வண்ணமயமான கடல் விலங்குகள் நிறைந்ததாகவும் உள்ளது. சுற்றுலா பயணிகள் தண்டி கடற்கரையில் இருந்து விரைவு படகுகளில் டைவிங் இடத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றனர். தர்கர்லியில் நிபுணர்களால் வழிநடத்தப்படும் டைவிங் செயல்பாடு வழக்கமான ஸ்கூபாவைக் காட்டிலும் ஒரு மகிழ்ச்சி நிறைந்த டைவ் ஆகவே பார்க்கப்படுகிறது. ஒரு நபருக்கு 850 ரூபாயே இங்கு கட்டணமாக வசூலிக்கப்படுவதால் நிறைய மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

More News

    Read more about: travel guide
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+