Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவின் மிக நீண்ட ரயில் பயணங்கள் இவைகள் தான் - அதிகபட்சமாக 80 மணி நேரம் பயணம்!

இந்தியாவின் மிக நீண்ட ரயில் பயணங்கள் இவைகள் தான் - அதிகபட்சமாக 80 மணி நேரம் பயணம்!

குறைந்த கட்டணத்தில் வசதியான பயணம் என்கிற காரணத்தினால் நம்மில் பலரும் பெரும்பாலும் ரயில் பயணத்தையே சார்ந்திருக்கிறோம். குறிப்பாக இந்த ரயில்களில் பயணம் செய்யும் எவரும் நிச்சயம் மறக்கமுடியாத நினைவுகளை உருவாக்கி இருப்பார்கள், ஏனென்றால் இந்த ரயில்கள் தான் இந்தியாவின் மிக நீண்ட ரயில் பயணங்கள்! இலக்கை அடைவதற்கு குறைந்த பட்சம் 68 மணி நேரம் முதல் 80 மணி நேரம் வரை ஆகிறது!

1

விவேக் எக்ஸ்பிரஸ் - திப்ருகர் to கன்னியாகுமரி

இது வடகிழக்கு இந்தியாவின் அஸ்ஸாமில் உள்ள திப்ருகரில் இருந்து புறப்பட்டு இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரியை அடைகிறது. இரண்டு இடங்களுக்கும் இடைப்பட்ட தூரமான 4273 கிமீ நீளத்தை இந்த ரயில் 80 மணி நேரம் 15 நிமிடங்களில் கடக்கிறது. இந்தியாவின் மிக நீளமான ரயில் பாதையை உள்ளடக்கிய இந்த ரயில் தனது பயணத்தில் 55 ஸ்டேஷன்களில் நின்று செல்கிறது.

2

திருவனந்தபுரம் சென்ட்ரல் - சில்சார் எக்ஸ்பிரஸ்

திருவனந்தபுரம் சென்ட்ரலிலிருந்து அஸ்ஸாமின் கவுகாத்தி வரை இயக்கப்பட்டு வந்திருந்த இந்த சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், 2017 முதல், சில்சார் வரை நீட்டிக்கப்பட்டது. இந்த நீட்டிப்புக்குப் பிறகு, இந்த ரயில் இந்தியாவின் இரண்டாவது மிக நீண்ட ரயிலாக மாறியது. திருவனந்தபுரம் சென்ட்ரலிலிருந்து 3,932 கிமீ தூரத்தில் சில்சார் ஸ்டேஷனை அடைய இந்த ரயில் 76 மணி நேரத்தை எடுத்து கொள்கிறது. இந்த ரயில் 54 நிறுத்தங்களில் நின்று செல்கிறது.

3

ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் - ஜம்மு தாவி to கன்னியாகுமரி

ஜம்மு தாவியிலிருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் இந்த ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா ஜம்மு மற்றும் காஷ்மீர் வரை இயக்கப்படுகிறது. இந்திய இரயில்வேயில் தற்போது மூன்றாவது நீண்ட தூரம் ஓடும் ரயிலாக இருக்கும் இந்த ரயில் 72 மணி நேரத்தில் 3787 கிமீ தூரத்தை கடக்கிறது. இந்தியாவின் பன்னிரண்டு மாநிலங்களைக் கடந்து செல்லும் இந்த ரயில் மொத்தம் 73 நிலையங்களில் நிறுத்தப்படுகிறது.

4

டென் ஜம்மு எக்ஸ்பிரஸ்

ஜம்மு & காஷ்மீரில் உள்ள கத்ராவிலிருந்து புறப்பட்டு தமிழகத்தின் திருநெல்வேலியை அடையும் இந்த டென் ஜம்மு எக்ஸ்பிரஸ் இந்தியாவின் நான்காவது மிக நீண்ட ரயில் பயணமாகும். இரண்டு இடங்களுக்கு இடையேயான 3,631 கிமீ தூரத்தை கடக்க இந்த ரயில் 71 மணி நேரம் 20 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது. மேலும் இந்த ரயில், 11 மாநிலங்கள் வழியாக 62 நிலையங்களில் நின்று செல்கிறது.

5

நவ்யுக் எக்ஸ்பிரஸ் - மங்களூரு to ஜம்மு

ஜம்மு தாவியிலிருந்து கர்நாடகாவின் மங்களூர் சென்ட்ரல் செல்லும் இந்த நவ்யுக் எக்ஸ்பிரஸ் இந்தியாவின் ஐந்தாவது மிக நீண்ட ரயில் பயணமாகும். வாராந்திர விரைவு ரயிலாக இயங்கும் இந்த ரயில் 3607 கிமீ தூரத்தை கடந்து அதன் இலக்கை அடைய 68 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. இது பன்னிரண்டு மாநிலங்களை கடந்து, 61 நிலையங்களில் நின்று செல்கிறது.

சமவெளியில் இருந்து பசுமையான காடுகள் வரை, வறண்ட நிலங்கள் முதல் ஈரமான மழைப்பொழிவுகள் வரை, வலிமையான மலைகள் முதல் பல்வேறு நிலப்பரப்புகள் வரை பல காட்சிகளை இந்த ரயில் பயணங்களில் நீங்கள் கண்டு மகிழலாம்!

More News

    Read more about: irctc indian railways
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+