Search
  • Follow NativePlanet
Share
» »உலகிலேயே மிக நீண்ட தூர விமான பயணம் இது தானாம் – 19 மணி நேர பயணம்!

உலகிலேயே மிக நீண்ட தூர விமான பயணம் இது தானாம் – 19 மணி நேர பயணம்!

நமது வீட்டில் யாராவது வெளிநாட்டுக்கு சென்றால் கூட 'ஆண்டாவா, பத்திரமாக போய் தரையிறங்க வேண்டும்' என வீட்டில் உள்ளவர்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருப்போம்! அந்த அளவுக்கு இந்தியர்களுக்கு விமான பயணம் என்றால் சற்று திகிலாக தான் இருக்கிறது. ஒரு அரை மணி நேரம் கூட விமானத்தில் பறக்க தயாராக இல்லாத நம்மால் தொடர்ந்து 18 மணி நேரம் வானில் பயணிக்க வேண்டும் என்று சொன்னால் என்ன செய்வோம்? என்று யோசித்து பாருங்களேன்! இன்றைக்கு நாம் உலகிலேயே மிக அதிக தூரம், இடைவிடாமல் பயணிக்கும் விமான பயணங்களைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்!

விமான தொழில்நுட்பம் முன்னேறி கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் நீண்ட தூர கேரியர்கள் மிகவும் வசதியான பயணத்தை வழங்க மேம்படுத்தப்பட்ட முயற்சிகளை மேற்கொள்கின்றன ஆரோக்கியமான உணவை வழங்குதல் மற்றும் வணிக வகுப்பை மேம்படுத்துதல் மேலும் வசதியான பயணத்திற்கான பொருளாதார இருக்கைகளின் தரத்தை உயர்த்துதல் என உலகின் மிக நீண்ட விமானங்கள் படிப்படியாக இன்னும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

longestflights1

உலகின் மிக நீண்ட விமான பயணங்கள்

5. மெல்போர்ன் to டல்லாஸ்

ஐந்தாவது இடத்தில் மெல்போர்ன் மற்றும் டல்லாஸ் இடையே இயக்கப்படும் குவாண்டாஸ் உள்ளது, 8,973 மைல்கள் (14,440 கிமீ), இந்த பாதை மூன்று-வகுப்பு, 236-இருக்கை போயிங் 787-9 ஐப் பயன்படுத்தி வாரந்தோறும் மூன்று முறை இயக்கப்படுகிறது. இது டிசம்பர் 2022 இல் தொடங்கப்பட்டது மற்றும் டல்லாஸுக்கு குவாண்டாஸின் இரண்டாவது பாதையாகும். மெல்போர்னில் இருந்து டல்லாஸ் செல்லும் இந்த விமானம் தொடர்ந்து 17 மணி நேரம் 10 நிமிடங்கள் வானில் பறக்கிறது.

4. பெர்த் to லண்டன் ஹீத்ரோ

மார்ச் 2018 இல் தொடங்கப்பட்ட இந்த சேவை தினசரி செயல்படும் ஒரு விமான சேவையாகும். து ஒரு விமான எண் மற்றும் ஒரு நிறுத்தத்தைக் கொண்டிருப்பதால், இது 'நேரடி' பாதையின் வரையறையாகும். பெர்த்-ஹீத்ரோ தொடங்கப்பட்டபோது, ஆஸ்திரேலியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே இடைவிடாத ஒரே சேவையாக இருந்து வருகிறது. ஆஸ்திரேலியாவின் பெர்த் மற்றும் இங்கிலாந்டின் லண்டனுக்கு இடையிலான 9003 மைல்கள் தூரத்தை கடக்க 17 மணி நேரம் 20 நிமிடங்கள் ஆகிறது.

longestflights travel

3. தோஹா to ஆக்லாந்து

வளைகுடா நாட்டில் உள்ள தோஹாவில் இருந்து ஆக்லாந்து செல்லும் விமான பயணம் உலகின் மிக நீண்ட 3 ஆவது பயணமாகும். கத்தார் ஏர்வேஸ் பிப்ரவரி 2017 இல் 777-200LR ஐப் பயன்படுத்தி இந்த இரு இடங்களுக்கும் இடையே விமான சேவை அளித்து வருகிறது. தோஹா மற்றும் ஆக்லாந்து இடையிலான 9,032 மைல்களை கடக்க 17 மணி நேரம் 35 நிமிடங்கள் ஆகிறது.

2. சிங்கப்பூர் to நெவார்க்

கொரோனா வைரஸ் தோன்றும் வரை, இதுவே உலகின் மிக நீண்ட இடைவிடாத பாதையாக இருந்தது. இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறது, சிங்கப்பூரில் இருந்து அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் அமைந்துள்ள நெவார்க் நகரத்திற்கு இயக்கப்படும் விமான பாதை உலகின் மிக நீண்ட 2 ஆவது விமான பயணமாகும். இரண்டு இடங்களுக்கும் இடையேயான 9,534 மைல்கள் ஆகும். கட்டாயம் 18 மணி நேரம் 30 நிமிடங்களுக்கு குறையாமல் இந்த தூரத்தை கடக்க முடியாது.

longestflights on air

1. சிங்கப்பூர் to நியூயார்க்

சிங்கப்பூரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் செல்லும் விமான பயணமே உலகின் மிக நீண்ட நேர இடைவிடாத விமான பயணமாகும். 2020 இல் தொடங்கிய இந்த சேவை மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இரு நகரங்களுக்கும் இடையேயான 9,537 மைல்கள் தூரத்தை கடக்க 18 மணி நேரம் 50 நிமிடங்கள் ஆகிறது. இதன் மூலம் மிக நீண்ட விமான பயணத்தில் சிங்கப்பூர் to நியூயார்க் செல்லும் விமானம் முதலிடம் பிடித்துள்ளது!

More News

Read more about: travel guide
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+