Search
  • Follow NativePlanet
Share
» »உங்கள் தாத்தா பாட்டியுடன் டூர் பிளானா – இதை கவனத்தில் வச்சுக்கோங்க!

உங்கள் தாத்தா பாட்டியுடன் டூர் பிளானா – இதை கவனத்தில் வச்சுக்கோங்க!

இளம் வயதினருக்கு சுற்றுலா செல்ல எந்த அளவு ஆசையும் எண்ணமும் உத்வேகமும் இருக்கிறதோ, அதே அளவுக்கு ஏன் அதையும் தாண்டி எண்ணமும் ஆசையும் வயது முதிர்ந்த உங்கள் தாத்தா பாட்டிகளுக்கும் இருக்கும். வயது மூப்பு காரணமாக நாம் அவர்களை பெரும்பாலான இடங்களுக்கு அழைத்து செல்வது இல்லை. ஆனால் அவர்களது ,மனதில் என்ன தோன்றும் அவர்களும் நம்முடன் வர ஆசைப்படுவார்களே என்றெல்லாம் நாம் பெரும்பாலும் யோசிக்க தவறுகிறோம். அவர்கள் நலமுடன் இருக்கும் போதே சரியாக திட்டமிட்டு செயல்பட்டால் அவர்களுக்கு ஒரு குதூகலமான அனுபவத்தை நம்மால் வழங்க முடியும்! ஆம்!

சரியான சுற்றுலாத் தலத்தை தேர்ந்தெடுப்பது

உங்களின் வயதான தாத்தா பாட்டியை நீங்கள் டூர் அழைத்து செல்லும் போது முதலில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் போய் சேருமிடம் தான். உங்கள் பயண இடத்தை புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் எந்த வகையான விடுமுறையை விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து இலக்கை கவனமாகத் தேர்ந்தெடுங்கள். ஆன்மிகம், கடற்கரை, நினைவுச்சின்னங்கள், மலைப்பிரதேசங்கள், வரலாற்று சுற்றுலாத் தலங்கள் என எண்ணற்ற சாய்ஸ்கள் உள்ளன. பெரும்பாலும் குளிரான மலைப்பிரதேசங்களை தவிர்ப்பது நல்லது.

Travel with Senior Citizen

வசதியான பயணத்தை தேர்ந்தெடுங்கள்

எங்கு செல்ல வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்யும் போது எப்படி செல்வது என்பதையும் முடிவு செய்ய வேண்டும் தானே. மூத்த குடிமக்களுடன் பயணம் செய்யும் போது, முடிந்தால் விமானத்தை தேர்வு செய்யுங்கள். பல விமான நிறுவனங்கள் மூத்த குடிமக்களுக்கு விமானக் கட்டணத்தில் சிறப்புத் தள்ளுபடியை வழங்குகின்றன. அதை கவனத்தில் வைத்து டிக்கெட் புக் செய்யுங்கள். பட்ஜெட் பிரண்ட்லியாக அழைத்து செல்ல நினைத்தால் ஸ்லீப்பர் கோச்சில் ரயிலில் பயணிக்கலாம். எழுந்து நடக்க, நிற்க வசதியாக இருக்கும்.

ஹோட்டல் முன்பதிவு

ஹோட்டல் முன்பதிவு

மேம்பட்ட திட்டமிடல் என்பது முன்கூட்டியே முன்பதிவு செய்வதாகும். எனவே, கடைசி நிமிட ரத்துகளைத் தடுக்க, முன்பதிவு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. உங்கள் முன்பதிவுகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன என்பதை அறிந்துகொள்வது உங்கள் மனதை எளிதாக்கும், மேலும் நீங்கள் செல்லும் இலக்கை ஆராய்வதற்காக உங்களது நேரத்தை செலவிடலாம். உங்களது ரூம்களை தரைதளத்தில் நீங்கள் கேட்டு வாங்கி கொள்வது நல்லது.

பகல் நேர பயணம்

பகல் நேர பயணம்

நீங்கள் பக்கத்தில் உள்ள இடங்களுக்கு காரில் செல்கிறீர்கள் என்றால் பகல் நேர பயணத்தை தேர்வு செய்யுங்கள். அதிகாலையிலும் இரவு நேரத்திலும் பயணம் செய்வது வயதானவர்களுக்கு சற்று கடினமாக இருக்கும். எனவே, உங்கள் தாத்தா, பாட்டி அல்லது உங்கள் தந்தை, தாய் அல்லது வேறு யாரேனும் வயதானவர்களுடன் பயணம் செய்தால், உங்கள் பயண நேர அட்டவணையை பகல் நேரமாக வைத்திருக்க பரிந்துரைக்கப்படுகிறது.

மருந்துகளை மறக்காதீர்கள்

மருந்துகளை மறக்காதீர்கள்

உங்களுடன் வரும் உங்களுடைய தாத்தா பாட்டிக்கு வயது மூப்பு காரணமாக ஏதேனும் உபாதைகள் இருக்கலாம். அதனால் அவர்கள் உட்கொள்ளும் மருந்துகளை எடுத்துக் கொள்ள மறக்காதீர்கள். அதோடு, கம்பளி, ஜாக்கெட் மற்றும் போர்வை ஆகியவற்றையும் எடுத்து செல்லுங்கள். கூடுதலாக, மூட்டு வலி தைலம், ஜுர மாத்திரை, வயிற்றுவலி மாத்திரை, வாந்தி மற்று மயக்கத்திற்கு உண்டான மாத்திரை ஆகியவற்றையும் உங்கள் மருந்து பயில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பயணக் காப்பீடு அவசியம்

பயணக் காப்பீடு அவசியம்

பயணக் காப்பீடு இல்லாமல் பயணம் செல்வது வயதானவர்களுக்கு நல்லதல்ல. எந்தவொரு விடுமுறையிலும் புறப்படுவதற்கு முன் பயணக் காப்பீட்டைப் பெறுவது சந்தேகத்திற்கு இடமின்றி கட்டாயமாகும். நீங்கள் காப்பீடு இல்லாமல் பயணம் செய்து, அந்த இடத்தில் நம் வீட்டு பெரியவர்களுக்கு ஏதேனும் நடந்தால் என்ன செய்வது சற்று யோசியுங்கள். முதுமையில் எதிர்பாராத நோய்களுக்கு அவர்கள் ஆளாக நேரிடும். எதற்கும் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது தானே.

தனித்து விட வேண்டாம்

தனித்து விட வேண்டாம்

உங்களுடன் வரும் வயதானவர்கள் சுற்றுலா மீதுள்ள ஆர்வத்தில் கவனம் சிதறி உங்களை விட்டு தள்ளி செல்ல வாய்ப்புகள் உண்டு. அதனால் அவர்கள் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருக்கவும். எந்த நேரத்திலும் அவர்களை தனியே விட்டு விடாதீர்கள். மேலும், அவர்களுக்கு தேவைப்படுகின்ற நேரத்தில் ஓய்வு அளித்து, நன்றாக இருக்கும் நேரத்தில் வெளியே அழைத்து செல்லவும்.

இவற்றை எல்லாம் நாம் கவனத்தில் வைத்து செயல்பட்டால், உங்கள் வீட்டு பெரியவர்களுடன் ஜாலியாக ஒரு டூர் சென்று வரலாம் மக்களே!

More News

    Read more about: travel
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+