Search
  • Follow NativePlanet
Share
» » உலகிலேயே மிகவும் ஸ்ட்ராங் ஆன பாஸ்போர்ட் இது தானாம் – இந்திய பாஸ்போர்ட்டின் ரேங்க் இதுவா?

உலகிலேயே மிகவும் ஸ்ட்ராங் ஆன பாஸ்போர்ட் இது தானாம் – இந்திய பாஸ்போர்ட்டின் ரேங்க் இதுவா?

விமானத்தில் ஏறி அவ்வப்போது வெளிநாடுகளுக்கு பறந்து கொண்டிருக்கும் நாம் நம்முடைய பாஸ்போர்ட்டின் வலிமை என்னவென்று இதுவரை யோசித்து பார்த்திருப்போமா? ஆனால் உங்கள் பாஸ்போர்ட் போதுமான அளவிற்கு வலிமையானதாக இருந்தால், நீங்கள் விசா இல்லாமல் பல நாடுகளுக்கு பயணம் செய்யலாம் என்று உங்களுக்கு தெரியுமா? ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) பாஸ்போர்ட் தற்போது உலகின் வலிமையான பாஸ்போர்ட்டாக முதலிடத்தில் உள்ளது. 181 இடங்களுக்கு விசா இல்லாமல் அல்லது விசா ஆன் அரைவல் மூலம் செல்லலாம். இந்த பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?

World’s strongest passport

முதலிடத்தைப் பிடித்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

2022 இல் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததிலிருந்து, பல நாடுகள் உக்ரேனிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு விசா தேவைகளை கைவிட்டன. இதையொட்டி, பல நாடுகள் ரஷ்ய குடிமக்களுக்கு விசா வழங்குவதை நிறுத்திவிட்டன மற்றும் ரஷ்ய விமான நிறுவனங்கள் தங்கள் வான்வெளியைப் பயன்படுத்த தடை விதித்துள்ளன. அதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்ட பிறகு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாஸ்போர்ட் தற்போது உலகின் வலிமையான பாஸ்போர்ட்டாக மாறியுள்ளது.

World’s strongest passport

அசுர வளர்ச்சியைக் கண்ட UAE

ஆர்டன் கேபிட்டலின் பாஸ்போர்ட் இன்டெக்ஸின் (Arton Capital's Passport Index) படி மற்றும் குடியேற்ற ஆலோசனை நிறுவனமான Nomad Capitalist சமர்ப்பித்த அறிக்கையில், உலகின் வலிமையான பாஸ்போர்ட்களின் லிஸ்ட் வெளி வந்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் தரவரிசையில் பின்தங்கிய பிறகு, UAE 2022 இல் ஒரு அற்புதமான மறுபிரவேசத்தை மேற்கொண்டது. விசா இல்லாத ஒப்பந்தங்களுக்கு ஈடாக குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு எக்ஸ்போ 2020 துபாயில் பல நாடுகளுக்கு அனுமதி அளித்திருந்தது.

World’s strongest passport

ஆர்டன் கேபிட்டலின் இன்டெக்ஸின் முதல் 10 பாஸ்போர்ட்கள்

விசா இல்லாத பயணம் 50%, குடிமக்களின் வரிவிதிப்பு 20%, புலனுணர்வு 10%, இரட்டைக் குடியுரிமை 10% மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் 10% ஆகியவை இதில் அடங்கும். விசா இல்லாமல் பயணம் செய்ய பாஸ்போர்ட் அனுமதிக்கும் நாடுகளின் எண்ணிக்கையுடன், முதல் 10 நாடுகளின் பட்டியல் இதோ உங்களுக்காக

1. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (181 இடங்கள்)

2. ஜெர்மனி, சுவீடன், பின்லாந்து, லக்சம்பர்க், ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, தென் கொரியா (174 இடங்கள்)

3. டென்மார்க், நார்வே, பெல்ஜியம், போர்ச்சுகல், போலந்து, யுனைடெட் கிங்டம், அயர்லாந்து, அமெரிக்கா, நியூசிலாந்து (173 இடங்கள்)

4. செக் குடியரசு, கிரீஸ், லிதுவேனியா, ஹங்கேரி, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா (172 இடங்கள்)

5. சிங்கப்பூர், மால்டா, ஸ்லோவாக்கியா (171 இடங்கள்)

6. எஸ்டோனியா, லாட்வியா, ஸ்லோவேனியா (170 இடங்கள்)

7. லிச்சென்ஸ்டீன், ஐஸ்லாந்து (169 இடங்கள்)

8. சைப்ரஸ், குரோஷியா, ருமேனியா, பல்கேரியா (168 இடங்கள்)

9. மலேசியா (167 இடங்கள்)

10. மொனாக்கோ (165 இடங்கள்)

World’s strongest passport

ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸின் முதல் 10 பாஸ்போர்ட்கள்

18 வருட கால வரலாற்றுத் தரவுகளுடன், சர்வதேச விமானப் போக்குவரத்து ஆணையத்தின் (IATA) பிரத்தியேகத் தரவுகளின் அடிப்படையில் ஜப்பானை சார்ந்த ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸின் (Henley Passport Index) படி, 2023 உலகின் வலிமையான பாஸ்போர்ட்டுகள் இதோ

1. ஜப்பான், சிங்கப்பூர் (193 இடங்கள்)

2. தென் கொரியா (192 இடங்கள்)

3. ஜெர்மனி, ஸ்பெயின் (191 இடங்கள்)

4. பின்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க் (190 இடங்கள்)

5. ஆஸ்திரியா, டென்மார்க், நெதர்லாந்து, ஸ்வீடன் (189 இடங்கள்)

6. அயர்லாந்து, போர்ச்சுகல், பிரான்ஸ், யுனைடெட் கிங்டம் (188 இடங்கள்)

7. பெல்ஜியம், செக் குடியரசு, நியூசிலாந்து, நார்வே, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா (187 இடங்கள்)

8. ஆஸ்திரேலியா, கனடா, கிரீஸ், மால்டா (186 இடங்கள்)

9. ஹங்கேரி, போலந்து (185 இடங்கள்)

10. லிதுவேனியா, ஸ்லோவாக்கியா (184 இடங்கள்)

இந்த இரு பட்டியலிலும் 60 நாடுகளுக்கு அணுகல் வழங்கி நம் இந்திய பாஸ்போர்ட் 82 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+