Search
  • Follow NativePlanet
Share
» »இளைஞர்கள் கட்டாயம் போகவேண்டிய சுற்றுலாத் தளங்கள் இவை... ஏன் தெரியுமா?

இளைஞர்கள் கட்டாயம் போகவேண்டிய சுற்றுலாத் தளங்கள் இவை... ஏன் தெரியுமா?

இளைஞர்கள் கட்டாயம் செல்லவேண்டிய சுற்றுலாத் தளங்கள் இவை

By Udhaya

இளைஞர்களே....

முக்கியமாக பதின்பருவ இளைஞர்களே...

உங்களுக்கு சுற்றுலா செல்வதென்றால் கசக்கவா செய்யும். ஆனால் எப்போது செல்வது.. யாருடன் செல்வது என்பதை முடிவெடுத்துவிடும் நீங்கள் எங்கு செல்வது என்பதை அறியாமல் முழிக்கிறீர்களா.. டீன் ஏஜ் பசங்களுக்கு இதுதான் சரியான சூழ்நிலை. ஏனென்றால் பதின்பருவத்தை கடந்துவிட்டீர்கள் என்றால் உங்களுக்கு வேலைப் பளு அதிகமாகி, சுற்றுலா செல்வது என்பது குதிரை கொம்பாகி விடக்கூடும். பின்னர் குடும்ப சுமை அதிகமாகிவிட உங்கள் நண்பர்களை சந்திப்பதற்கே நீங்கள் காலத்துடன் கடுமையாக போரிடவேண்டிவரும்.

விடுங்கள்... இன்றே திட்டமிடுங்கள்.. உங்கள் நண்பர்களுடன் வெளியே செல்ல முடிவெடுங்கள்.. பெற்றோரிடம் அனுமதி பெறுங்கள். பள்ளி அல்லது கல்லூரி உதவியுடன் கூட இந்த சுற்றுலாவுக்கு நீங்கள் செல்லலாம். இந்த பருவத்தில் கட்டாயம் செல்லவேண்டிய முக்கிய இடங்களை பற்றி இங்கு காண்போம்.

இளைஞர்கள் கட்டாயம் போகவேண்டிய சுற்றுலாத் தளங்கள் இவை... ஏன் தெரியுமா

PC: Rajarshi MITRA

மும்பை:

மும்பை எப்போதுமே இளைஞர்களின் கனவு தேசமாக பார்க்கப்படுகிறது. இளைஞர்களின் சொர்க்க நகரம் மும்பை மாநகரம். மும்பையின் இரவுகளை அனுபவிக்க மறவாதீர்கள்.

உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகரான மும்பைக்கு பயணப்படுங்கள். அங்குள்ள கேட் வே ஆப் இந்தியா, ஜூகு கடற்கரை, மும்பை கடல் இணைப்பு, விக்டோரியா முனையம் ஆகியவற்றை கண்டிப்பாக பார்க்க மறந்துவிடாதீர்கள்..

முக்கியமாக... மும்பை மாநகர வீதிகளில் கிடைக்கும் சுவை மிகுந்து வகை வகையான உணவுகளை உண்டு மகிழ்ந்து வாருங்கள்.

வயநாடு:

நண்பர்களுடன் முகாமிட இந்தியாவில் உள்ள ஆகச் சிறந்த சுற்றுலாப் பிரதேசம் வயநாடு. இரவு வேளைகளில் பாட்டுப்பாடி ஆட்டமாடி கொண்டாட ஏற்ற இடம் . கேங்பஃயர் போன்ற கொண்டாட்டத்திற்கு சிறந்த இடமாக கருதப்படுகிறது.

சுற்றுலாப் பயணிகளின் உதவியுடன் வயநாட்டில் பல்வேறு இடங்களுக்கு நீங்கள் செல்லலாம். தித்திக்க வைக்கும் ஒரு கொண்டாட்டத்தை நண்பர்களுடன் அனுபவிக்க வேண்டுமா அப்படியென்றால் வயநாடு பயணியுங்கள்

இளைஞர்கள் கட்டாயம் செல்லவேண்டிய சுற்றுலாத் தளங்கள் இவை

PC: Shahnawaz Sid

பங்கார்க்:

நண்பர்களுடன் த்ரில்லான ஒரு விசித்திர தருணத்தை அனுபவிக்க விரும்பும் நபரா நீங்கள். அப்படியென்றால் ராஜஸ்தானுக்கு சுற்றுலா செல்லுங்கள். அங்குள்ள பங்கார்க் கோட்டைக்கு பயணப்படுங்கள்.

விசித்திரமான, பயமுறுத்தும் வகையிலான பல த்ரில் நிகழ்வுகளை அனுபவிக்க நீங்கள் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள இந்த கோட்டைக்கு சுற்றுலா செல்லலாம்.

மர்மமான மகிழக்கூடிய வகையிலான பல நிகழ்வுகளை நாம் இங்கு காணலாம்.

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள வசதியான மேன்சன்கள், உங்களை உண்மையான சுற்றுலாவுக்கு கொண்டு செல்லும். இங்குள்ள சோக்லி தானி பகுதிக்கு போக மறந்துடாதீங்க. ராஜஸ்தானின் பாரம்பரியமிக்க பகுதிகளை ஓவிய வடிவில் பார்வையிட இட்டுச் செல்லும் இந்த இடம் உங்களுக்கு மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும்.

இளைஞர்கள் கட்டாயம் செல்லவேண்டிய சுற்றுலாத் தளங்கள் இவை

PC: Rishabh Mathur

பீமேஷ்வரி:

கர்நாடக மாநிலத்தில் நண்பர்களுடன் சுற்றுலாவுக்கு செல்ல ஏற்ற இடமாக உள்ளது இந்த பீமேஷ்வரி பகுதி. சாகச அனுபவங்கள் நிறைந்த இந்த சுற்றுலா பதின்பருவ இளைஞர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கும்.

கயிறு மேல் நடக்கும் சாகசம், கோரல் ரைடு என சாகச விளையாட்டுக்கள் நிறைய உள்ளது.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+