Search
  • Follow NativePlanet
Share
» »இக்லூ ஹவுஸில் தங்க, ஸ்னோமேன் செய்ய, பனிப்பொழிவில் நனைய உடனே இங்கு செல்லுங்கள்!

இக்லூ ஹவுஸில் தங்க, ஸ்னோமேன் செய்ய, பனிப்பொழிவில் நனைய உடனே இங்கு செல்லுங்கள்!

நாம் ஒரு இடத்திற்கு சுற்றுலா சென்றால் எங்கே தங்குவோம்? ஹோட்டல், ரிசார்ட், ஹோம்ஸ்டே இதில் ஏதாவது ஒன்றில் தான் தங்கி இருப்போம். ட்ரீ ஹவுஸ், டென்ட் ஹவுஸ், கிளாஸ் ஹவுஸ் என புதுப்புது தங்குமிடங்கள் நிறைய வந்துவிட்டன. ஆனால் முழுவதும் பனிக்கட்டியால் ஆன வீட்டில் தங்கினால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தது உண்டா? ஆம் எஸ்கிமோக்களைப் போல இக்லூ வீட்டில் தங்க இப்போது மணாலியின் சேத்தன் பள்ளத்தாக்கிற்கு சென்றால் போதும். புதுவிதமாக உற்சாகமாக ஒரு அனுபவத்தை நாம் பெற்றிடலாம். இங்கு செல்வதற்கான முழு விவரங்களும் இதோ!

புதுவிதமான இக்லூ ஸ்டே

புதுவிதமான இக்லூ ஸ்டே

மலைகளில், புல்வெளிகளில், காடுகளில் என பல்வேறு இடங்களில் நாம் ஏற்கனவே முகாமிட்டு இருப்போம். ஆனால் பனிக்கட்டிகளுக்கு நடுவே முகாமிட்டு தங்க வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் இருந்து இருக்குமே தவிர நாம் நடைமுறையில் அதனை சாத்தியமாக்கி இருக்க மாட்டோம்! ஆனால் இமாச்சலின் மணாலியில் நாம் இனி இக்லூ ஹவுஸில் தங்கலாம். சாதரணமாக வீட்டில் தங்குவது மட்டுமின்றி நாம் கேம்ப்ஃபைர், பார்பிக்யூ, உணவு, சாகச நடவடிக்கைகள், பனிச்சறுக்கு மற்றும் ஸ்னோபோர்டிங் போன்றவற்றிலும் ஈடுபடலாம்.

சேத்தன் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இக்லூ ஸ்டே

சேத்தன் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இக்லூ ஸ்டே

திகைப்பூட்டும் சேத்தன் பள்ளத்தாக்கின் பனி மூடிய மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள இந்த இக்லூ வீடுகள் கடல் மட்டத்திலிருந்து சுமார் 10,000 அடி உயரத்தில் அமைந்துள்ளன. இந்த முழு மண்டலமும் வெள்ளைத் தாள்கள் போன்ற மலைகளாலும் சுற்றிலும் பனி சிகரங்களின் பிரமிக்க வைக்கும் காட்சிகளாலும் சூழப்பட்டுள்ளது. இங்கு சென்று தங்குவதன் மூலம் ஒரு நிச்சயம் ஒரு வித்தியாசமான அனுபவத்தை நாம் பெறலாம்.

நவீன வசதிகள் அடங்கிய எஸ்கிமோ ஸ்டே

நவீன வசதிகள் அடங்கிய எஸ்கிமோ ஸ்டே

பொதுவான கழிவறைகள், படுக்கைகள், வசதியான போர்வைகள் மற்றும் சார்ஜிங் வசதிகள் போன்ற வசதிகளுடன் ஒரே நேரத்தில் ஒரு இக்லூவில் குறைந்தபட்சம் 2 நபர்களும் மற்றும் அதிகபட்சமாக 4 நபர்களும் தங்கலாம்.

உங்கள் முகாமிலிருந்த படியே பனி மூடிய மலைகளின் காட்சிகளுடன் மயக்கும் சூரிய உதயத்தைக் கண்டு மகிழ்ந்திடலாம். பனிச்சறுக்கு, ஸ்னோமேன் தயாரித்தல், டியூப் ஸ்லைடு மற்றும் ஸ்னோ சவாரி போன்ற பல வெளிப்புற செயல்பாடுகளை இந்த முகாம் வழங்குகிறது. உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் மாலையில் இசையுடன் கூடிய கேம்ப்ஃபைரில் ஓய்வெடுக்கவும் வசதி உள்ளது.

விருந்தினர்கள் தங்களுடைய வாகனங்களை முகாம் தளத்தில் ஒதுக்கப்பட்டுள்ள பார்க்கிங் இடத்தில் நிறுத்தலாம். செக்-இன் செய்த உடனேயே ஜம்ப்சூட் மற்றும் ஸ்னோஷூக்கள் வழங்கப்படும். கூடவே, குளிப்பதற்கு வெந்நீர் கிடைக்கிறது.

பனிப்பொழிவில் நனையும் சேத்தன் பள்ளத்தாக்கு

பனிப்பொழிவில் நனையும் சேத்தன் பள்ளத்தாக்கு

இது குளிர்காலம் என்பதால் சேத்தனில் பனிப்பொழிவு ஆரம்பமாகிவிட்டது. தற்போது, மணாலியில் இரவு 8:30 மணியளவில் வெப்பநிலை -4 டிகிரியை எட்டுகிறது, மேலும் இது நள்ளிரவுக்குப் பிறகு -10 டிகிரியாக குறையும். இதனால், சுற்றுலாப் பயணிகளை சூடாக வைத்திருக்க, தூங்கும் பைகளை வழங்குகிறார்கள். இந்த பைகள் -30 டிகிரிக்கு குறைவான வெப்பநிலையில் கூட பயனுள்ளதாக இருக்கும்.

எப்படி செல்வது?

எப்படி செல்வது?

சேத்தன் பள்ளத்தாக்கு, மணாலி மால் சாலையில் இருந்து 13.4 கிமீ தொலைவில் அமைந்துள்ளது, பொது அல்லது தனியார் போக்குவரத்து முறைகளைப் பயன்படுத்தி எளிதில் சேத்தனை அணுகலாம்.

மணாலிக்கு அருகிலுள்ள விமான நிலையம் இமாச்சலப் பிரதேசத்தின் பூந்தர் விமான நிலையம் ஆகும், இது முகாமிலிருந்து 65 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. விமான நிலையத்திலிருந்து ஒரு டாக்ஸி அல்லது பகிரப்பட்ட வாகனம் ஒன்றை வாடகைக்கு அமர்த்திக் கொள்ளலாம்.

மணாலி பேருந்து நிலையம் முகாமில் இருந்து 25 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மேலும் 312 கி.மீ தொலைவில் சண்டிகர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. பேருந்து மற்றும் ரயில் நிலையங்களிலிருந்து ஒரு டாக்ஸி அல்லது பகிரப்பட்ட வாகனம் ஒன்றை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு முகாமிற்கு செல்லலாம்.

இனி இந்தியாவில் இருந்தபடியே ஆர்க்டிக் பகுதியில் இருப்பது போன்ற ஒரு உணர்வை பெற்றிட முடியும். சேத்தன் பள்ளத்தாக்கின் பனி மூடிய மலைகளின் பின்னணியில் ஒரு இக்லூவிற்குள் இரவைக் கழித்து, உங்கள் குழந்தைப் பருவக் கனவை மெய்பித்திட உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை தவறவிட்டுடாதீர்கள்!

More News

    Read more about: manali himachal pradhesh
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+