• Follow NativePlanet
Share
» »11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நவ தோரான் திருக்கோவிலுக்கு செல்வோமா?

11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நவ தோரான் திருக்கோவிலுக்கு செல்வோமா?

நீமுச் மாவட்டத்தில் உள்ள கோர் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது நவ தோரான் திருக்கோவில். இந்த அழகிய திருக்கோவில், 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இது மிகவும் சிறப்பு வாய்ந்த கோயில் ஆகும். இரண்டு வரி

By Udhaya

நீமுச் மாவட்டத்தில் உள்ள கோர் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது நவ தோரான் திருக்கோவில். இந்த அழகிய திருக்கோவில், 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இது மிகவும் சிறப்பு வாய்ந்த கோயில் ஆகும். இரண்டு வரிசைகளில்,அழகிய அலங்கார வளைவுகளைக் கொண்டுள்ளது. இந்த வளைவுகள் கோவிலின் மத்தியில் சந்திக்கின்றன. இரண்டு தூண்கள் கோவிலின் கூரையை தூக்கிப் பிடித்தவாறு நிற்கிறது. இக்கோவிலின் மிகப் பெரிய சிறப்பு அங்கிருக்கும் அழகிய வராஹர் சிலையாகும். இலை வடிவில் பதாககைகள், மாலையோடு நிற்பவர்கள், மகராஸ் தலை என கோவில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோர் கிராமத்தில், விக்ரம் சிமெண்ட் கேம்பஸ் அருகில் நவ தோரான் திருக்கோவில் அமைந்துள்ளது..

 காந்தி சாகர் அணை

காந்தி சாகர் அணை

நீமுச் அருகே உள்ள மண்ட்சார் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது காந்தி சாகர் அணை. இந்த அணை மத்திய பிரதேசத்தில் இருக்கும் முக்கிய சுற்றுலாத்தளங்களில் ஒன்றாகும். சாம்பல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் மிகவும் பிரம்மாண்ட அணையாகத் திகழ்கிறது காந்தி சாகர் அணை. 1954 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7 ஆம் தேதி, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களால் அடிக்கல் நட்டு பணிகள் துவக்கிவைக்கப்பட்டது இந்த அணை. இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய நீர்த்தேக்கமாக திகழும் காந்தி சாகர் அணை, ஆயிரக்கணக்கான பறவைகளுக்கு சரணாலயமாகவும் விளங்குகிறது. சர்வதேச பறவைகள் வாழ்வு இயக்கம் இந்த அணைப் பகுதியை பறவைகள் சரணாலயமாக அடையாளப்படுத்தியுள்ளது. 204 அடி உயரமும், 514 அடி நீளமும் கொண்ட இந்த அணையில், நீர் மின்சார நிலையம் அமைக்கப்படுள்ளது. அணையின் தளும்புவாயிலில், ஒரு நொடிக்கு, சுமார் 21,248 கன மீட்டர் நீர் வெளியேறுகிறது என்றால், அணை எந்தளவுக்கு பெரியதாக இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க முடிகிறது. சுற்றுலாவாக இருந்தாலும் சரி, ஆராய்ச்சியாக இருந்தாலும் சரி, காந்தி சாகர் அணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

காந்தி சாகர் சரணாலயம்

காந்தி சாகர் சரணாலயம்


மத்திய பிரதேசத்தில், நீமுச் மற்றும் மண்ட்சார் மாநிலத்திற்கு வடக்கே அமைந்துள்ள காந்தி சாகர் சரணாலயம், இயற்கை அழகை அள்ளித் தரும் ஒரு அற்புதமான இடம். 1974 ஆம் ஆண்டு அடையாளம் காணப்பட்ட காந்தி சாகர் சரணாலயம், 1983 ஆம் ஆண்டு விரிவுபடுத்தப்பட்டது. இப்பொழுது, இந்த சரணாலயத்தின் பரப்பளவு 368.82 சதுர கிலோமீட்டரையும் விட அதிகமாக இருக்கிறதாம். எழில் கொஞ்சம் இயற்கை அழகு, நம் மனதிற்கு அமைதியையும், நிம்மதியையும் தரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இந்தச் சரணாலயம் பரந்து விரிந்து ராஜஸ்தான் மாநிலத்தை தழுவி நிற்கிறது. காந்தி சாகர் சரணாலயத்தின் குறுக்கே ஓடும் சாம்பல் ஆறு, இச்சரணாலயத்தை இரண்டாகப் பிரிக்கிறது. மேற்கே இருக்கும் பாகம் நீமுச் மாவட்டத்திலும், கிழக்கே இருக்கும் பாகம் மண்ட்சார் மாவட்டத்திலும் இருக்கிறது. இயற்கை அழகை ரசிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தச் சரணாலயம் ஒரு வரப்பிரசாதம்.

 பத்வமாதா திருக்கோவில்

பத்வமாதா திருக்கோவில்

நீமுச்சில் இருந்து 18 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது பத்வமாதா திருக்கோவில். சலவைக்கற்களால் கட்டப்பட்ட இத்திருக்கோவிலில் மஹாமய பத்வமாதா சிலை உள்ளது. இந்தச் சிலையைச் சுற்றி ஒன்பது நவதுர்கைச் சிலைகள் அமைந்துள்ளன. பிரம்மி, மகேஷ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராஹி, நர்சின்ஹி, ஏந்த்ரி, சிவிதத்தி மற்றும் சாமுண்டா ஆகிய ஒன்பது நவதுர்கை சிலைகளைக் கொண்டுள்ளது இத்திருக்கோவில். சக்தியை பிரதானமாக கொண்ட கோவில்களில் பத்வமாத திருக்கோவிலுக்கு முக்கிய இடம் உண்டு. இக்கோவிலில் இருக்கும் பாவ்தி புனித நீரை ஆரோக்ய தீர்த்தம் என்று அழைக்கின்றனர். இந்தப் புண்ணிய தீர்த்தத்தில் நீராடினால், அனைத்து விதமான தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளும் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்தத் திருக்கோவிலில் பத்வமாதா வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள் பாவிக்கிறார். தினமும் நடக்கும் பூஜை புணஸ்காரங்களைப் பார்க்க பக்தர்கள் பலர் வருகின்றனர்.

சுகாநந்த்ஜி ஆஸ்ரமம்

சுகாநந்த்ஜி ஆஸ்ரமம்

நீமுச் நகரில் இருந்து சுமார் 32 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது சுகாநந்த்ஜி ஆஸ்ரமம். இது ராஜஸ்தான் மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ளது. தொன்மையான குகை ஒன்றில் பிரம்மாண்டமாக அமைந்திருக்கிறது இந்த ஆஸ்ரமம். சிவபெருமான் கோவிலும் இந்த ஆஸ்ரமத்துக்குள் இருக்கிறது. இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் இந்த ஆஸ்ரமம் அமைந்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் பலரும் இங்கு வந்து செல்கின்றனர். 24000 ஸ்லோகன்களைக் கொண்ட பாரத் சம்ஹிதா என்னும் நூலை இயற்றியவர் வியாசதேவர் அல்லது வேதவியாசர். வேதவியாசரின் மகன் சுகா தான் இந்த ஆஸ்ரமத்தைத் தோற்றுவித்தவர். சுகாநந்த்ஜி ஆஸ்ரமத்தில், ஹர்யாலி அமாவாசை மற்றும் பைசக் பூர்ணிமா அன்று நடத்தப்படும் திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இத்திருவிழாவைக் கான பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர்.

More News

    Read more about: travel temple
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+