Search
  • Follow NativePlanet
Share

நீமுச் - எழில் கொஞ்சும் ராணுவ நகரம்!

20

நீமுச் மாவட்டம், 1998 ஆம் ஆண்டு, ஜூன் 30-ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இதற்கு முன், நீமுச் மாவட்டம், மத்தியபிரதேசத்தின் மண்ட்சார் மாவட்டத்துடன் இணைந்திருந்தது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், இது ஒரு ராணுவ நகரமாக திகழ்ந்தது. இதனை வட இந்திய பீரங்கி மற்றும் குதிரைப்படையின் தலைமையகம் என்பர்(North India Mounted Artillery and Cavalry Headquarters (NIMACH)). இதன் பின்னர், 1939-ஆம் ஆண்டு, அரசாங்க பிரதிநிதிகளின் போலீஸ் படையின் தலைமையகமாக மாற்றப்பட்டது. மத்திய பிரதேசத்தில் இருக்கும் ராணுவ நகரங்களில், நீமுச்சிற்கு முக்கியமான இடம் உண்டு.

நீமுச் நகரைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் பல்வேறு இடங்கள் நீமுச் நகரில் உள்ளது. சுகாநந்த்ஜி ஆஸ்ரமம், நவ தோரான் கோவில், காந்தி சாகர் அணை, காந்தி சாகர் சரணாலயம், பத்வமாதா கோவில் என நீமுச் நகரில் பார்க்க வேண்டிய இடங்கள் பல உள்ளன.நம் கண்களைக் கவரும் அழகிய பல சந்தைகளும் நீமுச்சில் இருக்கின்றன.

நீமுச் நகரின் மரபும், தனிச்சிறப்பும்!

தாசியாவின் முஹரம் ஊர்வலம் நீமுச்சில் மிகவும் புகழ் வாய்ந்தது. சுமார் 150 வருடங்களாக தொடர்ச்சியாக இந்த ஊர்வலம் நடைபெற்றுவருகிறது. சுற்றுலாப் பயணிகள் இதனைக் காண்பதற்கென்றே நீமுச் நகருக்கு வருகின்றனர்.

இமாம் ஹுசைனின் உயிர்த் தியாகத்தை நினைவு கூறும் வகையில் இந்த ஊர்வலம் நடத்தப்படுகிறது. மத்திய பிரதேச மாநிலத்தின் மிகச் சிறந்த சுற்றுலாத் தளங்களில் நீமுச்சும் ஒன்றாகும்.

நீமுச்சை அடைவது எப்படி?

மத்திய பிரதேசத்தில் இருந்து நீமுச் வர பல போக்குவரத்து வசதிகள் உள்ளன. விமானம் மூலமாக வர விரும்புவர்கள், உதய்பூர் விமான நிலையத்தை அடைந்து, அங்கிருந்து பேருந்து அல்லது கார் மூலம் நீமுச்சை அடையலாம்.

நீமுச் செல்ல சிறந்த காலம்

குளிர் காலத்தில் நீமுச்சின் அழகை முழுமையாக ரசிக்க முடியும்.

நீமுச் சிறப்பு

நீமுச் வானிலை

சிறந்த காலநிலை நீமுச்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது நீமுச்

  • சாலை வழியாக
    உதய்பூர் போன்ற முக்கிய நகரங்களில் இருந்து நீமுச் செல்ல பேருந்து வசதிகள் உண்டு. வேறு மாநிலத்தில் இருந்து பல பேருந்துகள் நீமுச்சிற்கு இயக்கப்படுகின்றன. டேக்சி மூலமாகவு நீமுச் வருவதும் ஒரு சிறந்த தேர்வாகும்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    நீமுச்சில் ரயில் நிலையம் உள்ளது. உள்ளூர் ரயில்கள் மட்டுமல்லாது, வேறு மாநிலங்களிலும் இருந்தும், பல ரயில்கள் நீமுச்சிற்கு இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து சுமார் 110 கிமீ தொலைவில் உள்ளது நீமுச். விமான நிலையத்திலிருந்து டேக்சி மூலமாகவோ அல்லது பேருந்து மூலமாகவோ நீமுச்சை அடையலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue

Near by City