Search
  • Follow NativePlanet
Share
» »தமிழ் திரை நட்சத்திரங்களை காண வேண்டுமா – சென்னையின் இந்த இடங்களுக்கு செல்லுங்கள்!

தமிழ் திரை நட்சத்திரங்களை காண வேண்டுமா – சென்னையின் இந்த இடங்களுக்கு செல்லுங்கள்!

பிரபல தமிழ் திரைப்பட பிரபலங்களான ரஜினிகாந்த், கமல், விஜய், அஜித், நயன்தாரா, திரிஷா உட்பட அனைத்து தமிழ் திரைப்பட நட்சத்திரங்களும் வசிக்கும் இடம் சென்னை தான்! நாமும் சென்னையில் தானே இருக்கிறோம், ஆனால் இவர்களில் ஒருவரை கூட நாம் இதுவரை பார்த்தது இல்லையே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இவர்கள் யாரும் நாம் செல்லும் இடங்களுக்கு செல்வது இல்லை, கீழ்க்கண்ட இடங்களுக்கு சென்றால் திரை நட்சத்திரங்களை நாம் காணலாம்!

ஸ்டார் ஹோட்டல்கள்

கண்டிப்பா சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டல்களில் நாம் திரை நட்சத்திரங்களை பார்ப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் எல்லாம் அதிகம் நண்பர்களுடன் பேசுவது, சந்திப்பது, பிறந்தநாள் கொண்டாட்டம் என அங்கே தான் சந்திக்கிறார்கள். சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டல்களின் லிஸ்ட்:

· ITC சோழா ஹோட்டல்

· ஹில்டன்

· பார்க் ஷெரட்டன்

· தி பார்க்

· லி மெரிடியன்

· பார்க் ஹயாட்

rajni1

பிலிம் ஸ்டுடியோக்கள்

சென்னையில் உள்ள பிரபல திரைப்பட ஸ்டுடியோக்களில் பல திரைப்படங்கள் செட் போட்டு படம் எடுக்கப்படுகின்றன. அந்த வகையில் நாம் சென்னையில் உள்ள ஸ்டுடியோக்களுக்கு சென்றால் தமிழ் திரைப்பட நடிகர்களை காணலாம்.

· ஏ.வி.எம் ஸ்டுடியோ

· பிரசாத் ஸ்டுடியோ

· EVP பிலிம் சிட்டி

· செவன்த் சேனல் கம்யூனிகேஷன்ஸ்

· பின்னி மில்

3பிரபலமான உணவகங்கள் மற்றும் கஃபேக்கள்

சென்னையில் பல பிரபலமான உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் உள்ளன. மரீனா கடற்கரையில் இருந்து, பெசன்ட் நகர் வரை இந்த இடங்களில் எல்லாம் நாம் பிரபல திரை நட்சத்திரங்களை காணலாம். பெஷாவ்ரி, கிப்லிங் கஃபே மற்றும் அமேதிஸ்ட் கஃபே போன்ற இடங்கள் நீங்கள் அவர்களைக் காணக்கூடிய சில இடங்களாகும்.

vijay1

முதல் நாள் முதல் ஷோ

எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்கள், பெரிய பட்ஜெட் திரைப்படங்கள், பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளிவரும் போது தமிழகத்தில் பெரிய எதிர்பார்ப்பு உருவாகிறது. அவற்றில் நடித்தவர்கள் உட்பட பல திரை நட்சத்திரங்களை நீங்கள் முதல் நாள் முதல் ஷோவில் பார்க்கலாம். சத்யம், ரோஹினி சினிமாஸ், PVR சினிமாஸ், ஏரோஹப் உள்ளிட்ட இடங்களில் நீங்கள் திரை நட்சத்திரங்களை பார்க்கலாம்.

nayanthara1

விருது நிகழ்ச்சிகள்/ இசை கச்சேரிகள்

திரைப்பட பிரீமியர், விருது நிகழ்ச்சிகள், இசை கச்சேரிகள் மற்றும் பிற தொழில்துறை நிகழ்வுகள் தமிழ் திரைப்பட நட்சத்திரங்களைப் பார்க்க வெளிப்படையான இடங்கள் ஆகும். ஆகையால், சென்னை நகரத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் பற்றிய அறிவிப்புகளை வெளியானால் அவற்றின் மீது ஒரு கவனம் வைத்திருங்கள். அதுவும் சமீபகாலமாக சென்னையில் அடிக்கடி இசை கச்சேரிகள் நடைபெறுகின்றன. அங்கே எல்லாம் சென்றால் நீங்கள் நிச்சயமாக சில பிரபலங்களை கண்டு விடுவீர்கள்.

trisha1

பீச் ரிசார்ட்ஸ்

திரை பிரபலங்களை காண இன்னொரு இடம் பீச் ரிசார்ட்ஸ், பெரும்பாலான திரை நட்சத்திரங்கள் வார இறுதியில் அல்லது ஓய்வு நேரம் கிடைக்கும் போது பிரபல நட்சத்திரங்கள் ஓய்வெடுக்க பீச் ரிசார்ட்களுக்கு சென்று விடுகின்றனர். பேமஸ் பீச் ரிசார்ட்களில் சில:

· கிராண்ட் பே ரிசார்ட் அண்ட் ஸ்பா

· சாரியாட் பீச் ரிசார்ட்

· ரேடிசன் ப்ளு

· MGM பீச் ரிசார்ட்ஸ்

· தாஜ் ஃபிஷர்மேன் கோவ்

More News

    Read more about: chennai tamilnadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+