கர்நாடக மாநிலத்தில் தன் பெயரையே மாவட்டமாக கொண்டு அமைந்துள்ளது இந்த சிக்மகளூர் நகரம். நாளுக்கு நாள் அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகளை தன் வசம் ஈர்க்கும், சுற்றிலும் பல சுற்றுலாப்பகுதிகளை கொண்டுள்ள நகரமாக இதுபுகழ் பெற்று விளங்குகிறது.
கர்நாடகத்தில் மலைசார்ந்த சதுப்பு நில பகுதியை அதிகமாக கொண்டுள்ள மலநாடு பகுதியை ஒட்டி அமைந்துள்ளது இந்த சிக்மகளூர் நகரம்.
சிக்மகளூர் என்றால் சின்ன மகளின் ஊர் என்பது பொருளாம். ஒரு சரித்திர புகழ் பெற்ற குறுநில மன்னரின் இளைய மகளுக்கு கல்யாண சீராக கொடுக்கப்பட்ட ஊர் என்பதால் இந்த பெயர் வந்துள்ளது.
சரி.. ஊரே திரண்டு பொழுதை கழிக்க செல்ல சிக்மகளூரில் அப்படி என்னதான் இருக்குனு தெரிஞ்சிக்கணுமா? வாங்க வாங்க....

சிக்மகளூரு
சிக்மகளூர் மிக பழமையான அழகுடன் விளங்கி இங்கு வருகை தரும் பயணிகளை சாந்தப்படுத்தும் இயல்புடன் விளங்கினாலும், அதைச்சூழ்ந்துள்ள பிரதேசம் பலதரப்பட்ட அம்சங்களுடன் கலந்து காணப்படுகிறது.
Prof. Mohamed Shareef

காபி தலைநகரம்
சமவெளிப்பகுதி மற்றும் மலைகள் நிறைந்த மலநாடு பகுதி இவற்றுடன் எண்ணற்ற காபி தோட்டங்களும் நிறைந்துள்ளதால் இது கர்நாடகாவின் காபி தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது.
Vikram Vetrivel

மஹாத்மா காந்தி பூங்கா
சிக்மகளூர் நகரத்தில் முக்கிய சுற்றுலா அம்சமாக மஹாத்மா காந்தி பூங்காஅமைந்துள்ளது. பொதுவாக சுற்றுலா பயணிகள் தசரா திருவிழா மற்றும் அதையொட்டி வரும் நவராத்திரி திருவிழா கொண்டாட்டங்களின் போது சிக்மகளூருக்கு வருகை தர விரும்புகின்றனர்.
Shashank Bhat

நாட்டுப்புற கலை
அச்சமயம் இங்கு நடைபெறும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் பாரம்பரிய கொண்டாட்டங்களும் எந்த ஒரு பயணியையும் ஆச்சரியத்தில் மூச்சடைக்க வைக்கும் இயல்பு கொண்டவையாக உள்ளன.
Manjunatha Narasimhaiah

சாகச பிரியர்களுக்கு
ஷாப்பிங் பிரியர்களுக்கு ஏற்றவகையில் இங்கு எம். ஜி ரோடு மார்க்கெட் பகுதி அமைந்துள்ளது. சாகச பிரியர்களுக்கு ஏற்ற இதர அம்சங்களும் சிக்மகளூரைச் சுற்றிலும் நிறைந்துள்ளன.
editor CrazyYatra

கான்கிரீட் காட்டிலிருந்து ஒரு விடுதலை
புண்ணிய யாத்ரிக தலங்களிலிருந்து காபி தோட்டங்கள் வரை மற்றும் காட்டுயிர் பூங்கா, சாகச பொழுது போக்கு அம்சங்கள், மலை நகரங்கள், கோயில் நகரங்கள், நீர் வீழ்ச்சிகள் வனவிலங்கு சரணாலயங்கள் என்று அத்தனையையும் சிக்மகளூர் கொண்டுள்ளது.
editor CrazyYatra

கெம்மங்குந்தி
சிக்மகளூருக்கு அருகிலுள்ள கெம்மங்குந்தி எனும் இடம் மஹாராஜா நான்காம் கிருஷ்ணராஜா உடையாருக்கு மிகவும் பிடித்த மலை வாசஸ்தலமாகும். இங்கு ரோஜாத்தோட்டம் மற்றும் அழகிய நீர்வீழ்ச்சிகள் போன்றவை உள்ளன.
Yathin S Krishnappa

குத்ரேமூக்
குத்ரேமூக் என்றைழக்கப்படும் மற்றொரு மலை வாசஸ்தலமும் சிக்மகளூருக்கு அருகில் அமைந்துள்ளது. பசுமையான புல்வெளிகளையும் அடர்ந்த காடுகளையும் கொண்ட இந்த இடம், ஒரு குதிரையின் முகம் போன்று தோற்றமளிக்கும் மலையை கொண்டுள்ளதால் குத்ரேமுக் என்று அழைக்கப்படுகிறது.
Naveen

முல்லயநகரி சிகரம்
இப்பகுதியிலுள்ள பாபா புதான்கிரி மலைகளில் உள்ள முல்லயநகரி சிகரம் கர்நாடக மாநிலத்திலுள்ள மிக உயர்ந்த சிகரமாகும். 1930 மீட்டர் உயரமுள்ள இந்த சிகரம் மலையேற்றத்துக்கு மிக பொருத்தமான இடமாகும்.
Siddharthsrinivasan87

காளத்துகிரி நீர்வீழ்ச்சி
சிகரத்திலிருந்து கீழே பார்த்தால் கீழே விரியும் கண்கவர் இயற்கை காட்சிக்காகவே, அந்த அற்புத அனுபவத்துக்காகவே இந்த சிகரத்தில் ஏறலாம். இந்த மலைப்பகுதியில் காளத்துகிரி நீர்வீழ்ச்சி அல்லது காளஹஸ்தி நீர்வீழ்ச்சி, இரண்டு பிரிவுகளாக பிரிந்துள்ள ஹெப்பே நீர்வீழ்ச்சி போன்றவை உள்ளன.
Girish

சிறு அருவிகள்
சிறு அருவிகளான மாணிக்யதாரா அருவி, ஷாந்தி அருவி, கடம்பி அருவி போன்றவையும் சிக்மகளூர் பகுதியில் காணப்படுகின்றன.
வனத்தையும் ஆன்மீகத்தையும் நோக்கிய ஒரு பயணம்
Dada Hayath

ஆன்மீக தலங்கள்
சிக்மகளூருக்கு அருகில் பல ஆன்மீக தலங்களான சிருங்கேரி, ஹொரநாடு மற்றும் கலாசா போன்றவை உள்ளன.
Kalasa

பத்ரா
சிக்மகளூரிலிருந்து 38 கி.மீ அருகில் பத்ரா சரணாலயம் காட்டுயிர் சுற்றுலா விரும்பிகளின் அபிமான ஸ்தலம் ஆகும்.
Dineshkannambadi

யார் யார் செல்லலாம்?
இயற்கை அழகை அதன் முழு பிரம்மாண்டமத்தோடு ரசிக்க விரும்பும் இரும்பு மனம் கொண்டவர்கள் இந்த சரணாலயத்துக்கு விஜயம் செய்யலாம்.
Kumar da

கண்டிப்பாக வாங்க
மொத்தத்தில் சிக்மகளூர் நகரமும் அதன் மாவட்டமும் எல்லோருக்கும் பிடித்தமான ஏதோ ஒன்றை - அவர்களின் சொந்த ரசனைகளையெல்லாம் தாண்டிய ஏதோ ஒன்றை தன்னுள் கொண்டிருக்கிறது. அதை இங்கு வந்து அனுபவித்து பார்த்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.
nneel

எப்படி செல்வது?
இங்கிருந்து பெங்களூர் 240 கி.மீ தூரத்திலும், மங்களூர் 150 கி.மீ தூரத்திலும், ஹூப்ளி 306 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளன. அரசு போக்குவரத்து நிறுவனமான KSRTC மற்றும் தனியார் சொகுசு பேருந்துகள் இந்த நகரங்களிலிருந்து அதிக எண்ணிக்கையில் சிக்மகளூருக்கு இயக்கப்படுகின்றன.
காடூர் (40 கி.மீ) மற்றும் ஹாசன் (60 கி.மீ) இரண்டும் சிக்மகளூருக்கு அருகிலுள்ள ரயில் நிலையங்களாகும்.
விமான நிலையம் சிக்மகளூரிலிருந்து 149 கிலோ மீட்டரில் அமைந்துள்ளது. மங்களூர் விமான நிலையம் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இந்திய நகரங்கள் வரை விமான சேவைகளை பெற்றுள்ளது. இங்கிருந்து வாடகை டாக்சிகள் மூலம் பயணிகள் சிக்மகளூரை வந்தடையலாம்.
nneel



Click it and Unblock the Notifications




