Search
  • Follow NativePlanet
Share
» »சபரிமலை ஐயப்பனுக்கு நீங்களும் கடிதம் எழுதலாம் தெரியுமா? ஐயப்பனுக்காக மட்டுமே செயல்படும் சிறப்பு தபால் நிலையம்!

சபரிமலை ஐயப்பனுக்கு நீங்களும் கடிதம் எழுதலாம் தெரியுமா? ஐயப்பனுக்காக மட்டுமே செயல்படும் சிறப்பு தபால் நிலையம்!

இந்திய நாட்டில் இருவருக்கும் மட்டுமே தனி தபால் குறியீடு உள்ளது, அவர்களின் பெயர்களுக்கு கடிதம் எழுதினால் நேரடியாக அந்த கடிதங்கள் அவர்களை சென்றடையும். அந்த இருவர் - இந்திய நாட்டின் குடியரசு தலைவர், மற்றொருவர் அந்த சபரிமலை தர்ம சாஸ்தா ஆவார். ஆம், சபரிமலையின் ஐயப்பனுக்காக மட்டுமே சிறப்பு தபால் நிலையம் செயல்படுகிறது. நீங்கள் நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் சபரிமலை ஐயப்பனுக்கு உங்களின் மனதில் உள்ளதை ஒரு கடிதமாக எழுதி அனுப்பலாம். இந்த கடிதம் நேரடியாக சபரிமலை ஐயப்பன் காலடியை சென்றடைகிறது!

சபரிமலை ஐயப்பனுக்காக செயல்படும் பிரத்யேக தபால் நிலையம்

இந்தியாவில் உள்ள முக்கிய வழிபாட்டு தலங்களில் கேரளாவில் உள்ள சபரிமலை ஐய்யப்பன் கோயிலும் ஒன்று. ஆண்டுதோறும் மண்டல பூஜை, மகரவிளக்கு சீசனுக்கு நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் இந்த கோயிலுக்கு வருகின்றனர். குறிப்பாக கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து இந்த கோயிலுக்கு வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக, சபரிமலையில் ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு பூஜை நேரங்களில் மட்டும் தபால் சேவை செய்வதற்காக பிரத்யேகமாக தற்காலிக தபால் நிலையம், 1960-ஆம் ஆண்டு நிறுவியது.

Write a letter to Sabarimala Ayyappan

தங்களின் நிறை, குறைகளை ஐயப்பனுக்கு தெரிவிக்கும் பக்தர்கள்

சன்னிதானம் தபால் நிலையத்திற்கு தினமும் அறுபது முதல் எழுபது மணியார்டர்களும், நூற்றிலிருந்து நூற்றைம்பது கடிதங்களும் வருகின்றன. அதில் சபரிமலை ஐயனை இல்லறம் புதுமனை புகு விழா மற்றும் திருமண விழாக்களுக்கு அழைப்பிதழ் அனுப்பியும் மேலும் பலர் தங்களது வருத்தங்களையும் குறைகளையும், வாழ்க்கை துயரங்களை ஐயனுக்கு தெரிவித்துக் கொண்டும் கடிதங்கள் அனுப்புகின்றனர்.

மண்டல பூஜை நேரத்தில் மட்டுமே செயல்படும் தபால் நிலையம்

சன்னிதானம் தபால் நிலையம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16 முதல் ஜனவரி 20 வரை திறந்திருக்கும். அஞ்சல் மற்றும் அஞ்சல் குறியீடு இந்த மூன்று மாத காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். மேலும் இந்த தபால் நிலையம் விஷூ பண்டிகை ஒட்டி 10 நாட்களுக்கு திறந்திருக்கும். தபால் நிலையம் மூடும் போது அஞ்சல் முத்திரையை பத்தனம்திட்டா தபால் நிலையத்தில் உள்ள அஞ்சல் காணிப்பாளரின் லாக்கருக்கு மாற்றப்படும்.

கடிதங்களை படிக்க ஓராண்டு கூட போதாது

மண்டல, மகரவிளக்கு பூஜை நடைபெறும் காலத்தில் மட்டுமே இந்த தபால் எண் செயல்பாட்டில் இருக்கும். 62 நாட்களுக்கு பிறகு இந்த அஞ்சல் குறியீட்டு எண் செயலிழப்பு செய்யப்படும். மீண்டும் அடுத்த ஆண்டு மண்டல, மகரவிளக்கு பூஜை சமயத்திலேயே பயன்படுத்தப்படும். ஐயப்பனிற்கான தபால் குறியீட்டு எண்ணிற்கு வரும் கடிதங்களை படிக்க ஓராண்டு கூட போதாது என்னும் அளவிற்கு அவ்வளவு கடிதங்கள் தினமும் வருவதாக தபால் நிலைய அலுவலர்கள் கூறுகின்றனர். பலரும் தங்களின் கவலை, சோகம், கஷ்டம், வீட்டில் நடக்கும் விசேஷங்கள் என பலவிதமான உணர்வுகளை பகிர்ந்து கடிதங்களை அனுப்புவதாக சொல்லப்படுகிறது.

தலை மீது சுமந்து சென்று கடிதங்களை வழங்கும் ஊழியர்கள்

இந்த அஞ்சலகத்தில் உள்ள ஊழியர்கள் மற்ற அஞ்சல் பிரிவுகளில் இருந்து டெப்டடேஷனில் உள்ளனர். தற்போது, இங்கு போஸ்ட் மாஸ்டர், ஒரு தபால்காரர் மற்றும் இரண்டு பல்பணி ஊழியர்கள் என நான்கு பணியாளர்கள் உள்ளனர். நான்கு பேரும் தபால் நிலையத்துடன் இணைக்கப்பட்ட அறையில் தங்கிவிட்டு, பண்டிகைக் காலம் முடிந்த பிறகுதான் வீட்டுக்குச் செல்கிறார்கள். இன்றுவரை தபால்களை தங்களின் தலை மீது சுமந்து சென்றே சன்னிதானத்தில் வைக்கின்றனர்.

குறை தீர்க்கும் சபரிமலை தர்மசாஸ்தா

தாங்கள் அனுப்பும் கடிதத்தை ஐயப்பனே பிரித்து படித்து, தங்களின் குறைகளை தீர்த்து வைப்பதாக பக்தர்களின் நம்பிக்கை. இவற்றை ஐயப்பன் முன் வைத்து விட்டு, பிறகு நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் ஒப்படைத்து விடுவர். கடந்த 1963 ம் ஆண்டு முதல் சபரிமலையில் போஸ்ட் ஆபீஸ் செயல்பட துவங்கியது. இதைத் தொடர்ந்து ஐயப்பன் படம் மற்றும் 18 படிகளுடன் கூடிய முத்திரை அறிமுகமானது. இந்த முத்திரை பதித்த கடிதம் தங்கள் வீடுகளுக்கு வருவதை பக்தர்கள் புண்ணியமாக கருதுகின்றனர்.

இப்படி, நீங்களும் சபரிமலை தர்மசாஸ்தாவுக்கு கடிதம் எழுதலாம்!

More News

Read more about: sabarimala
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+