ஹர்சித்தி கோவில், கோவில் நகரமான உஜ்ஜைன்னில் முக்கிய பங்கு வகிப்பதால், இது ஒரு விசேஷ கோவிலாக பார்க்கப்படுகிறது. இந்த கோவில் அன்னபூர்ணி தேவிக்காக கட்டப்பட்டதாகும்.
கருமையான செந்நிறத்தில் அன்னபூர்ணி தேவியின் ஓவியம் இங்கு தீட்டப்பட்டுள்ளது. மேலும் அன்னபூர்ணி தேவியின் சிலை மஹாலக்ஷ்மி மற்றும் சரஸ்வதி தேவியின் சிலைகளுக்கு நடுவில் நிறுவப்பட்டுள்ளது.
சக்தியின் அடையாள சின்னமாக விளங்கும் ஸ்ரீ யந்த்ராவையும் இங்கு காணலாம். சிவபெருமான் சதி தேவியை உடம்பை தூக்கிச் செல்லும் போது, தேவியின் முழங்கை இங்கே விழுந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
மராத்தர்கள் ஆட்சி காலத்தில் இந்த கோவில் புதுபிக்கப்பட்டதால், மராத்தா கலையை இங்குள்ள விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இரண்டு தூண்களில் காணலாம்.
இந்த கோவில் வளாகத்தில் பழமை வாய்ந்த கிணறு ஒன்று உள்ளது. மேலும் இங்குள்ள ஒரு அழகிய தூணை கோவிலின் உச்சியில் காணலாம். இங்குள்ள கடவுளும் சக்தி வாய்ந்தவர் என்று உள்ளூர் மக்களால் நம்பப்படுகிறது.



Click it and Unblock the Notifications