உத்தர்காஷியிலிருந்து சுமார் 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நச்சிக்கேத்தா தால், ஒரு அழகிய ஏரியாகும். இவ்வேரி, ஓக், பைன், ரோடோடென்ட்ரான் போன்ற மரங்களால் சூழப்பட்டுள்ளதால் மேலும் அழகுற காட்சியளிக்கிறது.
இந்த ஏரி, உத்தலாக் முனிவரின் மகனாகிய நச்சிகேத்தாவினால் உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள், உத்தர்காஷியிலிருந்து சுமார் 29 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சௌரங்கி காலில் இருந்து சுமார் 3 கி.மீ. நடைப்பயணம் மேற்கொண்டு, நச்சிக்கேத்தா தாலை அடையலாம். நச்சிக்கேத்தா தாலில் தங்கும் வசதிகள் கிடையாது; அதனால் பயணிகள் சௌரங்கி கால் அல்லது உத்தர்காஷியில் தான் தங்க வேண்டி இருக்கும்.



Click it and Unblock the Notifications