கடந்த 1965 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி நிறுவப்பட்ட நேரு மலையேற்ற நிலையம், மலைகளின் மேல் அலாதி பிரியம் கொண்டிருந்த இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பெயரால் வழங்கப்படுகிறது.
இந்தியாவின் தலை சிறந்த மலையேற்ற நிலையங்களுள் ஒன்றான இது, ஆசியா முழுவதிலும் நன்கு அறியப்பட்டதாகத் திகழ்கிறது. அதன் பெயர் உணர்த்துவது போலவே, இந்நிலையம் மலையேற்றம் மற்றும் இதர சாகசங்களில், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றது.
இங்கு பயிற்சியின் போது சுற்றுச்சூழல் விதிகள் அனைத்தும் ஒழுங்காகக் கடைபிடிக்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது. இதன் மூலம் மக்களுக்கும் விழிப்புணர்வு உண்டாக்குகிறது. 1860 ஆம் ஆண்டின் ஆக்ட் எண் XXI இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த நிலையம் உத்தர்காண்ட் முதலமைச்சரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.



Click it and Unblock the Notifications