பௌத்த மதத்திற்கு தன்னை மாற்றிக் கொண்டு, பௌத்த மதத்தின் கருத்துக்களை உலகமெல்லாம் பரப்பும் பணியை செய்து கொண்டிருந்த அசோகரால், பரவலாக உருவாக்கப்பட்ட தூண் தான் அசோகர் தூண் அல்லது சிங்கத் தூண் என்று அழைக்கப்படுகிறது. அசோகர் தன்னுடைய நம்பிக்கை மற்றும் பக்தியை இந்த அற்புதமான கலை வேலைப்பாட்டின் மூலம் வெளிப்படுத்தினார்.
கொலுகாவில் உள்ள இந்த தூண், உயர்தரமான ஒற்றை சிவப்பு கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இது 18.3மீ உயரமுள்ள மணி வடிவ மேடையின் மேல் நடப்பட்டுள்ளது. இந்த தூணின் உச்சியில் சிங்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
மிகவும் நேர்த்தியாகவும் மற்றும் இன்றளவிலும் சிறப்பாகவும் இந்த தூண் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்திற்குள் ராம்குந்த் என்றழைக்கப்படும் சிறிய குளம் ஒன்றும் உள்ளது.



Click it and Unblock the Notifications