Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » வாரணாசி » ஈர்க்கும் இடங்கள் » அஸ்ஸி படித்துறை

அஸ்ஸி படித்துறை, வாரணாசி

60

கங்கை நதியின் தெற்குக்கோடியில் அமைந்துள்ள அஸ்ஸி படித்துறை அயல்நாட்டு சுற்றுலாப்பயணிகள் மற்றும் ஆய்வாளர்களின் மனதிற்குகந்த இடமாக உள்ளது. முக்கியமாக இஸ்ரேலியர்கள் தங்கள் கட்டாய இராணுவப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் இங்கு அடிக்கடி வந்து செல்கின்றனர்.

அஸ்ஸி படித்துறை, அஸ்ஸி மற்றும் கங்கை நதிகள் சங்கமிக்கும் பகுதியில் அமைந்துள்ளது. புராணங்களின் படி, துர்கா தேவி, பயங்கர அசுரர்களான ஷும்பா-நிஷும்பாவை வதம் செய்த பின் இங்கு தன் வாளை தூக்கி எறிந்ததாகவும், அந்த பராக்கிரமம் மிகுந்த வாள் விழுந்த இடத்தில் ஒரு ஆறு உருவானதாகவும், அந்த ஆறே அஸ்ஸி ஆறு என்று வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த படித்துறையானது, மத்ஸிய புராணம், அக்னி புராணம், காஷி கந்த் மற்றும் பத்ம புராணம் போன்ற பல்வேறு முக்கிய புராணங்களில் மிகச் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கு, அரசமரத்தின் கீழ் அமைந்துள்ள ஒரு சிவலிங்கத்தையும், இரு நதிகளின் சங்கமத்தை ஆளும் கடவுளான அஸிசங்கமேஷ்வரருக்காக அமைக்கப்பட்டுள்ள ஒரு கோயிலையும் காணலாம். மேலும், பூமிக்கடியில் சுமார் 15 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ள புராதன குளமான லோலார்க்கா கந்த்தும் இங்கு உள்ளது.

அஸ்ஸி படித்துறை, விழா மாதங்களான காஹைத்யா (மார்ச்-ஏப்ரல்) மற்றும் மகம் (ஜனவரி மற்றும் பிப்ரவரி) ஆகியவற்றின் போது பெருந்திரளான யாத்ரீகர்களை கவர்ந்திழுக்கக்கூடியதாக விளங்குகிறது.  

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Aug,Tue
Check Out
19 Aug,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed