பஞ்சகங்கா படித்துறை, கங்கா, சரஸ்வதி, தூபபாப்பா, யமுனா மற்றும் கிர்னா ஆகிய ஐந்து புண்ணிய நதிகளும் சங்கமமாகும் இடத்தில் கட்டப்பட்டுள்ளதனாலேயே அவ்வாறு அழைக்கப்படுகின்றது.
இவற்றுள் கங்கை மட்டுமே தற்போது கண்களுக்கு புலப்படுகின்றது; மற்ற நான்கு நதிகளும் பூமிக்கடியில் மறைந்து விட்டதாக நம்பப்படுகின்றன. கங்கா படித்துறை ஏன் வாரணாசியின் மிகப் புனிதமான படித்துறைகளுள் ஒன்றாக இருக்கின்றது என்பதற்கு அதன் இந்த அமைப்பே கட்டியம் கூறுவதாக உள்ளது.
அதன் தனித்துவமான மற்றும் புனிதமான இட அமைப்பு தவிர்த்து, பஞ்சகங்கா படித்துறை மூன்று சரித்திர காரணங்களுக்காகவும் புகழ் பெற்று விளங்குகின்றது.
1. ராமாயண காவியம் படைத்த பெருமை வாய்க்கப்பெற்ற துறவியான துளசிதாஸ் அவர்கள் தன் புகழ் பெற்ற இலக்கியமான வினய்-பத்ரிகாஹெரேவை இங்கு தங்கியிருந்த காலத்தில் தான் இயற்றியுள்ளார்.
2. இங்கு தான் சிறந்த வேத விற்பன்னரான சுவாமி ராமானந்த் அவர்கள் தன் சீடர்களுக்கு பாடம் கற்று தந்துள்ளார்.
3. முகாலயரான ஔரங்கசீப், மராத்திய தளபதியான மெனி மதுர் ராவ் சிந்தியாவால் கட்டப்பட்ட புனிதமான ஒரு விஷ்ணு கோயிலைத் தகர்த்து அவ்விடத்தில் அலாம்கீர் மசூதியைக் கட்டியுள்ளார்.



Click it and Unblock the Notifications