Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » வாஸ்கோடகாமா » ஈர்க்கும் இடங்கள் » மர்ம கோவா கோட்டை

மர்ம கோவா கோட்டை, வாஸ்கோடகாமா

7

போர்த்துகீசியர்களால் 1624-ஆம் ஆண்டு,கடல் சார் தாக்குதல்களை சமாளிப்பதற்காக கட்டப்பட்ட மர்ம கோவா கோட்டை 6 மைல்களில் பரந்து விரிந்து பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. இந்தக் கோட்டை புகழ்பெற்ற ஸல்செட்டுக்கு வடமேற்கு திசையிலும், மார்கோ மற்றும் வாஸ்கோடகாமா நகரங்களுக்கு மிக அருகிலும் அமைந்திருக்கிறது.

வரலாற்று முக்கியத்துவம்

போர்த்துகீசியர்கள் தங்கள் கடல் எல்லையையும், மார்கோ துறைமுகத்தையும் எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் பொருட்டு மர்ம கோவா கோட்டையை கட்டியுள்ளனர். இக்கோட்டையின் நுழைவாயிலில் டோம் ஃபிரான்சிஸ்கோடகாமா, ராஜா டோம் பிலிப் போன்ற போர்துகீசியர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம்.

இந்த கல்வெட்டுக் குறிப்புகள் அன்றைய  வைஸ்ராயின் நினைவாக, கோட்டையின் திறப்பு விழாவின் போது செதுக்கப்பட்டுள்ளன. 1703-ஆம் ஆண்டு இந்தியாவின் அன்றைய போர்த்துகீசிய தலைநகரமாக இருந்த மார்கோ நகரத்துக்கு வந்தவர் இந்த வைஸ்ராய்.

மர்ம கோவா கோட்டையை கைப்பற்றுவதற்காக போர்த்துகீசியர்களை எதிர்த்து மராட்டியர்கள் பல முறை கடும் போர் செய்திருக்கின்றனர். இறுதியில் இந்தக் கோட்டை மராட்டியர்கள் வசம் சென்ற பின், பழைய கோவாவை மட்டும் போர்த்துகீசியகர்கள் தக்கவைத்து கொண்டனர்.

மர்ம கோவா கோட்டையில் உள்ள படைக்கலக் கொட்டில், 20 கொத்தளங்கள், 5 சிறை அறைகள், கோட்டைக் காவலர்கள் தங்குமிடம் மற்றும் தேவாலயம் என்று அனைத்தும் இன்றும் சிறந்த முறையிலே பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்தக் கோட்டையிலிருந்து கல்லெறியும் தூரத்திலேயே அமைந்திருக்கும் வர்கா பீச் மர பாரம்பரிய மீன்பிடி படகுகளுக்காக மிகவும் புகழ்பெற்றது.மர்ம கோவா கோட்டை வாஸ்கோடகாமா நகரிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதோடு, தபோலிம் விமான நிலையத்துக்கும் வெகு அருகில் உள்ளது. இதனால் பேருந்து, கார், பைக் என்று எந்த வாகனத்தின் மூலமும் சுலபமாக மர்ம கோவா கோட்டையை அடைந்து விடலாம். மேலும், இந்தக் கோட்டைக்கு சுற்றுலா வர கோடை காலமே சிறந்தது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 May,Sun
Return On
01 Jun,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 May,Sun
Check Out
01 Jun,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 May,Sun
Return On
01 Jun,Mon