வேலூர் மாவட்டத்தில் காட்பாடி தாலுக்காவில் இந்த மேட்டுக்குப்பம் எனும் சிறு கிராமம் அமைந்துள்ளது. மஹாமுத்துமாரியம்மன் கோயில் எனும் பிரசித்தமான கோயில் இவ்வூரில் உள்ளது.
இந்த அம்மனை ஒரு முறை தரிசித்தாலே எல்லாவித தோஷங்களும் விலகி வாழ்வில் சுபிட்சம் ஏற்படும் என்பதாக பக்தர்களிடையே நம்பிக்கை நிலவுகிறது. முத்துமாரியம்மன் கோயில் வளாகத்தில் மஹாகணபதி சன்னதி, பாலமுருகன் சன்னதி மற்றும் நவக்கிரக சிலைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இந்த ஆலயம் அமைந்திருக்கும் அமைதியான சூழலும் ஆன்மிக பிரகாசமும் சேர்ந்து இந்த ஸ்தலத்திற்கு ஒரு அற்புத சக்தியை தருகின்றன. இந்த கோயில் சித்தூர் - வேலூர் சாலையில் வேலூரிலிருந்து 7 கி.மீ தூரத்திலும், மேட்டுக்குளம் பழைய பேருந்துநிலையத்திலிருந்து 12 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications