முருகப்பெருமானுக்காக இந்த ரத்னகிரி கோயில் கட்டப்பட்டிருக்கிறது. புராதன கோயிலான இது வேலூரில் ஒரு மலையுச்சியில் அமைந்துள்ளது. பாலமுருகன் அடிமைகள் என்பவரால் எழுப்பப்பட்ட இந்த கோயில் ஸ்தலத்தில் ஒரு மருத்துவமனை மற்றும் பள்ளி ஆகியவையும் இயங்கி வருகின்றன.
இக்கோயிலின் ஆன்மீக சக்தியானது மூன்று ஆதாரங்களிலிருந்து ஒளிர்வதாக உள்ளூர் நம்பிக்கைகள் கூறுகின்றன. அதாவது, முருகப்பெருமானது அருள் முதலாவதாகவும், குரு ஸ்வாமி பாலமுருகன் அடிமை அவர்களது அருள் இரண்டாவதாகவும், முருகபக்தர்களின் பக்திவலிமை மூன்றாவதாகவும் இந்த தலத்தில் மையம் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இக்கோயிலுக்கு முருகனை தரிசிக்க விஜயம் செய்கின்றனர். காலை 6மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4மணி முதல் 8 மணி வரையும் பக்தர்கள் இக்கோயிலுக்கு விஜயம் செய்யலாம். காலை 6 மணி, 10.30 மணி மற்றும் 5.30 மணி போன்ற நேரங்களில் அபிஷேக சேவையும் நடத்தப்படுகிறது.



Click it and Unblock the Notifications