வேணூரில் பயணிகள் தவறாது பார்க்க வேண்டிய மற்றொரு அம்சம் கல்லு பஸாதி அல்லது தொட்ட பஸாதி எனும் கோயிலுக்கு வலப்புறத்தில் அமைந்துள்ள இந்த 24 தீர்த்தங்கர பஸாதி ஆகும். இந்த கோயிலின் வலப்பகுதியில் இது 1537ம் ஆண்டு கட்டப்பட்டது எனும் குறிப்பை கொண்டிருக்கும் கல்வெட்டைப்பார்க்கலாம்.மேலும் இங்கு கடகாசன கோலத்தில் (நின்ற நிலையில்) காணப்படும் 24 தீர்த்தங்கரர்களின் சிலைகள் வரிசையாக இருப்பதைக் காணலாம். இந்த தீர்த்தங்கரர் சிலைகளின் வலது புறம் சரஸ்வதியின் சிலையும் இடது புறம் பத்மாவதி சிலையும் காணப்படுகின்றன.
பத்மாவதி தேவி இங்கு அம்மனவாரு என்றும் ஜைன பக்தர்களால் அழைக்கப்படுகிறது. ஆகவே 24 தீர்த்தங்கர பஸாதி அம்மனவாரு பஸாதி என்றும் அறியப்படுகிறது.



Click it and Unblock the Notifications