பிண்ணனி பஸாதி வேணூரில் பயணிகள் பார்க்க வேண்டிய மற்றொரு கோயிலாகும். இது இங்குள்ள 16ம் தீர்த்தங்கர சாந்திநாதரின் வெண்கலச்சிலைக்கு பிரசித்தி பெற்றுள்ளது.
பிண்ணனி பஸாதி அல்லது பாலா பஸாதி என்றழைக்கப்படும் இந்தக்கோயில் அக்கங்களா பஸாதியின் எதிரில் உள்ளது. இது திம்மராஜாவின் இளைய ராணியான பிண்ணனி தேவியால் கட்டப்பட்டுள்ளது.
இந்த ஸ்தலத்தில் பயணிகள் இந்த கோயிலுக்கு வழங்கப்பட்ட கொடைகள் சருகீர்த்தி ஸ்வாமிகளின் ஆசீர்வாதம் போன்றவை குறித்த கல்வெட்டு குறிப்புகளை பார்க்கலாம். பிரம்மாவுக்கான கோபுரம் ஒன்றையும் இந்த கோயிலின் தென்பகுதியில் பயணிகள் காணலாம்.



Click it and Unblock the Notifications