வேணூருக்கு வருகை தரும்போது பயணிகள் பார்க்க வேண்டிய சுற்றுலா அம்சம் இந்த கோமதேஸ்வரா சிலை ஆகும். இது திம்மண்ண அஜிலா மன்னரால் 1604ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ளது.
இந்த ஒற்றைக்கல் சிலை பிரசித்திபெற்ற அமரஷில்பி ஜகன்னாச்சாரியால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. பல்குனி ஆற்றின் கரையில் இந்த கோமதேஸ்வர பஹவான் சிலை எழுப்பப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள நான்கு பஹுபாலி சிலைகளில் இது அளவில் சிறியதாக 35 அடி உயரத்தில் காணப்படுகிறது (மற்ற மூன்று சிலைகள் கர்கலா, தர்மஸ்தாலா, சிரவணபெலகொலா போன்ற இடங்களில் அமைந்துள்ளன).
இந்த வேணூர் பஹுபாலி சிலையின் சிறப்பம்சம் இது பிடிமான கட்டமைப்பு எதுவுமே இல்லாமல் ஒரு உயரமான மேடைமீது அப்படியே நிறுத்தப்பட்டுள்ளது என்பதாகும்.



Click it and Unblock the Notifications