பஜ்ராமத் கோயில் விதிஷாவில் உள்ள ஜெய்ராஸ்பூரின் மற்றுமொறு அரிதான மற்றும் பழமையான கோயில். மூன்று சன்னதிகளை கொண்ட இக்கோவிலில் டிகம்பரா ஜெயின் சிலைகள் உள்ளன.
இந்து இலக்கணங்களை காட்டுவதற்காக கட்டப்பட்ட இக்கோவில் பிற்காலத்தில் டிகம்பராவின் ஜெயின் இலக்கணத்தை காட்டுவதாக அமைந்திருக்கின்றது என்று நம்பப்படுகின்றது.
இந்த கோவிலின் வடக்கு பகுதியில் சிவனையும், நடுவில் பிரம்மனையும் தென் திசையில் விஷ்ணுவையும் தரிசிக்கலாம். நுழைவாயிலில் காணப்படும் 10-ம் நூற்றாண்டின் சிற்பங்கள் கண்ணை கவரும். இங்கு ஷிக்காராவையும் பாரம்பரிய வடிவமைப்பையும் காண கண்டிப்பாக செல்ல வேண்டும்.