விஷ்ணுவின் பத்து அவதாரங்களை எடுத்துரைக்கும் சிரிய சிரிய கோவில்களை உள்ளடக்கிய இடம்தான் தசாவதார் கோவில்கள். உள்ளூரில் இதை சதா அவதாரக் கோவில் என்றும் கூறுகின்றனர்.
விதிஷாவின் அருகிலுள்ள குர்நர் பகுதியின் படோக் என்ற இடத்திலுள்ளா ஏரிக் கரையில் இக்கோவில் கம்பீரமாக வீற்றிருக்கின்றது. 8 மற்றும் 10-ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட இக்கோவில்கள் பல தூண்களை கொண்டுள்ளது.
அதில் ஒரு தூணில் நான்கு ஓரங்களிலும் ஹர கவுரி அமர்ந்த நிலையில், நாட்டியகாரர்கள் சூழ, இசை கலைஞர்களுடன் அழகுடன் காட்சி தருவதாக செதுக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள ஒரு ஆண் சிற்பம் கைகளை கூப்பி பக்தியுடன் இருப்பது போன்று செதுக்கப்பட்டு காண்பவரை கவர்ந்து வருகின்றது.



Click it and Unblock the Notifications