விஜயவாடா நகரத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் கண்ணவரம் விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து விசாகப்பட்டிணம் மற்றும் ஹைதராபாத் நகரங்களுக்கு விமான சேவைகள் உள்ளன. ஹைதராபாத்திலிருந்து பயணிகள் இணைப்புச்சேவைகளை மற்ற பெருநகரங்களுக்கும், வெளிநாட்டு நகரங்களுக்கு தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இந்த விமான நிலையத்திலிருந்து விஜயவாடா நகரத்துக்குள்ளே வருவதற்கு டாக்சி வசதிகள் உள்ளன.