விராட் நகரில் உள்ள பீஜக் கி பஹாரி என்ற குன்றில் நீங்கள் இரண்டு தொன்மையான புத்த மடாலயங்களின் மிச்சங்களை பார்க்கலாம். ஆனால் ஹுவான் சுவாங் கி.பி 634-ஆம் ஆண்டில் விராட் நகருக்கு வந்த போது இந்தக் குன்றில் மொத்தம் எட்டு மடலாயங்கள் இருந்ததாக நம்பப்படுகிறது.
இங்கு உள்ள ஒரு கோயிலின் கீழ்தளத்தின் மையப்பகுதியில் வட்ட வடிவிலான கூடம் ஒன்று உள்ளது. இந்த அமைப்பே மிகவும் பழமையானதாக கருதப்படுகிறது. அதோடு இதன் மேல்தளம் கீழ்தளத்தை விட 30 அடி உயரமானது.
மேலும் இந்தக் கோயிலின் வெளிப்புறச் சுவர்களில் புத்த கல்வெட்டுகள், பிராமி மொழியில் பொறிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் இங்கு உள்ள பெரிய கருங்கல் பாறை ஒன்றில் அசோகரின் அரசாணைகள் பொரிக்கப்பட்டுள்ளதையும் நீங்கள் பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications