விராட் நகரில் அமைந்திருக்கும் பீம் கி துங்கரி, புராண கதைகளின் பின்னணியால் புகழ் பெற்று விளங்கும் மிகப்பரிய குகையாகும். அதாவது மகாபாரதத்தில் கூறியிருப்பது போல கௌரவர்களிடம் யாவற்றையும் இழந்த பாண்டவர்கள் 13 வருட வன வாசமும், 1 வருட அஞ்ஞான வாசமும் அனுபவிக்க வேண்டும் என்று நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
அதன் பிறகு 13 வருட வன வாசத்தை அனுபவித்த பாண்டவர்கள், கடைசியாக 1 வருட அஞ்ஞான வாசத்தை விராட் நகரில்தான் கழித்ததாக சொல்லப்படுகிறது. அந்த ஒரு வருட அஞ்ஞான வாசத்தில் பீமன் மட்டும் இந்த குகையில் இருந்து கொண்டு விராட் நகர் அரண்மனையின் தலைமை சமையல்காரனாக பணியாற்றி வந்ததாக புராணச் செய்திகள் தெரிவிக்கின்றன.



Click it and Unblock the Notifications