Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » விசாகப்பட்டினம் » ஈர்க்கும் இடங்கள் » ராமகிருஷ்ணா பீச்

ராமகிருஷ்ணா பீச், விசாகப்பட்டினம்

29

இந்தியாவின் கிழக்குக்கடற்கரையில் அமைந்திருக்கும் இந்த ராமகிருஷ்ணா பீச் விசாகப்பட்டணம் நகரத்தின் முக்கியமான கடற்கரைகளுள் ஒன்றாகும். வங்காளவிரிகுடாவை ஒட்டியுள்ள கடற்கரையான இது ரம்மியமான சூரிய உதயம் மற்றும் சிவந்த அடிவானத்துடன் காட்சியளிக்கும் அஸ்தமனம் ஆகியவற்றுக்கு புகழ் பெற்று விளங்குகிறது. இதன் சகோதர கடற்கரையான ‘லாசன் பே’ எனும் கடற்கரையும் அற்புதமான எழிற்சூழல் மற்றும் இயற்கைக்காட்சிகளுடன் வீற்றுள்ளது.

ராமகிருஷ்ணா பீச் மிகப்பெரிய பரப்பை கொண்ட கடற்கரைப்பகுதியாக காட்சியளிக்கிறது. இந்த கடற்கரைக்கு வெகு அருகிலேயே காளி கோயில், வடு பார்க், சம்மெரீன் மியூசியம், மத்ஸ்யதர்ஷிணி மற்றும் வார் மெமோரியல் போன்ற முக்கியமான சுற்றுலா அம்சங்களும் அமைந்துள்ளன.

இவற்றில் வார் மெமோரியல் எனும் நினைவுச்சின்னமானது 1971ம் ஆண்டில் இந்திய-பாகிஸ்தான் போரில் பங்கேற்ற வீரர்களை கௌரவிக்கும் விதமாக கடற்கரையோரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

மேலும், ராமகிருஷ்ணா பீச் கடற்கரையில் பல நீர் விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு வம்சங்களும் நிறைந்துள்ளன. அலைச்சறுக்கு மற்றும் காற்றுச் சறுக்கு விளையாட்டுகள், ஆழ்கடல் தூண்டில் மீன் பிடிப்பு போன்றவற்றில் இங்கு சாகசப்பயணிகள் ஈடுபடலாம்.

இந்த கடற்கரையில் பயணிகள் சூரியக்குளியலில் ஈடுபடவும் அனுமதிக்கப்படுகிறது. இப்படி பல விரும்பத்தக்க அம்சங்களால் இந்த ராமகிருஷ்ணா பீச் சுற்றுலாப்பயணிகளிடையே பிரசித்தமாக அறியப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Jul,Wed
Return On
30 Jul,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Jul,Wed
Check Out
30 Jul,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Jul,Wed
Return On
30 Jul,Thu