விருந்தாவன் நகரத்தில் திராவிட கோயிற்கலை பாணியில் அமைந்துள்ள கோயில் இந்த ரங்க்ஜி கோயில் ஆகும். ல்1851ம் வருடம் கட்டப்பட்டுள்ள இந்த கோயிலில் ரங்க்ஜி என்று வணங்கப்படும் ஸ்ரீ ரங்கநாதர் வீற்றுள்ளார்.
உயர்ந்த மதிற்சுவர்கள், ஐம்பது அடி உயர துவஜஸ்தம்பம் மற்றும் ஒரு கம்பீரமான முகப்பு ஆகியவற்றை இக்கோயில் கொண்டுள்ளது. இக்கோயிலின் கட்டுமானத்தில் சில முக்கிய அமைப்புக்க்கு மதுரா நகரத்தை சேர்ந்த சேத் குடும்பத்தார் கொடையளித்துள்ளனர்.
விருந்தாவன் நகரத்தில் விஷ்ணுவுக்காக அமைக்கப்பட்டுள்ள ஒரே பெரிய கோயில் இந்த ரங்க்ஜி கோயில் ஆகும். விஷ்ணுவின் அவதாரமே ரங்கநாதர் என்று சொல்லத்தேவையில்லை. பிரம்மோத்சவ திருநாளின்போது இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.



Click it and Unblock the Notifications