Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » வோக்கா » வானிலை

வோக்கா வானிலை

சுற்றுப்புறப் பகுதிகளை நன்கு சுற்றிப் பார்க்கக்கூடிய வகையில் நாள் முழுக்க இதமான வானிலை நிலவும் கோடைகாலமே வோக்கா செல்வதற்கு உகந்த காலகட்டமாகும்.  

கோடைகாலம்

கோடைகால மாதங்களான மார்ச் முதல் மே வரை வோக்கா, ரம்மியமான வானிலையுடன் சராசரியாக 20 டிகிரி செல்சியஸ் மற்றும் 30 டிகிரி செல்சியஸுக்கு இடைப்பட்ட வெப்பநிலையைக் கொண்டு காணப்படுகிறது. இக்காலத்தில் இங்கு அவ்வப்போது மழைப்பொழிவும் இருக்கும். மலை அடிவாரத்தைக் காட்டிலும் மலை மேல் குளிர்ச்சியாக இருக்கும்.

மழைக்காலம்

மழைக்காலம் நாகலாந்தின் பிற பகுதிகளைக் காட்டிலும் வோக்காவில், பிரவாகமெடுத்து ஓடக்கூடிய அளவில் மழை பொழிந்து, விஸ்தாரமாக ஜூன் முதல் அக்டோபர் வரை நீடிக்கின்றது. மாநிலத்தின் இப்பகுதியில் ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்ச மழைப்பொழிவுடன் ஆலங்கட்டி மழையும் சர்வசாதாரணமாக பொழிவதைக் காணலாம். இதனால் வோக்காவின் கீழ்ப்புறப்பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கும் அவ்வப்போது உண்டாகும். 

குளிர்காலம்

குளிர்காலங்களின் போது வோக்கா கடுங்குளிருடன் காணப்படும். நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை நீடிக்கும் இக்காலட்டத்தில், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய மாதங்கள், வருடத்தின் மிகக் குளிர்ச்சியான மாதங்களாக, இரவு நேரங்களில் சுமார் 5 டிகிரி செல்சியஸ் வரை குறைந்த வெப்பநிலையுடைய மாதங்களாகத் திகழ்கின்றன. சூரிய அஸ்தமனத்திற்குப் பின் குளிர்காற்று வீசுவதையும் நீங்கள் உணரலாம்.