Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » யமுனா நகர் » ஈர்க்கும் இடங்கள் » சவுதாரி தேவி லால் இயற்கை மூலிகை பூங்கா

சவுதாரி தேவி லால் இயற்கை மூலிகை பூங்கா, யமுனா நகர்

6

யமுனா நகரில் உள்ள ச்ஹுஹர்பூர் என்கிற கிராமத்தின் அருகே சவுதாரி தேவி லால்  இயற்கை மூலிகை  பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் மருத்துவ குணம் உள்ள  தாவரங்கள் சிறப்பான முறையில் பாதுகாக்கப்பட்டு செழிப்பாக வளர்க்கப்படுகின்றன.

மேலும் இது ஒரு புகழ்பெற்ற ஆராய்ச்சி மையம் ஆகும். இந்த மூலிகைப் பூங்கா 2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்  6 ம் தேதி உருவாக்கப்பட்டது.

இந்த  சவுதாரி மூலிகை பூங்காவில் உலகின் பல பகுதிகளில் காணப்படும் மருத்துவ குணம் மிகுந்த  தாவரங்கள் மற்றும் மூலிகைகள் வளர்க்கப்படுகின்றன.  இந்த இயற்கை மூலிகைப் பூங்கா ஹரியானா மாநிலத்தில் இமயமலை அருகில் உள்ள ஷிவாலிக் மலைத்தொடர்களின் அருகே அமைந்துள்ளது.

இந்தப் பூங்காவில் சுமார் 300க்கும் மேற்பட்ட மருத்துவ மரங்கள், மூலிகைகள், புதர்கள், கொடிகள் மற்றும் நீர்வாழ் தாவரங்கள் போன்றவை வளர்க்கப்படுகின்றன. சவுதாரி தேவி லால்  இயற்கை மூலிகை பூங்கா சுமார் 184 ஏக்கர் அளவிற்கு பரந்து விரிந்துள்ளது.

உள்ளூர் மருத்துவ மற்றும் நறுமண தாவரங்களின் மருத்துவ பயன்பாடுகளை மக்களுக்கு பரப்பும் நோக்கத்தில் இந்த இயற்கை மூலிகை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு க்ஹைர், தேக்கு, ஸ்ஹிஸ்ஹம், மற்றும் ஸிம்பால் போன்ற மரம் மற்றும் செடிகளுடன்,  அஸ்வகந்தா, ஸஃபெட் முஸ்லி, சர்பகந்தா, வச்ஹ், பிராஹ்மி, சித்ராக், இஸப்கோல் போன்ற ஆயுர்வேத மருந்துகளும் காணப்படுகின்றன.

மேலும் இங்கு துளசி, பிப்பலி, மகோய், பூமி அமலகி, பஹெரி, கெளர்பதா, ஹராட், அம்லா, பஎல், கலிஹரி, மஞ்சள், எலுமிச்சை புல், அதிமதுரம், சற்றுறோ மற்றும் பல்மரொஸ போன்ற இயற்கை மூலிகைகளும் காணப்படுகின்றன.

இந்த சவுதாரி தேவி லால் இயற்கை மூலிகை பூங்காவில்  பார்வையாளர்கள் மூலிகைகளைப் பற்றி  எளிதாக தெரிந்து கொள்வதற்காக அறிவுப்புப் பலகைகள் அந்த மூலிகைகளுடன் வைக்கப்பட்டுள்ளன.

இந்த அறிவிப்புகளை படித்து பார்க்கும் சுற்றுலா பயணிகள் மூலிகைகளைப் பற்றிய தங்களுடைய அடிப்படை அறிவுகளை வளர்த்துக் கொள்வார்கள். கூடுதலாக, இந்த இயற்கை பூங்காவில் ஒரு தகவல் மையம், ஒரு சிறுவர் பூங்கா மற்றும் மூங்கில் குடிசை போன்றவைகள் உள்ளன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Sep,Thu
Return On
11 Sep,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Sep,Thu
Check Out
11 Sep,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Sep,Thu
Return On
11 Sep,Fri